தேர்தலுக்குப் பின் மத்திய அமைச்சரவை அறிவிக்கப் பட்டு, அமைச்சர்களும் தத்தம் துறைகளில் பொறுப்பேற்றுக் கொண்டு செயல்படவும் ஆரம்பித்தாயிற்று. ஆனால் புதியதலைமுறை சேனல் இன்னமும் அமைச்சரவையில் தமிழகத்துக்கு ஏன் இடம்தரவில்லை என்ற அக்கப்போர் விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. என்ன கூவினாலும் இதனால் அவர்களுக்கும் சரி, பார்க்கிற தமிழர்களுக்கும் பைசா பிரயோசனமில்லை என்று தெரிந்தே கூவுகிறார்கள் என்றால் என்ன சொல்ல?
Maridhas M
SRM கல்லூரி மாணவர்கள் தற்கொலை சார்ந்து எந்த விவாதமும் எழுப்பாமல் தந்திரமாக நகர்த்தும் புதிய தலைமுறை டீவி கார்த்திகை செல்வன், கார்த்திகேயன் தொட்டு அனைவருக்கும் போன் செய்து எப்போது விவாதம் செய்வார்கள் என்று கேளுங்கள்.
முடிந்தால் நேரில் அவர்களை பிடித்து கேள்வி கேளுங்கள். இதை விடகூடாது. இவர்கள் விட மோசமான அயோக்கிய கும்பல் இந்த நாட்டில் வேறு இல்லை.
திமுக கம்யூனிஸ்ட் ஊடகம் நினைத்தால் எதையும் மறைப்போம் எதையும் பெரிதாக்குவோம் என்று திரிகிறார்கள்.
பத்திரிக்கைத் துறை என்ற பெயரில் முழுநேரம் அரசியல் கட்சிகளுக்கு, தங்கள் முதலாளிகளுக்கு அடிமை வேலை செய்யும் இந்த கூட்டத்தை எதிர்த்து குரல் எழுப்பவேண்டிய நேரம் இது. இந்த கூட்டம் தான் எவரையும் அவமானம் செய்யலாம் எதையும் தவறாக மக்களைத் தூண்டிவிடலாம் என்ற திமிர் பிடித்து அலைகிறார்கள்..
கார்த்திகேயன் , செந்தில் போன்றவர்கள் முழுநேர தேசவிரோத கருத்துக்களை பரப்பும் நெறியாளர்கள். போதுமான வகையில் இவர்கள் அதற்காக மறைமுகமாக பலனை அனுபவிக்கிறார்கள். இந்த விதமான பத்திரிக்கையாளர்கள் ஒழித்து கட்டவேண்டும்.
எனவே தொடர்ந்து தொலைப்பேசிக்கு அழைத்து போதுமான அழுத்தம் கொடுக்கவேண்டும், ஜனநாயக ரீதியாக ஏன் இதை பேசவில்லை விவாதம் செய்யவில்லை என்று கேள்வி எழுப்புங்கள்..
திமுக ஸ்டாலின் ஏன் இன்னும் இதற்கு கருத்து தெரிவிக்கவில்லை???? கூட்டணி என்பதால் தப்பிக்க உதவுகிறதா???
எங்கே அந்த நக்கீரன் கோபால்????
-மாரிதாஸ்
மாரிதாஸ் இன்னும் சில கேள்விகளை எழுப்புகிறார்:
அய்யா ஸ்டாலின் அய்யா எங்கய்யா இருக்க?????
இதை சொல்லும் போது என்ன புது பழமொழி சொல்லலாம் என சிந்தனையில் இருந்தீர்களா ஐயா????
உருது மொழியைக் கட்டாய பாடமாக்கினால் இரு மொழிக்கொள்கை என்ற தேன்கூட்டில் கல் வீசப்படாது என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது இரட்டைநாக்கு என்றே பச்சையாகச் சொல்லிவிடவா? உண்மைநிலவரம் தான் என்ன?
செய்திகளைப் படித்துவிட்டுத்தான் அறிக்கைகள் விடுகிறார்களா அல்லது டிவி, பேஸ்புக், வாடஸ்ப் பார்த்துவிட்டு அறிக்கை விடுகிறார்களா என்று நான் பல நேரம் வியப்பதுண்டு. இன்றும் தேசிய கல்விக் கொள்கை வரைவு (ஆம் வரைவறிக்கைதான்.இறுதி ஆணை அல்ல) பற்றிய கருத்துக்களும் அந்தக் கேள்வியை மீண்டும் எழுப்பின
அறிக்கை விடுகிறவர்கள் இந்தச் செய்தியை வாசித்திருப்பார்களா?
இந்தி பேசப்படும் மாநிலங்களிலும் ஆங்கிலம், இந்தி தவிர வேறு இந்திய மொழி ஒன்று மூன்றாவது மொழியாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரை செய்துள்ளது (இது பிபிசி தமிழ்)
Promotion of Indian and Classical Languages and setting up three new National Institutes for Pali, Persian and Prakrit and an Indian Institute of Translation and Interpretation (IITI) has been recommended. (இது PIB செய்தி)
'இன்னும் வளரணும் தம்பி...’ ’உதயநிதிக்கு பதவி கொடுக்க தயங்கும் திமுக தலைமை..!
#DMK #Udhayanidhi #MKStalin
#DMK #Udhayanidhi #MKStalin
ஹிந்தி திணிப்பு என்ற தமிழக ஊடகங்களின் பொய் பரப்புரை : ஹிந்தி பேசும் மாநிலங்களில் கூட மாணவர்கள் தமிழ் கற்கலாம் – உண்மை என்ன?
மீண்டும் சந்திப்போம்.
கார்த்திகைச்செல்வன், கார்த்திகேயன், செந்தில் - இவங்க எல்லோரும் எம்ப்ளாயீஸ். அவங்க பாஸ் சொல்வதை மட்டும்தான் நிகழ்ச்சியில் விவாதிக்கமுடியும். அதை ஏன் விவாதிக்கலை, இதை ஏன் விவாதிக்கலைனு கேட்டா என்ன பயன்? தொலைக்காட்சி ஓனர், 'பகல்ல ஏன் சந்திரன் வராம சூரியன் மட்டுமே வருது' என்பதை விவாதியுங்கள் என்று சொன்னால், அதற்கும் 'யெஸ் பாஸ்.. என்று சொல்லி விவாதிக்க ஆரம்பிப்பார்கள். அதற்கும் பொழுதுபோகாத பெருசுகள் வந்து கத்தும். அதில் சில 'மோடி'யின் பாசிச ஆட்சிதான் சூரியன் பகலில் வருவதற்குக் காரணம் என்று பேசும்...அப்படியே அன்றைய பொழுது கழியும்.
ReplyDeleteஉண்மைதான் நெ.த! ஏன் விவாதிக்கவில்லை என்ற கேள்வி உண்மையில் அவர்களுக்கானதில்லை இந்த நிகழ்ச்சிகளை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கானது. பதிவுகளை வாசிக்க வரும் நண்பர்களுக்கானது. .
Deleteஇப்போ சில அதீத புத்திசாலிகள், மோடி கூட்டணி பெற்றது 45 சதவிகிதம், அப்படீன்னா 55 சதவிகிதம் பேர் மோடியை விரும்பலை, எதிர்க்கிறார்கள் என்றெல்லாம் உளறிக்கொண்டிருக்கிறார்களே..அதனைக் கவனிக்கவில்லையா?
ReplyDeleteதிக வுக்கு 3%, திமுகவுக்கு 31%. அதனால் திகவை 97% வெறுக்கிறார்கள், திமுகவை 69% வெறுக்கிறார்கள் என்றெல்லாம் இந்த ஊடக ஜால்ராக்கள் எழுத மாட்டாங்க.
அதையெல்லாம் விடுங்க... இந்தப் பத்திரிகையை 2 லட்சம்பேர் வாங்கறாங்க, அதனால் 7 கோடி தமிழ் மக்கள் இந்தப் பத்திரிகையை வெறுக்கறாங்க என்றும் எழுதமாட்டாங்க.
புள்ளிவிவரம் பேசுவதே அதை எப்படிவேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் எகிற சௌகரியத்துக்காகத்தானே நெல்லை சார்! இப்படித் திரித்து வியாக்கியானம் செய்கிற வேலையை கலீஞர் ஆரம்பித்து வைத்தார்! தோற்கிற சமயங்களில் எல்லாம் இப்படிப் புள்ளிவிவரத்தை திரித்துச் சொல்ல ஆரம்பித்ததை இன்றைக்கு அநேகமாக எல்லாத் தமிழ் ஊடகங்களும் பின்பற்றுகின்றன
Delete@ திரு நெல்லைத்தமிழன்...
ReplyDelete>> திக வுக்கு 3%, திமுகவுக்கு 31%. அதனால் திகவை 97% வெறுக்கிறார்கள், திமுகவை 69% வெறுக்கிறார்கள் என்றெல்லாம் இந்த ஊடக ஜால்ராக்கள் எழுத மாட்டாங்க...<<
சவுக்கடி!.. ஆனாலும் வலிக்காது..
வாங்க துரைராஜு சார்! கல்லுளிமங்கன்களுக்கு சவுக்கடியெல்லாம் ஒரு பொருட்டா என்ன? செருப்படி வாங்கினாலும் அதையும் பெருமையாகப் பேசிக்கொள்கிற ஜென்மங்கள்! #ஒத்தச்செருப்பு
Delete>>> அல்லது இரட்டைநாக்கு என்றே பச்சையாகச் சொல்லிவிடவா?..<<<
ReplyDeleteபாம்புகளும் மற்றும் உடும்புகளும் வருத்தப்படுமே ஐயா!...
உண்மைதான் துரைராஜு சார்!
Deleteதுரை செல்வராஜூ சார்! பெயரைத்தட்டச்சியதில் பிழை! அருள்கூர்ந்து மன்னிக்கவும்.
Deleteகாரச்சாரமான பதிவு.
ReplyDeleteகாரம் மாரிதாஸ் பகிர்விலிருந்தும் சாரம் மாலனுடைய பகிர்விலிருந்தும் மிக்ஸ் செய்யப்பட்டது. அவர்களுக்கு நன்றியுடன்!
Delete