திருச்சி விமானநிலையத்தில் தமிழிசையின் மகன் நேற்று ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார். தமிழிசை என்னதான் அதைக் குடும்பப் பிரச்சினை. personal என்று சமாளித்தாலும், அது அவருடைய பெயருக்கும் பிஜேபி கட்சிக்கும் ஏற்படுத்திய சேதாரத்தை சரிசெய்ய முடியவில்லை என்பது தமிழிசைக்கோ பிஜேபி கட்சி நிர்வாகிகளுக்கோ புரிந்திருக்கிறதா?
என்ன தான் சமாதானம் சொன்னாலும் இது மிகப்பெரும் பிரச்சினையாக பேசப்படும். அதுவும் தமிழிசையே அந்த பெண் பெயரென்ன, சோபியாதானே அதன் மீது புகார் கொடுத்த பின்பு? பொதுவாழ்க்கையிலே இருப்பவர்கள் சொந்த குடும்பத்தையும் கவனிக்கவேண்டும். அதற்கு நேரம் ஒதுக்கவேண்டும்.இல்லையேல் பொதுவாழ்க்கையும் சரியாக இருக்காது என்று முகநூலில் எச்சரிக்கை செய்கிறார் ராஜசங்கர்.
குடும்பமா அரசியலா எது முக்கியம்?
தமிழிசை சமாளித்தார் என அரசியல் கட்சியினர் விமர்சனங்கள் எழுப்பினாலும் தமிழிசை சொல்வது உண்மை. தமிழிசையின் மருமகள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், தனது மனைவியைக் கூட பார்க்க வராமால் இப்படி கட்சி கட்சி என குடும்பத்தை பொருட்படுத்தாமல் இருந்ததால் அவரது மகன் சுகநாதன் இப்படி அவருக்கு எதிராகவே கோஷம் எழுப்பியதாக சொல்லப்படுகிறது. என்கிறார் ஆசியாநெட் தமிழில் K சதீஷ் அடுத்துச் சொல்வது இவர்களும் இன்னொரு ஆனந்த விகடனாக உருவாகிறார்களோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது.
உத்தர பிரதேச அரசியலில் வெங்கலக்கடைக்குள் புகுந்த யானைபோல் கலக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அகிலேஷ் மாயாவதி கூட்டணி பிய்த்துக் கொண்டதில் அகிலேஷின் சைக்கிளை மாயாவதியின் யானை செரித்துச் சக்கையைத் தள்ளிவிட்டதாக சதீஷ் ஆசார்யா அபிப்பிராயப்படுகிறார். கார்டூனிஸ்டுக்கும் அடிசறுக்கும்!
சுரேந்திரா கூட அதையேதான் சொல்கிறாரா என்ன? ஆனால் முலாயம் சிங் யாதவுக்கு இருக்கிற அகட விகட சாமர்த்தியம் மாயாவதிக்குக் கிடையாது என்றல்லவா அங்கிருந்துவரும் செய்திகள் சொல்கின்றன?
இது 2014 பிப்ரவரியில் சதீஷ் ஆசார்யா வரைந்தது. 2019 இல் தெலங்கானா அசெம்பிளியில் காங்கிரசுக்கு 18 இடங்கள் கிடைத்ததை, அவர்களே தீர்ப்பை மாற்றி எழுதி 12 பேர் ஆளும் TRS கட்சியோடு ஐக்கியமாகி விட்டார்களாம்! ராவுல் ராசி!
மீண்டும் சந்திப்போம்.
சோபியா விமானத்தில் நடந்து கொண்ட முறை ஏற்று கொள்ள முடியாதது, கண்டிக்கபட வேண்டியது.
ReplyDeleteகுடும்பத்தில் நடைபெற்ற தகராறை வைத்து சோபியா விமானத்தில் நடந்து கொண்ட தவறான முறையை நியாயபடுத்துவது சரியல்ல.
தமிழிசையின் மகன் நடந்து கொண்ட முறை தவறு, கண்டிக்கபட வேண்டியது.
செய்திகளை எடுத்துப் போட்டதோடு சரி, இந்த விவகாரத்தில் நான் தமிழிசையை எதுவும் சொல்லவில்லை. குடும்பமா அரசியலா எது முக்கியம் என்பதை முடிவு செய்யவேண்டியது கூட அவர்தான்!
Deleteதமிழிசையையே கண்டிக்காதபோது அவர் மகனை எதற்காகக் கண்டிக்க வேண்டும்? எனக்குப் புரியவில்லை!