Thursday, April 2, 2020

ச்சும்மா ஜாலிக்கு! ஒரு திரைப்பட விமரிசனம் : HIT (the first case) தெலுகு

மல்லுத்திரைப்படங்கள் மட்டும் தான் உசத்தி! கதையைத் தேர்ந்தெடுப்பதாக ஆகட்டும், நடிகர்களைத் தேர்வு செய்வதாகட்டும், இப்படி எல்லாவற்றிலும் சிகரங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிற மாதிரி சமீபநாட்களில் நிறைய நண்பர்கள் பீலா விடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அய்யப்பனும் கோஷியும் என்கிற ஒருபடத்தை வைத்து ஏகப்பட்ட அலப்பறைகள்! இருதனிநபர்களுடைய ஈகோ மோதலை மையமாக வைத்து இதே ப்ருத்வி ராஜ் சுகுமாரன் டிரைவிங் லைசன்ஸ் என்று இதற்கு முன்பும் ஒரு சராசரிப்படத்தைக் கொடுத்திருக்கிறார் என்பது மல்லுத்திரைப்பட அபிமானிகளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும் AK படத்தைவைத்துச்செய்த அலப்பறைகள் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் தெலுங்குத்  திரை உலகம் இந்தமாதிரி அலப்பறைகள் எதுவுமில்லாமல், நல்ல படங்களைக் கொடுத்துக் கொண்டு வருவது ஏனோ இந்தமாதிரித் தம்பட்டங்களுக்கு கண்ணில் படுவது இல்லை. ஒரு தெலுங்கு த்ரில்லர் படத்தை இன்றைக்குப் பார்த்த அனுபவத்தைக் கொஞ்சம் சொல்லட்டுமா? 

 

யூட்யூபில் 2 நிமிட ட்ரெய்லரை இணைக்க முயற்சித்தால் வேறென்னவோ வந்து நிற்கிறமாதிரி இருக்கிறது. அதனால் நேரடியாகத் திரைப்பட விமரிசனத்துக்குள் போய்விடலாம். முதலில் என்னைப் பொறுத்தமட்டில் இதில் நடித்திருக்கும் பெரும்பாலானவர்கள் கொஞ்சம் கூட அறிமுகமே இல்லாத புதுமுகங்கள்! கதாநாயகன் விஷ்வக் சென் ஆகட்டும், கதாநாயகி ரூஹானி ஷர்மா ஆகட்டும், எனக்கு சற்றும் பரிச்சயம் இல்லாதவர்களே! நாயகன் விக்ரம் ருத்ரராஜுவின் அறிமுகக் காட்சியிலேயே ஒரு விதமான அதிர்ச்சி, மன அழுத்தத்துக்கு ஆளான போலீஸ் அதிகாரியாக மனநல மருத்துவரைச் சந்திக்கிறவராக! PTSD என்றால் தெரியுமில்லையா? 

Posttraumatic stress disorder (PTSD) is a serious mental condition that some people develop after a shocking, terrifying, or dangerous event. These events are called traumas. After a trauma, it's common to struggle with fear, anxiety, and sadness. You may have upsetting memories or find it hard to sleep. நாயகனுடைய சொந்த வாழ்க்கையிலும் அப்படி ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் இருந்திருக்கிறது. அது ஆழ்மனபாதிப்பை ஏற்படுத்தியிருப்பதில், மனநல மருத்துவர் போலீஸ் வேலையை விட்டு விடும் படி சிபாரிசு செய்கிறார். ஆனால் நாயகனுக்கோ வேலையை விட்டு விட்டால் அதுவே பைத்தியம் பிடிக்க வைத்துவிடும் என்பதான மனோநிலை.

நாயகனுக்குத் துப்புத்துலக்குவதில் அபாரத்திறமை என்பதை அடுத்துவரும் காட்சி விவரிப்பதுடன் கதை கொஞ்சம் வித்தியாசமான திரைப்படத்தைப் பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டு வேகமாக நகர்கிறது. நாயகனுடைய காதலி நேகா, அவளும் forensic department இல் இருப்பவள்தான், மனநலமருத்துவர் சொல்கிறபடி நாயகன் உடல்நலத்தை முதலில் கவனித்துக் கொள்ளும்படி வேண்டியும் கூட நாயகன் பிடிவாதமாக மறுக்கிறான். அதற்கடுத்த காட்சியில் நேகா காரை ஓட்டிச்செல்கிற வழியில், கார் மக்கர் செய்து நின்றுவிடுவதில் காணாமலும் போய்விடுகிறாள்.
நாயகனுக்கு, நாயகியைத் தேடுகிற வேலையோடு, இதேமாதிரி சூழ்நிலையில் காணாமல் போன ப்ரீத்தி என்கிற பெண்ணுக்கு என்ன ஆயிற்று என்பதையும் தேடுகிற வேலை.

வழக்கமாகத் துப்புத்துலக்குகிறவன் கதையென்றால், காட்சிகளுக்கு உள்ளாகவே தடையங்களையும் சேர்த்தே காண்பித்துத்தானே எடுத்திருப்பார்கள், அந்தவகையில், இந்தப்படம்  மட்டும் என்ன வித்தியாசம், எதனால் ஒசத்தி என்று கேட்பீர்களேயானால், படத்தை எழுதி இயக்கியிருக்கிற சைலேஷ், ஒரு சராசரி துப்பறிவாளன் கதைபோல இயந்திரத்தனமாக நகர்த்தாமல், அடுத்தடுத்து வரும் காட்சிகளில் பார்ப்பவர் உணர்ச்சிகளோடு ஒன்றச் செய்திருக்கிறார் என்பது முதலாவது. அடுத்ததாக நடிகர்கள் கதைக்காக மட்டுமே இயங்குகிறார்கள், தங்களுடைய பாத்திரத்தை செம்மையாகச் செய்து பார்ப்பவர்களையும் கதையோடு ஒன்றச் செய்வதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பது. இதில் நாயகன் விக்ரம் எப்படித் துப்புத் துலக்கி என்ன கண்டுபிடிக்கிறான் என்ற வழக்கமான பாணி இல்லை. அது இரண்டாம்பட்சம்தான்! அதனால் கதையை முடித்திருக்கிற விதம் சிலருக்கு அத்தனை பிடித்தமானதாக இல்லாமலிருக்கலாம்.   

பிப்ரவரி இறுதியில் வெளியான இந்தப்படத்துக்கு வரவேற்பு இருந்ததாம்? தினேஷ் நாயுடு என்கிற ஒரிஜினல் பெயர் கொண்டு  சினிமாவுக்காக விஷ்வக் சென் ஆகிப்போன 24 வயதே நிரம்பிய நாயகன் இதனுடன் சேர்த்து மூன்று படங்களில் நடித்திருக்கிறார். ஒரு படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். இந்தப்படம் அவருக்கு முதல் ஹிட் படமாகவும் ஆகியிருக்கிறது என்கிறது பாக்ஸ் ஆபீஸ். அந்த நம்பிக்கையில் இதை முதலாவது கேஸ் என்று தலைப்பிலேயே hint கொடுத்திருக்கிறார்கள். கடைசிக் காட்சியிலும் கூட இதன் அடுத்த seuel இருக்கும் என்பதற்கான hint உம் கொடுக்கப்பட்டிருக்கிறதே, அது போதாதா?

மீண்டும் சந்திப்போம்.   
         

6 comments:

  1. //அய்யப்பனும் கோஷியும் என்கிற ஒருபடத்தை வைத்து ஏகப்பட்ட அலப்பறைகள்!//100% உண்மை!. இந்தப் படத்தைப் பற்றி மத்யமரில் ஆஹா! ஓஹோ! என்று புகழப்பட்டிருந்ததை படித்து விட்டு படம் பார்த்து ஏமாந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா!

      ஒன்றுமே இல்லாத விஷயத்தைக் கூட மிகச்சிறந்த கலைவடிவம் என்று தம்பட்டம் அடிப்பதில் மல்லுதேசத்துக்குத் தனித்திறமை உண்டே ! ஈகோ மோதல் என்ற ஒருவிஷயத்தை வைத்து இதே பிருத்விராஜ் டிரைவிங் லைசன்ஸ் என்றொரு படத்தில் நடித்திருந்தார். அடுத்து இந்தப்படம்.

      இந்தத் தெலுங்குப்படத்தை முடிந்தால் பாருங்கள். கொஞ்சம் வித்தியாசமாகப் படம் எடுப்பதில் மல்லுத் திரையுலகையும் விட டோலிவுட் முன்னணியில் இருப்பதை புரிந்துகொள்ள முடியும்.

      Delete
  2. இன்று தான் படம் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. உங்கள் கதை நேரேஷனில் சிறிய தவறு. //அதற்கடுத்த காட்சியில் நேகா காரை ஓட்டிச்செல்கிற வழியில், கார் மக்கர் செய்து நின்றுவிடுவதில் காணாமலும் போய்விடுகிறாள்.// நேகா அப்படி காணாமல் போகவில்லை. வீட்டிலிருந்து கடத்தப்படுகிறார்.

    Agent Sai Srinivas Athreya படம் பாருங்கள். உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்

    இது போன்ற இளைஞர்கள் நம்பிக்கை தருகிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பந்து!

      நலம் தானே! உங்கள் ஏரியாவில் கொரோனா பரவல் அதிகம் இல்லாமல் இருக்கிறதா?

      இப்போது நிறையத் தெலுகு, கன்னடப்படங்களையும் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். பிரஷர் குக்கர் என்கிற தெலுங்குப்படத்தில் பரிச்சயமான முகம் பரணியைத் தவிர வேறெவரும் இல்லை. பிள்ளை அமெரிக்கா போய் செட்டிலாகிவிடவேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிற தந்தை என்று ஆரம்பித்துக் கதை பின்னியிருப்பது இன்றைய கள யதார்த்தத்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. படமும் பிடித்திருந்தது. புதியவர்கள் மிகவும் வித்தியாசமாகக் கதையைக் கையாளத் தொடங்கியிருக்கிறார்கள்.

      Delete
  3. இங்கு அவ்வளவாக இல்லை. san francisco bay area .

    என்ன... ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம். உள்ளே இருப்பது ஈறும் பேனும் தான்! என்று அமெரிக்கா / ஐரோப்பா medical facilities பல்லை இளித்து விட்டது!

    ReplyDelete
    Replies
    1. மருத்துவ வசதிகள் பல்லிளித்துவிட்டது என்று சொல்வதை விட சீனர்களுக்கு outsourcing இல் அதிக இடம் கொடுத்ததே இன்றைய நெருக்கடிக்குக் காரணமாகத் தெரியவில்லையா பந்து?

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)