நேற்றோ முன்தினமோ ஆசியாநெட் தமிழ் ஊடக முகநூல் பக்கத்தில் ஆனந்தவிகடன் மீது இசுடாலின் மானநஷ்ட வழக்கு என்று செய்திக்கு லிங்க் இருந்தது. லிங்க் மீது க்ளிக் செய்தால் திரும்பத்திரும்ப home page இற்கே போய்க்கொண்டிருந்ததில் எத்தனையோ அபத்தம், இதுவும் அதில் ஒன்றாக இருக்கும் என்று அமைதியாகக் கடந்துபோய்விட்டேன்.
இன்று காலை மறுபடியும் ஒரு எழுத்தாளர் முகநூல் பகிர்வில் அதேசெய்தி! இன்னும் கொஞ்சம் விவரங்களோடு, ஒருகோடியே பத்து லட்சரூபாய் இழப்பீடு கேட்பு, லாட்டரி மார்ட்டினிடமிருந்து திமுக 500 கோடிரூபாய் நிதி பெற்றதாக ஜூவி செய்திக் கட்டுரை விஷயத்தில் என்றிருந்தது.
மான நட்டம்
1.1 கோடி நட்ட ஈடு கேட்டு ஆனந்தவிகடன் மீது ஸ்டாலின் வழக்கு
அப்படி என்ன சொல்லிட்டான் அந்த திமுக விகடன்
லாட்டரி கிங் மார்ட்டின் 500 கோடி திமுகவுக்கு தேர்தல் நிதி குடுத்ததாலதான் மார்ட்டின் மேல ஐடி ரெய்டுனு எழுதிட்டானாம்
கலைஞரா இருந்தா, ஜெயமோகன் மேட்டர் மாதிரி பாப்பார விகடன்னு திட்டி முரசொலில ‘கவிதை’ எழுதிட்டு விட்டிருப்பாரு. பார்த்துப் பேசுற ஸ்டாலின் வழக்கு போடாம வேற என்ன பண்ணமுடியும் பாவம். அதுசரி, பகுத்தறிவு சமூகநீதி உடன்பிறப்புகளின் கூடாரமாகிடுச்சினு பாப்பான் எவனுமே பல வருஷமா விகடன் வாங்கறதில்லையே
அட நீ வேற. விகடன்ல இருந்த மொத்த உடன்பிறப்புகளும் திருமாவேலன் தலைமைல கலைஞர் டிவிக்குப்போயே எவ்ளோ நாளாவுது
கலைஞர் டிவினா
ஜெயா டிவி மாதிரி இது இன்னோரு உப்புமா சேனல்
இது இன்று மதியம் ப்ரியங்கா திருமூர்த்தி என்பவர் எழுதி The NewsMinute தளத்தில் வந்த செய்தியின் ஸ்க்ரீன் ஷாட்.
எனக்கொரு #டவுட்டு
இப்படி மானநஷ்டம், அதுக்கு இத்தனை இழப்பீடு என்று கேட்டு வழக்கு என்று அடிக்கடி பார்க்கிறோமே, மொதல்ல மானம்னு ஒண்ணு இருந்துச்சா, அப்படி இருக்குமானால் அவங்க கேக்கறாங்களே அவ்வளவுதான் அதுக்கு மதிப்பா? இந்த ரெண்டையும் எதைவச்சு தீர்மானிக்கறதாம்? தீர்ப்பு எதைவச்சு சொல்வாங்களாம்?
தெரிஞ்சவங்க தெரியாதவங்களுக்கு சொல்லுங்களேன்!
மீண்டும் சந்திப்போம்.
//மார்ட்டினிடமிருந்து திமுக 500 கோடிரூபாய் நிதி பெற்றதாக// - திமுக வை இந்த விஷயத்தில் பெரும்பாலும் அடித்துக்கொள்ள இயலாது. தடயம் இல்லாமல் சுருட்டறதுல அவங்க எங்கயோ இருக்காங்க. விஞ்ஞான ஊழல். எப்போ தடயத்தை விடறாங்களோ, அப்போ சுதாரிச்சுக்கிட்டு தப்பிடுவாங்க, இல்லை திகார்ல இருந்து தியாகம் பண்ணி பிறகு தப்பிவிடுவாங்க.
ReplyDeleteஇந்தியா சிமெண்ட்ஸ் குரூப், கருணாநிதி பத்திரிகைகளில் மட்டும் எல்லா வாரங்களும் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கும் (சிமெண்ட் விளம்பரம்). இது கணக்கெழுதி வாங்கும் லஞ்சம் இல்லாமல் வேறு என்ன. அதே இந்தியா சிமெண்ட்ஸ், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான விளம்பரம் என்ற பெயரில் அவங்க தொலைக்காட்சிக்கு மட்டும் கணக்கெழுதி ரூபாய் கொடுக்கும் (தொலைக்காட்சி ஊழலில் மாட்டியபோது).
மார்ட்டின் ஒருவேளை உதயநிதி படங்களை டிஸ்டிரிபியூஷன் செய்தேன், நடிக்க காசு கொடுத்தேன், பட விளம்பரத்துக்குக் கொடுத்தேன் என்றெல்லாம் கணக்கெழுதியிருப்பார். ஹாஹா
கறுப்பை வெளுப்பாக்குவதிலும் வெளுப்பைக் கறுப்பாக்குவதும் கழகத்துக்குக் கைவந்த கலைதான்! ஆனால் வந்த செய்திகளின்படி மார்ட்டின் வியாபாரம் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கொடிகட்டிப் பறப்பதில் ஏகப்பட்ட நன்கொடைகளை பலகட்சிகளுக்கும் வாரிவழங்கியிருக்கிறார் என்பதில் திமுகவின் கோட்டா மட்டும் இது, மம்தா உட்படப் பலரும் இப்படி வாங்கியவர்கள் என்பதும், மார்ட்டின் கணக்கு வழக்குகளைப் பார்த்துவந்த ஒருவர் மரணமும் சேர்ந்து துரத்துகிறது போல.
Delete