இன்றைக்கு ராகுல் காண்டியின் 49வது பிறந்த நாள்..இந்திய அரசியலில் அநேகமாக, ஜவஹர்லால் நேருவுக்கு கிடைத்த மாதிரியே இளவரசர் மரியாதை ராகுல் காண்டி தவிர வேறெவருக்குமே கிடைத்தது இல்லை என்பதை நினைத்துப் பார்க்கும்போது வாரிசுகளின் போதாமை மிகத்தெளிவாக வெளிப்படுகிறது.
கரண் தாப்பர் இங்கே மணிசங்கர் அய்யருடன் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்கிறார். மணிசங்கர் அய்யர் ராஜீவ் காலத்து ஆசாமி, இன்னமும் பழைய நினைப்பிலேயே இருப்பது தெரிகிறது. கொஞ்சம் பாவமாகக் கூட இருக்கிறது. DNA தளத்தில் டெசீன் பூனாவாலா ராகுல் காண்டி உடனையாகத் தலைமுழுக வேண்டியவர்கள் என்று ஒரு ஐந்துபேர் பட்டியலை முன்வைத்திருக்கிறார். அதில் முதலாவதாக மணிசங்கர் அய்யர், அடுத்து ஜெயராம் ரமேஷ், மதுசூதன் மிஸ்திரி, மோகன் பிரகாஷ், அஜய் மாக்கன் என்று வெறும் 5 மட்டும் தான் என்பதே நிறைய உதைக்கிறது.
கூட்டாளி திமுகவில் இசுடாலின் நிலைமை கூட காங்கிரஸ் மாதிரியே ஒரு பாதுஷா ஏகப்பட்ட ஜாகீர்தார்கள் என்றிருந்தாலும் களத்தில் நேரடி அனுபவம் OMG மாதிரி உத்தி வகுத்துக் கொடுக்கிறவர்கள் துணை இப்படி எதுவுமே கைகொடுக்க மாட்டேனென்கிறது. ராமச்சந்திர குகா மாதிரி 14 ஆம் நூற்றாண்டு அரேபியச் சிந்தனையாளர் இபின் கால்தூன் சொன்னார் அல்லது வேறு எவரோ சொன்னார் என்பதாக மேற்கோள் காட்டி வாரிசுகள் அரசியலில் இனிமேல் தலைதூக்க முடியாது என்று சொல்லி விடலாம்தான்!
வைரமுத்துவுக்குத் தான் ஓரம் கட்டப்படுகிற போதெல்லாம் ஒரு மாதிரி ஞானோதயம் வந்துவிடும்! வந்த ஞானம் முழுமையடையட்டும், பேசலாம்! அதற்குமுன்னால் ஜூவி கழுகாருக்கு வந்த திடீர் ஞானம் என்னவென்று கொஞ்சம் பார்க்கலாமா?
ஒருவேளை கடவுளையே சாப்பிடுகிற ரஞ்சித் கூட்டத்திடமிருந்து கடவுளைக்காப்பாற்ற முயற்சி செய்கிறார்களோ?!!
மீண்டும் சந்திப்போம்.
சொந்த உறவு நிலைகளை வைத்துத் தான் எல்ளோருமே எல்லாவற்றையுமே தீர்மானிக்கிறார்கள்.
ReplyDeleteதான் வெளிச்சத்தில் இருந்தால் ஒரு மாதிரி. இருட்டுக்குப் போனால் இன்னொரு மாதிரி.
உலக இயற்கை அதுதானே ஜீவி சார்!
Delete