வரலாறு சொல்லும் பாடங்களைக் கற்றுக்கொள்ளத்தவறினால் அரியர்ஸ் க்ளியர் செய்யாத மாணவன் நிலையை விட மோசம் தான் என்பதைக் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நிரூபித்து வருவது மிகப்பரிதாபம்! இன்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை இன்னும் ஆறுமாதத்திற்கு நீடிக்க வகை செய்யும் மசோதாவைத் தாக்கல் செய்தார். காங்கிரஸ், AIMIM ஒவைசி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக்குரலை எழுப்பிய பிறகு மக்களவை மசோதாவை ஏற்றுக்கொண்டது.
ஜம்மு காஷ்மீர் விவகாரம் இவ்வளவு பெரிய பிரச்சினையாக ஆக்கப்பட்டதில் ஜவஹர்லால் நேருவோடு ஷேக் அப்துல்லா மற்றும் வாரிசுகளும் சேர்ந்து செய்திருக்கிற முட்டாள் தனங்களைச் சொல்லிக் காட்டினால் கோபம் வரத்தானே செய்யும்!
காஷ்மீர் எப்போதும் ஒரு கொந்தளிப்பான பிரதேசமாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிற தரப்பாக பாகிஸ்தானுடன் நம்மூர் காங்கிரசும் காஷ்மீரி அரசியல் வாதிகளும் இருப்பதும் சகித்துக் கொண்டு போக வேண்டியதும் இந்த தேசத்தின் தலைவிதி ஒன்றுமில்லை!
மம்தா பானெர்ஜியை I PAC என்று தேர்தல் உத்திகளை வகுத்துத் தரும் நிறுவனம் நடத்தி வரும் பிரசாந்த் கிஷோர் இரண்டாவது முறையாகச் சந்தித்திருக்கிறார் என்பதில் எந்தப் பெரிய செய்தியும் இல்லையே என்கிறீர்களா? தீதியை சிரித்த முகமாகக் காட்டுவதற்கே பிரசாந்த் கிஷோர் என்னென்ன பாடெல்லாம் படவேண்டியிருக்குமோ? இன்னும் எத்தனை செஷன் கோச்சிங் வேண்டியிருக்கும் என்பது பற்றிக் கொஞ்சமாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
சமீபகாலமாக மம்தா பானெர்ஜி என்ன செய்தாலும் அவருக்கு எதிராகவே திரும்புவதை பிரசாந்த் கிஷோர் மாற்றி விடுவாரா என்பதெல்லாம் அடுத்த பட்சம் தான்! முஸ்லிம் மாணவர்கள் மெஜாரிட்டியாக உள்ள பள்ளிகளில் அவர்களுக்கென்று தனியாக உணவுக்கூடம் அமைக்கச் சொல்லி அரசு சர்குலர் அனுப்பியது எதற்காக என்று பிஜேபி கேள்வி கேட்கிறது! இது ஒரு பக்கயென்றால் இன்னொருபக்கம் சட்டசபையில் இந்தப் புதன்கிழமை ஒரு முஸ்லிம் MLA காங்கிரஸ்காரர்தான், சிறுபான்மைக்காவலர் வேஷம்போடும் மம்தாபானெர்ஜியை வெளுத்து வாங்கியிருக்கிறார் என்கிறது ஒரு DNA தளச்செய்தி!
One such MLA is Moinul Haque of Congress, a veteran leader from Farakka. He virtually managed to put the cat among the pigeons by asking Mamata Banerjee point blank about various perceived appeasement policies practiced by the West Bengal CM.
Moinul Haque asked that why arbitrarily allowance was granted from Imams and Muezzins while gatekeepers of other religions didn't get a dime. The decision taken during the first term of Mamata government had attracted severe criticism with High Court finally rejecting the dole given to Imams. Haque was also severe at Mamata and criticised the fact that she attended Eid's jammat at Red Road,where normally women don't go.
This unprecedented attack came on the floor of the assembly on the same day when Mamata Banerjee extended the olive branch to the Congress and CPI(M) saying that all the forces need to come together to counter BJP. காங்கிரசும் இடதுசாரிகளும் மம்தாவின் ஒற்றுமைக்கான அழைப்பை நிராகரித்து விட்டார்கள்.பிஜேபியோ, மூவரும் ஒன்று சேரட்டுமே! அப்படிச் சேர்ந்தார்களானால் இருக்கிற தொண்டர்கள் அத்தனைபேரும் பிஜேபியில் வந்து சேர்ந்து விடுவார்கள் என்று சொல்லி மற்றக்கட்சிகள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.
மாநிலத்தில் ஒருபக்கம் வன்மம் காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி அரசு! இன்னொருபக்கம் உறவை முறித்துக்கொண்டு வீராப்பாக வெளியே வந்ததும் நாயுடு பக்கம் இருக்கிற கொஞ்சநஞ்சப் பேரையும் தன் பக்கம் இழுத்துக்கொள்ளும் BJP! நாயுடு பாடு பரிதாபம் தான் என்று தோன்றுகிறதா? வீட்டைப்பார்ப்பாரா, சேர்த்து வைத்திருக்கிற சொத்துக்களைப் பார்ப்பாரா, கட்சியைத் தான் பார்ப்பாரா? தெலுகு ஆத்ம கௌரவம் கோசம் என்ற கர்ஜனையோடு NTR ஆரம்பித்த தெலுகு தேசக் கட்சி, இன்று ஐயா சாமி என்னை விட்டுவிடு என்று நாயுடுவைவிட்டு விலகி ஓடிக்கொண்டிருப்பது, நாயுடுவே ஆரம்பித்து வைத்தது. அனுபவிக்கிறார் என்பதில் பரிதாபப்பட ஏதுமில்லை!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment