அரசியலில் சிரிப்புக்குப் பஞ்சமே இருந்ததில்லை என்பது என் 50+ வருட அனுபவம். பா.ரஞ்சித் ராஜராஜ சோழனைப் பற்றி ஏடாகூடமாக எதையோ பேசப்போக #PrayForMentalRanjith என்ற ஹேஷ்டாகில் கூடுதல் விளம்பரம் அதுவும் ஓசி விளம்பரமாகக் கொடுத்துக் கொண்டிருப்பது தமிழ் இணைய வினோதங்களில் ஒன்று என்பதற்கு மேல் என்ன சொல்ல?
யாரது திமுக தலீவருக்கு இப்படிப் பகிரங்கமாக சவால் விடுவது என்று பார்த்தால் "சட்டசபையை கூட்டி தண்ணீர் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் முழங்கி இருக்கிறார். அது சரி, அப்படியே சட்டசபையை கூட்டிட்டா அதிகபட்சமா திருவாளர் துண்டுச்சீட்டு என்ன பண்ணுவாரு? சறுக்கியது சாக்குன்னு கண்டதையும் காரணமாக்கி வெளிநடப்பு செய்வாரு, பத்திரிக்கையாளர்களை கூட்டி வைச்சு ஒப்புக்கு ஒரு காரணம் சொல்லிபுட்டு உல்லாச காரில் ஓய்வெடுக்க போயிடுவாரு. அதுக்கு மேலயும் உச்சகட்டமாக நாட்டுக்கு ஏதாவது செய்யனும்னா தன் சட்டையை தானே கிழிச்சிக்கிட்டு தமிழகமே பார் என்று கட்டுக்கதை கட்டி கழக அரசை பழிக்க திட்டங்கள் தீட்டுவாரு. .....அதை விடுத்து சட்டசபை கூட்டத்தொடரை திமுக வழக்கம்போலவே சண்டை களமாக மாற்ற முயற்சித்தால் தமிழகத்து மக்கள் திமுக ஒரு திருந்தாத தண்டத்து கட்சி என்ற முடிவுக்கு தான் வருவார்கள்’’ இப்படி சட்டசபை கூட்டத்தொடரும் சட்டை கிழிப்பு சாதனையாளரும் என்கிற தலைப்பில் நமது அம்மா நாளிதழ் கட்டுரை ஒன்றை இன்று வெளியிட்டிருப்பதாக செய்தி மேலும் விரிகிறது.
முரசொலியைக் கூட அவ்வப்போது பார்ப்பதுண்டு. ஆனால் அதிமுக சார்புள்ள பத்திரிகைகள் எதையும் படித்தது இல்லை என்பதனால் இது கொஞ்சம் ஆச்சரியமான விஷயம்! பதிலுக்குப் பதில் உடனடியாகவே தருகிற சாமர்த்தியம் அதிமுகவிலும் இருக்கிறது என்பது இன்றைக்கு ரசித்துப் படித்த அரசியல் காமெடிக் காட்சி! செய்தி!
திசைகள் 4 நிகழ்ச்சி முதலானவை வேந்தர் டிவியுடையதா சாணக்யாவுடையதா என்ற குழப்பம் எனக்கிருந்ததை இந்தப் பேட்டியில் கேபிரியல் தேவதாஸ் கேட்டுத் தெளிவு படுத்தியது ஒன்று உருப்படி. மற்றப்படி கேபிரியல் கேள்வி கேட்பதற்கே பம்முகிறார்! ரங்கராஜ் பாண்டே வழக்கம்போல தன்பாணியில் தகவல்களைத் தருகிறார்
வாய்விட்டுச் சிரிக்கவைத்த இந்து தமிழ்திசையின் செய்தித் தலைப்பு இது! ஆனால் செய்திக்குள் போய் ரோஜாவின் பேட்டியை வாசித்தால்...! இந்து நாளிதழ் ஆங்கிலமோ தமிழோ எதுவானாலும் காமெடிப்பீசுகளாக மட்டுமே ஊடகத்துறையில் இருப்பதென்று முடிவுகட்டியே செய்திகள் எழுதுகிற மாதிரித் தான் தெரிகிறது.
நடிகர்சங்கத் தேர்தல் நடக்கப் போகிறதாம்! அதைப்பற்றிப் பேசாமல் அரசியல் காமெடிக்காட்சிகள் எப்படி முழுமை அடையுமாம்?
ஒரு அணிக்கு ஆதரவாம்! எந்த அணிக்கென்று சொல்லமாட்டேன் என்பவர் எதற்கு கருத்து சொல்ல வேண்டும்? எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க ஊடகங்கள் இப்படி முண்டியடித்துக் கொண்டு எதற்காக இவரிடம் கேள்வி கேட்கவேண்டும்? செம காமெடியா இருக்கும் போலயே!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment