Tuesday, June 4, 2019

எது பொருட்படுத்தப்பட வேண்டியதோ அதைக் கவனிப்போமே!

முந்தைய பதிவில் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வாக சில நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள இருப்பதாக ஒரு கோடி காட்டியிருந்தேன். Delimitation என்றால் என்ன? அதனால் என்ன பயன் விளைந்து விடும்? கொஞ்சம் புரிந்து கொள்வோமே! தொகுதி வரையறை என்பது ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஜனத்தொகை அடிப்படையில் மறுசீரமைப்புச் செய்யப் பட வேண்டியது. காஷ்மீரில் அதைச் செய்யத் தவறியதால் ஜனத்தொகை அதிகமுள்ள பகுதிகளுக்கு குறைந்த தொகுதிகளும் குறைந்த அளவு ஜனத்தொகைக்கு அதிகத்தொகுதிகளும் என்பதான கபடம் செயற்கையாக அரங்கேற்றப் பட்டதை, சரிசெய்கிற முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டும்.   
  
  
அமித்ஷாவின் அதிரடி ஆரம்பம்-
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வரையறுக்கப் பட்ட சட்டமன்ற தொகுதிகளை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் பரப்பளவு அடிப்படையிலும் வாக்காளர்கள் அடிப்படையில் காஷ்மீர் ரீஜனை விட பெரியதாக இருக்கும் ஜம்மு ரீஜனுக்கு அதிக சட்டமன்ற தொகுதிகளும் லோக்சபா தொகுதிகளையும் அளிக்கப்பட இருக்கிறது.
ஜம்மு ரீஜனின் பரப்பளவு 26,293 km2 இங்கு உள்ள சட்டமன்ற தொகுதிகள் 37 லோக்சபா
தொகுதிகள் 2 மட்டுமே. ஆனால்15,948 km2 பரப்பளவு கொண்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு 46 சட்டமன்ற தொகுதிகள் 3 லோக்சபா தொகுதிகள் இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலேயே பெரிய பகுதியான லடாக் ரீஜனில் ஒரு லோக்சபா தொகுதியும் 4 சட்டமன்ற தொகுதிகளும் இருக்கின்றன.லடாக் 59,196 km2 பரப்பளவை கொண்டு இருந்தாலும் மக்கள் தொகை 4 லட்சத்தை தாண்டாது.
இதனால் ஜம்மு ரீஜனில் மட்டும்சட்டமன்ற மற்றும் லோக்சபா தொகுதிகளை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படை யில் இன்னும் 15 சட்டமன்ற தொகுதிகளும் இரண்டு லோக்சபா தொகுதிகளும் ஜம்மு ரீஜனில் அதி கரிக்க ப்பட்ட வாய்ப்புகள் இருக்கிறது. இத னால் ஜம்மு ரீஜனில் மட்டும் 52 சட்டமன்ற தொகுதிகளாக உயர்ந்து விடும்.
அதே மாதிரி காஷ்மீர் ரீஜனில் 15 சட்டமன்ற தொகுதிகளை குறைக்கவும் ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அப்படி 15 சட்டமன்ற தொகுதிகள் காஷ்மீர் ரீஜனில் குறைக்கப் பட்டால் அங்குள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 46 ல் இருந்து 31 ஆக குறைந்து விடும். இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆட்சியை தீர்மானிக்கும் உரிமையை காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி இழந்து விடும்.
அப்படி ஜம்மு ரீஜனில் சட்டமன்ற தொகுதிகள் அதிகரிக்கப்படும் பொழுது ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 87 ல் மெஜாரிட்டிக்கு தேவையான 44சட்டமன்ற எம்எல்ஏ க்களை ஜம்மு லடாக் பகுதிகளில் இருந்து பெறுகிற கட்சி ஜம்மு காஷ்மீர் மாநில த்தில் ஆட்சி அமைக்க முடியும்.
— Guru Krishna உடன்.

A note regarding the legal position as it applies to the freeze on delimitation as it applies to J&K. It’s important to note that this freeze was only brought to bring the state at par with the rest of the country. This is made clear by the note below. I hope some of the TV channels & experts appraise themselves of these facts என்று 2001 இல் தங்கள் கட்சி அரசு கொண்டுவந்த திருத்தத்தை நியாயப்படுத்துகிறார் ஒமர் அப்துல்லா  ட்வீட்டரில் இப்படி சவால் வேறு! 
ரிபப்லிக் டிவியில் இதைக்குறித்து காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டே இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஷேக் அப்துல்லா வாரிசுகளும் முஃப்தி முகமது சயீது வாரிசுகளுமே மாறிமாறி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஆளவேண்டுமென்கிற நிலைமை மாறுவதை இரு தரப்புமே எதிர்க்காமல் வேறென்ன செய்வார்கள்?

மீண்டும் சந்திப்போம்.
















·













2 comments:

  1. இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே!..

    ReplyDelete
    Replies
    1. காஷ்மீர்ப்பிரச்சினைக்குத் தீர்வு வரும், வந்துகொண்டே இருக்கிறது என்பதே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்று கூத்தாடிக் கொண்டாட வேண்டிய செய்திதான் துரை செல்வராஜூ சார்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)