Saturday, June 22, 2019

விளம்பரத்தில் வரும் சினிமா நடிகன் மோசடிக்குப் பொறுப்பேற்பானா?

விதவிதமாய் சோப்பு சீப்பு கண்ணாடி பாடல் வரிகள்  மாதிரி நம்மூரில் மோசடி மன்னர்கள் சாம்ராஜ்யம் விதவிதமாய்க் கொடிகட்டிப் பறப்பதை டில்லிக்கு ராஜாவாக எவர் வந்தாலும் தடுக்க முடிந்ததில்லை என்ற கசப்பான உண்மை மீண்டும் ஒரு செய்தியாக மட்டும் முடிந்துவிடப்போகிறதா?



இந்த முறை செய்திகளில் அடிபட ஆரம்பித்திருப்பது கல்யாண்  ஜுவெல்லர்ஸ்! இங்கே  குற்றம் சொல்லும் மாத்யூ சாமுவேல்  யார், அவரது நம்பகத்தன்மை என்னவென்றெல்லாம் எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது. ரெட்பிக்ஸ் தளமும் சொல்லவில்லை என்பதை மனதில்  வைத்துக்கொண்டு, வாசியுங்கள்! யோசியுங்கள்! இங்கே ஜனங்களுக்குத் தங்கம் மீது இருக்கிற ஆசையைப் பயன்படுத்திக் கொண்டு, கேரளா, தமிழ்நாடு முழுக்க நகைக்கடைகள் பிரம்மாண்டமான ஷோ ரூம்களை சினிமா நடிகர்களை வைத்துத் திறக்க வைத்து பிசினெஸ் செய்து கொண்டிருக்கையில் ஒரே ஒரு கடையை மட்டும் குறிவைத்து மாத்யூ சாமுவேல் முன்னெச்சரிக்கை செய்வதுமே கூட என்னைப்பொறுத்த வரை கேள்வி கேட்கப் படவேண்டியதுதான்! ஆனால் முழுக்கவும் உதாசீனப்படுத்தி விட முடியாத செய்தி. கூகிளில்  தேடியதில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் 17 ஆம் தேதியிட்டு ஒரு செய்தி இந்தத் தவறான தகவல் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாக திரிச்சூர் கல்யாண் ஜுவெல்லர்ஸ் போலீசில் புகார் கொடுத்திருக்கிறதாம் 

The Thrissur West police on Saturday registered a case against director V A Shrikumar Menon and Mathew Samuel of RedPix Media based on a complaint lodged by Thrissur-based Kalyan Jewellers.
The jewellery firm alleged Menon and Mathew spread fake news against the company on online media and social media platforms. As per the complaint, the duo said the next Nirav Modi would be from Kerala as Kalyan Jewellers had taken Rs 10,000 crore as loans mainly from SBI.
Interestingly, Menon has directed many of Kalyan Jewellers’ advertisements, including the now-famous one with the tagline ‘Vishwasam, Athalle Ellam’ (Trust is everything). Mathew is former editor of the Tehelka magazine. என்பதிலேயே ரெட்பிக்ஸ் தளம் இதை நல்லெண்ணத்துடன் தான் வெளியிட்டதா அல்லது வேறு ஏதாவது உள்நோக்கம் இருந்ததா என்பதே கேள்விக்குறியாகி நிற்கிறது. யூட்யூப் தளத்தில் ஜூன் 14ஆம்  தேதியன்று  ரெட்பிக்ஸ் இந்தச் செய்தியை தமிழிலும் வெளியிட்டிருக்கிறது, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின் வீச்சு கேரளாவைத்தாண்டவுமில்லை என்பதில் தொழில் போட்டியாளர்களுடைய கைவண்ணம் பின்னால் இருக்கலாம் என்பது ஊகம் மட்டுமே. ஆனால் 10000 கோடியை எந்தவொரு செக்யூரிட்டியுமில்லாமல் ஸ்டேட் வங்கி அப்படியே தூக்கிக் கொடுத்துவிட்டது என்பது நம்பமுடியாத கட்டுக்கதை. விஜய் மல்லையா, நீரவ் மோடி இருவரது கடன் மோசடியும் வேறு விதமானது. இப்போது திரும்பப்போட்டுப் பார்க்கையில், கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குச்சந்தைக்குள் IPO ரூட்டில்   நுழையவிருப்பதைக் குறிவைத்த தாக்குதல் மாதிரித் தான் தெரிகிறது  
இப்போதுதான் கர்நாடகாவில்  IMA Jeellery என்ற ஒரு நிறுவனம் இஸ்லாமிய முறையில் செயல் படுகிற மாதிரி ஷோ காட்டி 90% இஸ்லாமிய முதலீட்டாளர்களை ஆயிரக்கணக்கான கோடிகளில் மோசடி செய்துவிட்டு முதலாளி  வளைகுடாநாடு ஒன்றுக்குத் தப்பி ஓடிவிட்டார் என்கிற விஷயம் செய்திகளாகக் கசிந்து கொண்டிருக்கிறது என்ற நிலையில் எந்த ஒரு விஷயத்தையும் வெறும் வதந்தி, தொழில்போட்டியாளர்கள் செய்யும் அவதூறு என்று ஒதுக்கி வைத்து விட்டுப்போய்விட முடியுமா? 

மின்னுவதெல்லாம் பொன்னல்ல! சினிமா நடிகன் நடிகைகளை வைத்துத் திறப்புவிழா நடத்தி விளம்பரம் தேடிக் கொள்கிற நிறுவனங்கள் வெறும் மோசடி நிறுவனங்கள் என்றானால், விளம்பரம் செய்யவந்த நடிகனோ நடிகையோ பொறுப்பேற்பார்களா?

விளம்பரங்களைக்கண்டு மயங்கி மோசடிக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது ஒன்றுதான் புத்திசாலித்தனம்! அரசோ அல்லது காவல்துறையோ மோசடிக்குள்ளானவர்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வதோ  மீட்டுக் கொடுப்பதோ எத்தனை வழக்குகளில் நடந்திருக்கிறது? Benefit Fund,        தேக்குமரத் திட்ட மோசடி,  பாலு ஜுவெல்லர்ஸ் என்று வரிசையாக வருவதில் இப்போது சாரதா மோசடி, IMA  Jewellers வரை நாம் பார்த்துவருகிற அனுபவம்.

மீண்டும் சந்திப்போம்.
          


2 comments:

  1. லீகலாக படிப்பவருக்கு எந்த பொறுப்பும் இல்லை தான். ஆனால் தார்மீக ரீதியாக பொறுப்பு இருக்கிறது. fair and lovely விளம்பரங்களில் நடிக்க மறுத்த கங்கனா ரணாவத் மற்றும் சாய் பல்லவி போன்றவர்களை பாராட்டும்போது மோசடி நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிப்பவர்களை இகழ்வதும் தப்பில்லையே!

    ReplyDelete
    Replies
    1. நம்முடைய ஜனங்கள் ஏமாறுவதற்கென்றே பிறந்தவர்கள் என்றுதான் சினிமா, அரசியல், ஊடகங்கள் இப்படி எல்லாமே தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கின்றன, பந்து! தேக்குமரத்திட்டம் என்று அனுபவ் நடேசன் பலநூறு கோடிகளை மோசடி செய்ததில் மீனமான ஒரு நடிகையிடம் கணிசமாக அவரே கோட்டை விட்டார். வீட்டுக்கு ரெயிடு வருமோ என்று பயந்த நடிகைக்கு மூப்பனார் பாதுகாப்பு இருந்தது என்றால் இந்த தேசம் என்றைக்கு விழிப்படையும்? என்று ஏமாந்த ஜனங்களுக்கு விடிவு காலம் வரும்?

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)