Wednesday, June 26, 2019

தென்னிந்திய அரசியல் நிலவரம் இன்று!

பெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவருடமாகத் தங்கியிருக்கும் செய்தி வெளியானபிறகு கர்நாடக முதல்வர் குமாரசாமி கொஞ்சம் உஷாராகி,  கட்டாந்தரையிலும் படுப்பேன், கிராமத்துக் குடிசையிலும் இருப்பேன் என்றெல்லாம் பன்ச் டயலாக் பேசி, தரையில் கையையே தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு படுத்திருக்கிற போட்டோ எல்லாம் போட்டார். சதீஷ் ஆசார்யாவின் கார்டூன் இது!


ஆனால் பன்ச் டயலாக் பேசமுடியாமல் தன்னிடம் முறையிட வரும் ஜனங்களிடம் மோடிக்குத்தானே ஓட்டுப்போட்டீங்க எதுக்கு எங்கிட்ட வர்றீங்க என்ற ரேஞ்சில் பேசுகிறார் என்று சொல்கிறார்கள். இரண்டாவது முறையாக கிராமத்துக்கு விஜயம் செய்யப்போகையில் காத்திருந்த ஜனங்கள் சாலையை மறித்ததும் குமாரசாமி கோபமும்!  இன்றைக்கு நடந்த கூத்தும் செய்தியும்  நாடாளுமன்றத் தேர்தலில் குமாரசாமி மகனும் ஜெயிக்கவில்லை, தேவே கவுடாவும் ஜெயிக்கவில்லை என்ற கோபம் இன்னமும் ஆறவில்லை போல! இது அடுத்தவீடு கர்நாடகா செய்தி என்றால் நம்மூர் செய்தி, நையாண்டி ஒன்றும்  கூடவே வேண்டாமோ? 


மதுரை வைகை பெரிய பாலத்துக்கு வண்ணம் தீட்டுகிறார்கள்! இது செய்தி! திமுகவுக்கு மோடியைக் கண்டாலும் பயம் காவி நிறத்தைக் கண்டாலும் பயம்! எப்படி?


முதலில் கூட்டுக்களவாணி காங்கிரசுக்கல்லவா மூவர்ணக்கொடியைப் பயன்படுத்தக்கூடாதென்று சொல்ல வேண்டும் ? !!  காவி மீதுள்ள பயத்தில் மேல்பகுதிக்குப் பச்சை வண்ணம் தீட்டப்படுவதை மறந்ததற்கு  என்ன சால்ஜாப்பு சொல்வார்களோ, அறியேன்! அதனால் ஒரு நையாண்டி!
      

துக்ளக் அட்டைப்பட நையாண்டிக்குத் தனியாக விமரிசனம், வியாக்கியானமெல்லாம் எதற்கு?😀 

அடுத்த வீடு ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஒழித்துக் கட்டுவதில் ஜெகன் மோகன் ரெட்டி பிசியாக இருக்கிற அதே வேளையில் மத்தியில் ஆளும் பிஜேபியோடு மோதாமல் ஒரு மாதிரி நீக்குப்போக்காக இருப்பதே ஜெகன் தலைக்குத் தீம்பாகி விடலாம் என்று எச்சரிக்கிறார்கள் இங்கே!


Andhra Pradesh CM Jagan Mohan Reddy is playing nice with the BJP, which is the ruling party at the Centre. He has promised to support BJP’s one nation, one election bid in return for Special Category Status for Andhra, and has generally gone soft against the party, say analysts. He is also an amused spectator as the BJP is on a poaching spree from his main rival in the state, Chandrababu Naidu’s TDP. However, letting the BJP strengthen its roots in the state at the cost of TDP will ultimately affect Jagan’s YSRCP, say experts.
Noted columnist and political scientist professor K Nageswara Rao observes, “Jagan shouldn’t take the bait and play along with the BJP and commit the blunder of weakening the TDP.” என்று சந்திரபாபு நாயுடுவை விட்டுவைக்கும்படி சொல்கிறார்கள். ஜெகன் காதில் வாங்கி கொள்ள வேண்டுமே!   

பக்கத்து வீடு கேரளா செய்தி என்னவாம்?


     

சபரிமலை பிரச்னையே தோல்விக்கு காரணம்: மார்க்சிஸ்ட் விளக்கம்

தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, சபரிமலை பிரச்னையால் தான் கட்சி தோல்வியடைந்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

சகாவே! மத்திய கமிட்டி சொல்லியாச்சுன்னா அதோட விட்டுடணும்! நோண்டி ஆராய எல்லாம் கூடாது!

மீண்டும் சந்திப்போம்.
 
   

6 comments:

  1. ஜெமோ ரெட்டி ஒரே நாளில் அந்தக் கட்டிடத்தை இடித்துத் தள்ளியதிலேயே சந்திரபாபு மீதான அவர் வன்மம் தெரிந்தது. இன்னும் என்னென்ன நடக்குமோ...

    ReplyDelete
    Replies
    1. சந்திரபாபு நாயுடு ஒன்றும் குறைந்தவரில்லை ஸ்ரீராம்! இந்தத் தேர்தலுக்கு முன்பாக ஜெகனுடைய சகோஹரி ஷர்மிளாவையும் ஒரு சினிமா நடிகரையும் இணைத்துக் கொளுத்திப்போட்டது உட்பட ராஜசேகர ரெட்டி குடும்பத்துக்கும் நாயுடுவுக்கும் இருந்த பகையைப் பற்றி யாத்ரா திரைப்பட விமரிசனத்திலேயே கொஞ்சம் றழுதியிருக்கிறேன்.

      Delete
  2. சபரிமலை விவகாரமா? அதைதான் தேர்தல் ஆணையம் பேசவே கூடாது என்று சொல்லியிருந்ததே....

    ReplyDelete
    Replies
    1. சபரிமலை விவகாரத்தில் அந்த இரண்டுபெண்களைப் போலீஸ் பாதுகாப்புடன் பதினெட்டுப்படியேறி ஐயப்பனை தரிசிக்க வைத்ததில் பிணராயி விஜயன் அரசு காட்டிய கெடுபிடியை ஜனங்கள் மறந்து விடுவார்களா என்ன? கம்யூனிஸ்ட் கட்சியும் தோல்விக்கான காரணமாக அதைத்தான் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறது.

      Delete
  3. பழனிவேல் தியாகராஜனுக்கு வேற வேலை இல்லை. இந்த மாதிரி வெட்டிகள்னாலதான் தமிழகம் எப்போதும் பின்னோக்கிப் போகுது.

    சபரிமலை விவகாரம் முக்கியக் காரணம்தான். அதனால்தான் பாஜக வாக்கு 10%லிருந்து 15க்கு உயர்ந்தது. அடுத்த முறை இன்னும் அதிகமாகும்.

    ஜெ.மோ.ரெட்டிகாரு, துக்ளக் ஆட்சி நடத்த முயல்வார் என்று எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வெட்டி அரசியல் செய்வது பழனிவேல் ராஜன் மட்டும்தானா? தமிழகத்தில் கழகங்கள் இப்படி வெற்று வேட்டு அரசியல் செய்வதைத்தானே கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாகவும் செய்து கொண்டிருக்கின்றன? :(((

      டோளர்கள் பாவம்! தோற்றதற்கு ஏதாவது நொண்டிச்சாக்கைச் சொல்லித்தானே ஆகவேண்டும்!

      ஜெகன் மோகன் ரெட்டி இதேமாதிரி ரொம்பநாள் வண்டி ஓட்டமுடியாது. என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#சீனப்பூச்சாண்டி குறித்தான இந்திய அரசின் அணுகுமுறை மாறுகிறது!

நேற்று வெள்ளிக்கிழமை நமது பிரதமர் நரேந்திர மோடி போர்ப்பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிற லடாக் பகுதிக்கு நேரடியாகச் சென்று நமது வீரர்களைப் பார்த...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (310) அனுபவம் (239) நையாண்டி (98) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (71) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (42) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (22) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) புத்தக விமரிசனம் (14) விமரிசனம் (14) தேர்தல் சீர்திருத்தங்கள் (13) Change Management (12) அரசியல் களம் (12) ஊடகப் பொய்கள் (12) கமல் காசர் (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) திராவிட மாயை (11) ஊடகங்கள் (10) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) புனைவு (9) ஆங்கிலப் புதினங்கள் (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) இடதுசாரிகள் (7) காமெடி டைம் (7) சுய முன்னேற்றம் (7) பானாசீனா (7) எங்கே போகிறோம் (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) புத்தகம் (6) மீள்பதிவு (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீ அரவிந்த அன்னை (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அன்னை எனும் அற்புதப் பேரொளி (5) இர்விங் வாலஸ் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) கண்டு கொள்வோம் கழகங்களை (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) தேர்தல் முடிவுகள் (5) நா.பார்த்தசாரதி (5) படித்ததில் பிடித்தது (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) Tianxia (4) உதிரிகளான இடதுகள் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) கவிதை நேரம் (4) கூட்டணிப் பாவங்கள் (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மோடி மீது பயம் (4) அஞ்சலி (3) ஒளி பொருந்திய பாதை (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) சீனா (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) மாற்று அரசியல் (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) The Sunlit Path (2) அம்பலம் (2) உதிரிக் கட்சிகள் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்தர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) Three C's (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)