Sunday, June 23, 2019

ஒண்ணுமில்லே ச்சும்மா! ஜாலிக்கு ஒரு பழைய பட விமரிசனம்!

1964 இல் ராஜ்கபூர், ராஜேந்திர குமார், வைஜயந்தி மாலா நடித்து வெளிவந்த படம் சங்கம் வழக்கமான முக்கோணக் காதல் கதைதான்! ஆனால் கொஞ்சம் வித்தியாசமான க்ளைமாக்ஸ், வசனம்  என்பதோடு ஷங்கர் ஜெய்கிஷன் இசையமைப்பில் அத்தனை பாடல்களும் ஹிட்டான படம்.



பள்ளிமாணவனாக இருந்த நாட்களில் இந்தப்படத்தின் பாடல்களைக் விரும்பிக் கேட்டதோடு மொழி தெரியாதபோதே மதுரை சென்ட்ரல் தியேட்டரில் படத்தையும் பார்த்ததாக நினைவு! தியேட்டர் வேறாகக் கூட இருக்கலாம். 



சுந்தர் (ராஜ் கபூர் ) கோபால் (ராஜேந்திர குமார் ) இருவரும் நண்பர்கள். சினிமா இலக்கணப்படி சுந்தர் கொஞ்சம் வசதிக் குறைச்சலானவன் கோபால் பணம்படைத்தவன். இருவருமே ஒரே பெண்ணைக் காதலிக்கிறார்கள் ராதா(வைஜயந்தி மாலா) என்கிற    அந்தப்பெண்ணுக்கோ கோபால் மீது காதல்!  கோபாலின் பொருட்டு ராதா சுந்தரின் காதல் அப்ரோச்சை சகித்துக் கொள்கிறாள்!  என்ன  வழக்கமான முக்கோணம் தானே என்று தள்ளிவிடமுடியாதபடி கோபால் தன்னுடைய காதலை விட சுந்தருடைய நண்பனாக இருப்பதையே முக்கியமானதாக நினைக்கிறான்.


ராதா மனதைக்கவருவதற்காக சுந்தர் விமானப்படையில் பைலட்டாகச் சேருகிறான்.யுத்தத்தில் ஹீரோவாக, மரணம் அடைந்துவிட்டதாகக் கருதப்படுகிற நிலையில் ராதா கோபால் நெருக்கம் அதிகமாகிறது.

இறந்துபோய்விட்டதாக நினைத்துக்கொள்ளப்பட்ட சுந்தர் விமானப்படை சீருடை மெடல்களோடு திரும்ப வந்து நிற்கையில் முக்கோணம் மறுபடியும் முன்னே வந்து நிற்கிறது. கோபால் நண்பனுக்காக ராதாவை தியாக சிகரமாக  விட்டுக் கொடுக்கிறான்.

கதை முடிந்தது என்றுதானே நினைக்கிறீர்கள்? மூன்றரை மணி நேரப்படத்தில் முக்கோண முடிச்சு அவ்வளவு எளிதாக அவிழ்ந்து விடுமா என்ன?!  

அப்படி கதை முடிச்சு அவிழ்க்கப்படுவதில் தான் இன்றைக்கு 2019 இலும் கூடப் பார்க்க முடிகிற சிறந்த படமாக சங்கம் இருக்கிறது. 

ராதா தன்னுடைய உணர்வுகளுக்கு கொஞ்சமும் மதிப்புக் கொடுக்காமல், ஏதோ ஒரு பொருளைக் கைமாற்றுவதை போல கோபால் தன்னை சுந்தரிடம் தள்ளிவிடுவதை ஏற்க மறுக்கிறாள். நண்பர்கள்  இருவரையும் விடத் தெளிவாக முடிவெடுத்து சுந்தரின் மனைவியாகவே  ஆகிவிடுகிறாள்.

  
ஐரோப்பாவுக்கு ஹனிமூன் போகிற இடத்தில் சுந்தர் கொஞ்சம் கவர்ச்சிகரமான நடனம் பார்க்க ஆசைப்படுவதைத் தடுக்கிற ராதா, தானே அறையில் கவர்ச்சியாக ஆடி சுந்தரை வியக்க வைக்கிறாள். அந்த நாகரீகப்பெண்கள் வெர்சஸ் குடும்பக் குத்துவிளக்கு என்கிற சுந்தரை  நன்றாகவே நையாண்டி செய்கிறாள். கதை     இப்படியே நல்லாவே போயிட்டிருந்தா எப்படி சாமி கதையில் ட்விஸ்ட் வரும்? 

ட்விஸ்ட்டும் வருது! கல்யாணத்துக்கு முன்னால் ராதாவும் கோபாலும் நெருக்கமாக இருந்தது சுந்தருக்குத் தெரிய வருகிறது. இப்போது மனைவி /காதலியைத் தியாகம் செய்ய வேண்டிய முறை சுந்தருக்கு! ஆக இந்தக் கதையில் ஆண்கள் இருவருக்குமே பெண் என்ன நினைக்கிறாள் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலையில்லை! தியாக சிகரங்களாகத் துடிக்கும் இருவருக்கிடையில் சிக்கிக் கொண்ட   பெண் என்ன செய்வாள்? 

தமிழ்ப்படமாக இருந்தால் பக்கம் பக்கமாக வசனம் பேசியே நம் கழுத்தில் தீட்டியிருப்பார்கள். இங்கே கொஞ்சம் அளவாக!  

கங்கையும் யமுனையும் சங்கமிக்க வேண்டுமானால் மூன்றாவது நதியான சரஸ்வதி கண்ணுக்குத் தெரியாமல்  அடிநீரோட்டமாக மறைந்து விடவேண்டுமென்று சொல்லிவிட்டு கோபால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்துபோகிறான்.

ஆக ராதா சுந்தர் இருவரும் சங்கமிக்கிறார்கள் என்று End Card போட்டுப் படத்தை முடிக்கிறார்கள். மூன்றரை மணிநேரம் என்று கொஞ்சம் கூட அலுப்புத்தட்டாமல் படம் போகிறது!

அது போதாதா?  
          

5 comments:

  1. சங்கம் கதை தெரிந்துகொண்டேன். ஓரிரு பாடல்களை ரசித்திருக்கிறேன். நண்பன் சுட்டுக்கொண்டு இறந்ததும் விற்கள் சந்தோஷமாக "அப்பாடா.. பிரச்னை தீர்ந்தது..." என்று வாழ்வைத் தொடர்கிறார்களாக்கும்!

    ReplyDelete
    Replies
    1. அப்படிச் சொல்ல முடியாது ஸ்ரீராம்! கதாநாயகிதான் தெளிவாக முடிவெடுத்து சுந்தரைக் கல்யாணம் செய்து கொண்டு வாழவும் ஆரம்பித்து விடுகிறாளே! இப்போது புதிய தியாகசிகரமாக மாற விரும்பும் கணவன், முன்னாடி ஆசைப்பட்டவன் இரண்டு பேருக்கு மத்தியில் மறுபடியும் குறுக்கே வராமல் பின்னவன் தன்னை மாய்த்துக் கொள்கிறான்! இதற்கு கங்கா யமுனா சரஸ்வதி என்று திரிவேணி சங்க(ம்)மமாக பன்ச் டயலாக் சொல்லி முடிக்கிறார்கள் பாருங்கள், அங்கே இருக்கிறது க்ளாஸிக் டச்! :-))))

      Delete
  2. I saw the film in 1966 at Karaikudi. Then in 1970 at pudukkottai. Now also I like that picture. Beautiful locations, songs, good actors, different camera angles, good screen play. AS you mentioned, the change of mind of heroine was clearly shown in first night scene. Still I remember kumudam review. Almost in same lines Sridhar directed one film. nenchirukkum varai. it was a failure.

    ReplyDelete
    Replies
    1. நெஞ்சிருக்கும் வரை கதைக்கும் சங்கம் படத்துக்கும் முக்கோணக்காதல் என்பதைத்தவிர வேறு சம்பந்தமே இல்லையே திரு. கோபால்சாமி!

      Delete
  3. just my opinion. Raj Kapoor's part is given to Sivaji. Just ulta. Here lovers got married. Doubting wife. Friend commits suicide. By this way I compared.

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)