ஒருவழியாக மக்களவைக் காங்கிரஸ் கட்சித்தலைவர் யார் என்பதை காங்கிரஸ் இன்று அறிவித்துவிட்டது என்பது இன்றைய அதிசயம், ஐந்தாவது முறையாக தேர்ந்தெடுக்கப் பட்ட பெர்ஹாம்பூர் (மே.வ) தொகுதியின் எம்பி ஆதிர் ரஞ்சன் சௌதுரி தான் அது என்கிறது செய்திக்குறிப்பு.
வங்காளி எம்பி எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதைக் கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆசியாநெட் தமிழுக்கு தினத்தந்தியின் இடத்தைப் பிடித்து விடவேண்டுமென்கிற ஆசை அல்லது வெறி இருப்பது புரிந்து கொள்ளக்கூடியதே! அதற்காக இம்புட்டு பெரிய பில்டப்பா? தயாநிதி மாறனோ கனிமொழியோ பெரியார் வாழ்க என்று தமிழில் கோஷம் போட்டதால் பெரிய கவன ஈர்ப்பையோ செல்வாக்கையோ பெற்றுவிடவில்லை என்பதைப் புரிந்து கொள்ளாத செய்தியாளரை வேலைக்கு வைத்திருக்கிற கூறுகெட்ட ஊடகம் என்பதுதான் வெளிப்பட்டிருக்கிறது.
தமிழ் வாழ்க என்று சொன்னதால் பாரத் மாதாக்கி ஜே! என்றும் ஜெய் ஸ்ரீராம் என்றும் பாஜக MP-க்கள் சொல்கிறார்களாம் .. திருட்டு திமுக அடிமைகள் சொல்கிறார்கள்
ஆனால் OPS மகன் OPR அவர்கள் வந்தே மாதரம்-ஜெய் ஹிந்த் என்று சொன்ன போதும் அங்கே பாரத் மாதாக்கீ ஜே .... ஜெய் ஸ்ரீராம் கோஷம்தான் வந்தது.
எப்படியாவது தங்களை புரட்சி வீரராக காட்டிக் கொள்ள வேண்டும் என்று எத்தனை கொரளி வித்தைகள்? இந்த உபிஸ்ஸிடமிருந்து😂
கோஷம் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் ரொம்ப வீக்கு!
மாரிதாஸ் செய்துகொண்டிருக்கிற ஊடகப்பணி மிகவுமே வித்தியாசமானது. சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துகிற நிறைய விஷயங்களை வீடியோ பதிவுகளாக தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.
இதில் மாரிதாஸ் பொதுவான நிதிதிரட்டலைப் பற்றிமட்டுமே விவாதிக்கிறார். ஜெகத் ரட்சகன் குடும்பம் சொந்தமாகவோ அல்லது வேறு எவருடைய பினாமியாகவோ இலங்கையில் 29000 கோடி ரூபாய் முதலீடு செய்கிற அளவுக்கு வசதி, வாய்ப்புக்கள் வந்ததெப்படி என்பதைப் பற்றி எதுவும் பேசவில்லை.
சதீஷ் ஆசார்யாவுக்கும் எனக்குமே கூடத் தெரிந்திருக்கும் இந்த விஷயங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியாது என்றா நினைக்கிறார்? கார்டூனிஸ்டுகள் சறுக்குகிற நேரம்!
பட்ஜெட் தயாரிக்கிற வேலை மும்முரமாக நடந்து கொண்டே இருந்தாலும், நிதியமைச்சகத்தில் ஊழல் புகார்கள், செயல் திறன் இல்லாதவர்கள் என்று களையெடுப்பதும் தொடர்கிறது.
The Centre has compulsorily retired 15 senior officers of the Central Board of Indirect Taxes & Customs (CBIC) on Tuesday, under Rule 56 (j). The sacked officials include the ranks of Principal Commissioner, Commissioner, Additional Commissioner, & Deputy Commissioner of CBIC இது இன்றைக்கு நடந்திருப்பதாக The Week செய்தி விவரம் சொல்கிறது.
ஒரு இலக்கியக்காமெடியோடு பதிவை நிறைவு செய்வோம்!
மீண்டும் சந்திப்போம்.
தமிழக மீடியாக்கள் பெய்டு மீடியா என்பதை அறிந்துகொள்ள இந்த 'பதவிப்பிரமாணம்' சம்பந்தமான செய்திகளைப் படித்தாலே தெரிந்துவிடும். என்ன இருந்தாலும் இங்க ராஜபக்ஷேவைக் கன்னா பின்னா என்று திட்டிவிட்டு, கொழும்பு போய் பல்லைக் காண்பித்து பரிசு பெற்றவங்கதானே திமுகவினர். அப்புறம் 'அரசியல் நாகரீகம்' என்று வாய் கிழியப் பேசுவார்கள் (முதலமைச்சரை 'அடிமை' என்று சொல்லும்போது அந்த நாகரீகம் காணாமல்போய்விடும்)
ReplyDeleteதிமுக தலைமைக்கு பதவி முதலான ஆதாயம் கருதி அடிமைகளாக இருப்பவர்களுக்குப் பிறரையும் அப்படியே எண்ணுவது புதிதல்லவே!
Deleteஜெயமோகனை பாஜக சார்பானவர் என்று பார்ப்பதால்தான் அவருக்கு எதிராக இப்படி பொங்குகிறார்களோ?
ReplyDeleteகொஞ்சம் பிரபலமாக இருந்தால், பொது இடத்தில் ரொம்ப கவனமாக நடந்துகொள்ளவேண்டும் என்று காட்டிய சம்பவம் அது.
ஜெமோ சந்தர்ப்பத்துக்கேற்ற மாதிரி சட்டையை மாற்றிக் கொள்கிறவர்! இந்த விவகாரத்தில் கூட திமுகவைப் பண்புள்ள அறிவுள்ள கட்சி என்றுதானே சொல்லியிருக்கிறார்! இதில் கட்சி சார்பு எங்கிருந்து வந்தது? கடைக்காரப்பெண்மணியிடம் கொஞ்சம் தன்மையாகப் பேசியிருந்தால், அடிதடி எப்படி வந்திருக்கும்? ஒரு சிராய்ப்பு சின்ன அடிதடிக்காக போலீஸ் புகார் கொடுத்து விட்டு அரசு ஆஸ்பத்திரியில் போய் உட்கார்ந்து கொண்டதில், எங்கெங்கே இடிக்கும் எவ்வளவு நேர விரயம் என்று ஒரு மருத்துவர் நொந்துபோய் முகநூலில் எழுதியிருக்கிறார்.
Delete