பெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவருடமாகத் தங்கியிருக்கும் செய்தி வெளியானபிறகு கர்நாடக முதல்வர் குமாரசாமி கொஞ்சம் உஷாராகி, கட்டாந்தரையிலும் படுப்பேன், கிராமத்துக் குடிசையிலும் இருப்பேன் என்றெல்லாம் பன்ச் டயலாக் பேசி, தரையில் கையையே தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு படுத்திருக்கிற போட்டோ எல்லாம் போட்டார். சதீஷ் ஆசார்யாவின் கார்டூன் இது!
ஆனால் பன்ச் டயலாக் பேசமுடியாமல் தன்னிடம் முறையிட வரும் ஜனங்களிடம் மோடிக்குத்தானே ஓட்டுப்போட்டீங்க எதுக்கு எங்கிட்ட வர்றீங்க என்ற ரேஞ்சில் பேசுகிறார் என்று சொல்கிறார்கள். இரண்டாவது முறையாக கிராமத்துக்கு விஜயம் செய்யப்போகையில் காத்திருந்த ஜனங்கள் சாலையை மறித்ததும் குமாரசாமி கோபமும்! இன்றைக்கு நடந்த கூத்தும் செய்தியும் நாடாளுமன்றத் தேர்தலில் குமாரசாமி மகனும் ஜெயிக்கவில்லை, தேவே கவுடாவும் ஜெயிக்கவில்லை என்ற கோபம் இன்னமும் ஆறவில்லை போல! இது அடுத்தவீடு கர்நாடகா செய்தி என்றால் நம்மூர் செய்தி, நையாண்டி ஒன்றும் கூடவே வேண்டாமோ?
மதுரை வைகை பெரிய பாலத்துக்கு வண்ணம் தீட்டுகிறார்கள்! இது செய்தி! திமுகவுக்கு மோடியைக் கண்டாலும் பயம் காவி நிறத்தைக் கண்டாலும் பயம்! எப்படி?
முதலில் கூட்டுக்களவாணி காங்கிரசுக்கல்லவா மூவர்ணக்கொடியைப் பயன்படுத்தக்கூடாதென்று சொல்ல வேண்டும் ? !! காவி மீதுள்ள பயத்தில் மேல்பகுதிக்குப் பச்சை வண்ணம் தீட்டப்படுவதை மறந்ததற்கு என்ன சால்ஜாப்பு சொல்வார்களோ, அறியேன்! அதனால் ஒரு நையாண்டி!
துக்ளக் அட்டைப்பட நையாண்டிக்குத் தனியாக விமரிசனம், வியாக்கியானமெல்லாம் எதற்கு?😀
அடுத்த வீடு ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஒழித்துக் கட்டுவதில் ஜெகன் மோகன் ரெட்டி பிசியாக இருக்கிற அதே வேளையில் மத்தியில் ஆளும் பிஜேபியோடு மோதாமல் ஒரு மாதிரி நீக்குப்போக்காக இருப்பதே ஜெகன் தலைக்குத் தீம்பாகி விடலாம் என்று எச்சரிக்கிறார்கள் இங்கே!
Andhra Pradesh CM Jagan Mohan Reddy is playing nice with the BJP, which is the ruling party at the Centre. He has promised to support BJP’s one nation, one election bid in return for Special Category Status for Andhra, and has generally gone soft against the party, say analysts. He is also an amused spectator as the BJP is on a poaching spree from his main rival in the state, Chandrababu Naidu’s TDP. However, letting the BJP strengthen its roots in the state at the cost of TDP will ultimately affect Jagan’s YSRCP, say experts.
Noted columnist and political scientist professor K Nageswara Rao observes, “Jagan shouldn’t take the bait and play along with the BJP and commit the blunder of weakening the TDP.” என்று சந்திரபாபு நாயுடுவை விட்டுவைக்கும்படி சொல்கிறார்கள். ஜெகன் காதில் வாங்கி கொள்ள வேண்டுமே!
பக்கத்து வீடு கேரளா செய்தி என்னவாம்?
சபரிமலை பிரச்னையே தோல்விக்கு காரணம்: மார்க்சிஸ்ட் விளக்கம்
தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, சபரிமலை பிரச்னையால் தான் கட்சி தோல்வியடைந்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
சகாவே! மத்திய கமிட்டி சொல்லியாச்சுன்னா அதோட விட்டுடணும்! நோண்டி ஆராய எல்லாம் கூடாது!
மீண்டும் சந்திப்போம்.
ஜெமோ ரெட்டி ஒரே நாளில் அந்தக் கட்டிடத்தை இடித்துத் தள்ளியதிலேயே சந்திரபாபு மீதான அவர் வன்மம் தெரிந்தது. இன்னும் என்னென்ன நடக்குமோ...
ReplyDeleteசந்திரபாபு நாயுடு ஒன்றும் குறைந்தவரில்லை ஸ்ரீராம்! இந்தத் தேர்தலுக்கு முன்பாக ஜெகனுடைய சகோஹரி ஷர்மிளாவையும் ஒரு சினிமா நடிகரையும் இணைத்துக் கொளுத்திப்போட்டது உட்பட ராஜசேகர ரெட்டி குடும்பத்துக்கும் நாயுடுவுக்கும் இருந்த பகையைப் பற்றி யாத்ரா திரைப்பட விமரிசனத்திலேயே கொஞ்சம் றழுதியிருக்கிறேன்.
Deleteசபரிமலை விவகாரமா? அதைதான் தேர்தல் ஆணையம் பேசவே கூடாது என்று சொல்லியிருந்ததே....
ReplyDeleteசபரிமலை விவகாரத்தில் அந்த இரண்டுபெண்களைப் போலீஸ் பாதுகாப்புடன் பதினெட்டுப்படியேறி ஐயப்பனை தரிசிக்க வைத்ததில் பிணராயி விஜயன் அரசு காட்டிய கெடுபிடியை ஜனங்கள் மறந்து விடுவார்களா என்ன? கம்யூனிஸ்ட் கட்சியும் தோல்விக்கான காரணமாக அதைத்தான் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறது.
Deleteபழனிவேல் தியாகராஜனுக்கு வேற வேலை இல்லை. இந்த மாதிரி வெட்டிகள்னாலதான் தமிழகம் எப்போதும் பின்னோக்கிப் போகுது.
ReplyDeleteசபரிமலை விவகாரம் முக்கியக் காரணம்தான். அதனால்தான் பாஜக வாக்கு 10%லிருந்து 15க்கு உயர்ந்தது. அடுத்த முறை இன்னும் அதிகமாகும்.
ஜெ.மோ.ரெட்டிகாரு, துக்ளக் ஆட்சி நடத்த முயல்வார் என்று எதிர்பார்க்கலாம்.
வெட்டி அரசியல் செய்வது பழனிவேல் ராஜன் மட்டும்தானா? தமிழகத்தில் கழகங்கள் இப்படி வெற்று வேட்டு அரசியல் செய்வதைத்தானே கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாகவும் செய்து கொண்டிருக்கின்றன? :(((
Deleteடோளர்கள் பாவம்! தோற்றதற்கு ஏதாவது நொண்டிச்சாக்கைச் சொல்லித்தானே ஆகவேண்டும்!
ஜெகன் மோகன் ரெட்டி இதேமாதிரி ரொம்பநாள் வண்டி ஓட்டமுடியாது. என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்!