தினத்தந்தி மாதிரி ஒரு பச்சோந்தி ஊடகத்திலிருந்து கார்டூனிஸ்ட் மதி வெளியேற்றப்பட்டு இருப்பது பல வகையில் அவருக்கே மிகவும் நல்லதுதான்! அவர் காலமும் கார்டூன்களும் நிச்சயம் வெல்லும்! வாசகர்கள் மனம் நிறைந்து வாழ்த்துகிறோம்! வாழி நலம் சூழ! அடடே! மதி வரைந்த கார்டூன்களின் சிறு தொகுப்பாக இந்தப்பதிவு.
இசுடாலின் தினத்தந்தி ஆதித்தனுக்கு கடிதம் எழுதினார். தினத்தந்தியும் வருத்தம் தெரிவித்தது. கார்டூனிஸ்ட் மதியை வீட்டுக்கு அனுப்பியது.
ஊடகங்களின் மீதான தங்களுடைய பிடியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்ட மாதிரியும் ஆயிற்று! தயாநிதி மாறன் பிரதமரையும் மக்களையும் பிச்சைக்காரர்கள் என்று உளறிய விவகாரத்தில் இருந்து கவனத்தை திசைதிருப்பிய மாதிரியும் ஆயிற்று!
வெறும் அக்கப்போர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ் ஊடகங்கள், சேனல்களுக்குத் தீனி போடுகிற மாதிரியே தெரிந்தோ தெரியாமலோ சிலபல அரசியல் நிகழ்வுகள் அனர்த்தப்படுத்துகிற விதத்தில் நடந்துவிடுகின்றன.
ஒரே தேசம் ஒரே தேர்தல் விஷயமாக பிஜேபி நடத்திய அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் போன அதிமுக அமைச்சர் சிவி சண்முகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதா என்கிற அக்கப்போர் மீது ரவீந்திரன் துரைசாமியின் அனுமான அக்கப்போர் இது.
இது காங்கிரசின் ராகுல் அக்கப்போர்! களநிலவரம் குறித்து ராகுலுக்குத் தெரிவிக்கப்பட்டும் கூட புறக்கணிக்கப்பட்டதன் பின்னணி என்ன என்று இங்கே அலசுகிறார்கள். எதற்காம்? சௌகிதார் சோர் ஹை என்று திரும்பத்திரும்ப சிறுபிள்ளைத் தனமாகப் பேசிக்கொண்டிருந்தவருக்கு ஜனங்கள் மனநிலையைப் பற்றி பெரிதாக என்ன அக்கறை இருந்திருக்கப் போகிறது? வாரிசு என்பதைத் தவிர, தலைமைக்குத் தகுதியான குணம் எதுவுமே ராகுலிடம் இல்லை என்கிறபோது இந்த விவாத அக்கப்போர் என்ன சாதித்துவிடப் போகிறது?
Congress's Rahul Gandhi, who stepped down from the position of the party chief after the abysmal performance in the Lok Sabha election, made it clear today that he is sticking to his decision and would not be involved in the process of the selection of the new party chief. என்கிறது என்டிடிவி செய்தி. வந்தா ராஜாவாத்தான் வருவேன் இல்லேன்னா விழுந்து படுத்துப்பேன் என்று ஆர்வமில்லாதவர் இன்றைக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றிக் கொண்டிருந்தபோது செல்போனையே நோண்டிக்கொண்டிருந்த காட்சியை நேரடி ஒளிபரப்பில் பார்த்தீர்களா?
ஏதாவது முக்கியமா இருக்கும்.
ஜனாதிபதி பேச்சு ரெக்கார்டிங் கிடைக்கும். அப்புறம் கேட்டுக்கலாம். ஒண்ணும் கெட்டுப் போயிடாது .இது பெரிய மேட்டரும் இல்ல.
இதைப் போயி செய்தியா போடற அளவுக்கு ... #கொடுமை தான்
Translate Tweet
Quote Tweet
Dinamalar
@dinamalarweb
·
ஜனாதிபதி பேசும்போது போனில் மூழ்கிய ராகுல் #ஜனாதிபதிஉரை#Congress#Rahul(link: https://www.dinamalar.com/news_detail.asp?id=2302180) dinamalar.com/news_detail.as…
திமுக அடுத்த போராட்டம் நடத்த, மக்களைத் தூண்ட தயார் ஆகி விட்டார்கள். இப்போது மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது :
ஒரு நாளைக்கு 2.1 லட்சம் முதல் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை எடுத்துப் பயன்படுத்தும் திமுக ஆதரவாளர்கள் நிர்வாகிகள் நடத்தும் எந்த சாராய உற்பத்தி நிறுவனங்களைப் பற்றியும் பேசாத திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ,
அந்த நிறுவனங்களால் சென்னையும் காஞ்சிபுரமும் வேலூர் போன்ற மாவட்டங்களும் நிலத்தடி நீர் நாசமானதைத் திசை திருப்ப முயற்சிக்கும் தந்திரமான அரசியலைச் செய்யும் திமுக அரசியல் எவ்வளவு கீழ்த்தரமானது என்பதை மக்கள் உணருங்கள்.
சென்னை மக்கள் முதலில் எதிர்க்க வேண்டியது திமுக என்ற கட்சியைத் தான். அவர்கள் சாராய நிறுவனங்கள் தான் உங்கள் நிலைக்கு முக்கிய காரணம். அத்தோடு நீங்களும் காரணம் என்பதை மறக்க வேண்டாம்.
எவர் போராட்டம் செய்யத் தூண்டுவதை விட ஆரோக்கியமாக அரசியல் களத்தில் வேலை செய்தாரோ அவரே நிச்சயமான மாற்று. அந்த விதத்தில் மார்ச் மாதமே பருவகால மழைக்கும் முந்தைய மழை பொழிவு குறைவாகக் கிடைக்கிறது என்றதும் - அதனால் தண்ணீர் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை என்றதும் களத்தில் தண்ணீர் கொண்டு சேர்த்த ரஜினி மக்கள் மன்ற தொண்டர்கள் தவிர எவருக்கும் இங்கே எனக்குத் தெரிந்து பேசத் தகுதி கிடையாது.
அதிகம் நதிகள் இணைப்பு சார்ந்து ஆர்வம் காட்டுவதும் ஆரோக்கியமான தீர்வுகளைத் தேடுவதும் எனக்குத் தெரிந்து தமிழகத்தில் ரஜினி என்ற மனிதர் மட்டுமே.
22 திமுக போராட்டம் - அதைத் தொடர்ந்து என் காணொளி வெளியாகும். திமுக போடும் வேசம் வெட்டவெளிச்சமாக்கப்பட வேண்டும்.
-மாரிதாஸ் முகநூலில் இன்று பகிர்ந்தது. ரஜனி மட்டும் தானா? இந்த விஷயத்தில் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் அங்கங்கே தூர் வாரும் பணியில் தங்களை பரவலாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.கமல் காசருடைய மய்யம் கூடச் சென்னையில் மழைநீர் சேகரிப்புத்தொட்டிகளை இலவசமாக விரும்புகிற மக்களுக்கு நிறுவித்தர முன்கை எடுத்திருக்கிறார்கள். திமுக ஆசாமிகள் தயாநிதி மாறன், மா சுப்ரமணியன் போன்றவர்கள் அங்கங்கே தண்ணீர் லாரிகளுடன் வந்து தண்ணீர் தருகிற போட்டோ சாங்கியத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.
கனிமொழி சக கவிஞர் தான்.அவங்க நாடாளுமன்றத்துக்குப் போய் சொத்து சேர்த்தத தவிர நாட்டுக்கு ஒரு நல்லதும் செய்யல. எழுத்தாளர்கள் நாடாளப் போயிட்டாங்க,இனி நாடு சுபிட்சமாயிடும்னு பினாத்தறவங்க சகாயம் எதிர்பார்க்கிறவங்க. அதுல அலட்டிக்கிறதுக்கு ஒன்னும் இல்லை.
கவிஞர் கனிமொழி பற்றிய குறிப்புடன், நாடாளப் போயிருக்கும் எழுத்தாளர்களால் பெரிய மாற்றங்கள் நடந்துவிடாது என்ற விமர்சனத்துடன் கூடிய எனது ட்வீட்டுக்கு, திமுக கட்சிக்காரர்கள் “X தி மகளேயில் தொடங்கி தேவிடியா வரை” கீச்சிக் கொண்டிருக்கிறார்கள்.தமிழ் வாழ்க, அண்ணா வாழ்க, பெரியார் வாழ்க.