Wednesday, November 11, 2020

#தனிக்கச்சேரி பீஹார் தேர்தல் முடிவுகளும் ரீல் அறுந்து தொங்கும் காங்கிரசும்!

பீஹார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் கொஞ்சம் லேட்டாக வந்தாலும், முக்கியமான சில விஷயங்களைத் தெளிவாகச் சொல்கிற மாதிரி வந்திருக்கிறது. இதை பிஜேபியின் வெற்றியாகப் பார்க்கப் பொறுக்காத சில ஊடகங்கள் பீஹாரின் சாணக்கியர் நிதீஷ் குமாரின் நிர்வாகத் திறமைக்கு கிடைத்தது என்று ஆரம்பித்து, அப்புறம் தான் பிஜேபியும் வெற்றிக்கு இன்னொரு காரணம் என்று இழுவையாகச் சொல்ல முயன்றதை இன்று பார்க்க முடிந்தது. ஒரு சாம்பிளுக்கு பர்கா தத்! 


பெரும்பாலானஇந்திய ஊடகங்கல்  நேர்மையான செய்திகளை  வழங்கியதே இல்லை என்பதை 2004 முதலே பார்த்திருக்கிறோம் இல்லையா! பர்கா தத் இப்படியென்றால் இன்னொரு ஊடகத்தில் கீழே! 


தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புக்களில் தேஜஸ்வி யாதவ் தான் பீஹார் முதல்வராகிறார் என்று தம்பட்டமடித்த அதே ஊடகங்கள் தான்  இப்படி சாமர்த்தியமாக தேர்தல் முடிவுகள் இப்படித்தான், எந்த மாற்றமும் இல்லை என்கிற மாதிரிப் பூசிமெழுகப் பார்த்தன. ஆனாலும் இந்தத் தேர்தல் முடிவுகளில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக அசாதுதீன் ஒவைசி தலைவராக இருக்கும் AIMIM கட்சி 20 இடங்களில் போட்டியிட்டு முதல்முறையாக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது. சிறுபான்மைக் காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் லாலுவின் RJD, காங்கிரஸ் கட்சிகளைத் தாண்டி இஸ்லாமியர்களின் வாக்குகள் ஒரு இஸ்லாமியக் கட்சிக்கு கிடைத்திருப்பது கூர்ந்து கவனித்தால் புரியும். 


Big Parties Treated Me Like Untouchable: says Asaduddin Owaisi வீடியோ 10 நிமிடம்  

இங்கே காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 19 சீட்டுகள் என்று சொல்லும் போது CPIML கட்சி 11 இடங்களிலும் வலது, இடது கம்யூனிஸ்ட் காட்சிகள் முறையே 2 மற்றும் 3 இடங்களில் ஜெயித்திருப்பது இன்னொரு ஆச்சரியம். 70 தொகுதிகளில் கடந்த 2015 தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் 27 இடங்களில் வெற்றி பெற்றது இப்போதும் அதே 70 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 19 இடங்களை மட்டுமே வெற்றி என்று ராகுல் காண்டியின் முகத்துக்கு, பிரசாரத்துக்கு கிடைத்த சறுக்கல் என்று நான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?

2015 தேர்தலை விட இந்தத்தேர்தலில் பிஜேபி 74 (+21) இடங்களில்  வெற்றி பெற்றிருக்கிறது. நிதீஷ் குமாரின்JDU வெறும் 43 (-28) இடங்கள் பெற்றிருக்கிறது. சென்ற தேர்தலில் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற கூட்டணி உதிரிகள் இப்போது 9 இடங்களில் வெற்றி பெற்று மொத்தம் 125 என்று மெஜாரிடி கிடைத்து இருக்கிறது தேர்தலுக்கு முன்பு அறிவித்தபடியே பிஜேபி இப்போதும் தங்களுடைய கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்தான் என்று தனது கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றியிருக்கிறது இது இப்போது மட்டுமல்ல 2005 தேர்தல்களிலும் நிதீஷ் குமார் கட்சியை விட பிஜேபி அதிக இடங்களில் ஜெயித்திருந்த போதிலும் தேர்தலுக்கு முன் அறிவித்திருந்தபடியே நிதீஷ் குமாரை முதல்வராக்கியது என்பதோடு ஆனால் நிதீஷ் குமார் அப்படி நடந்து கொண்டதில்லை.என்பதையும் சேர்த்து இந்த நேரத்தில் சொல்லியே ஆக வேண்டும்!. 

சிராக் பாஸ்வானுடைய LJP எதிர்பார்த்தபடியே நிதீஷ் குமாரை நிறையவே பஞ்சர் செய்திருக்கிறது. நிறையத் தொகுதிகளில் வெற்றி மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் என்பதே சாட்சி! உதிரிக் கட்சிகளால் இந்தமாதிரி பஞ்சர் செய்யத்தான் முடியும், உருப்படியாக வேறு எதையும் செய்ய முடியாது என்பதை நான் பலமுறை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வருகிறேன்.

இந்தத் தேர்தலின் இன்னொரு ஆச்சரியம் லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ்! லல்லு பிரசாத் யாதவின் மோசமான இமேஜையும் மீறி, கொஞ்சம் நம்பிக்கையளிக்கிற மாதிரியான தேர்தல் செயல்பாடுகள்! கொஞ்சமும் சளைக்காமல் தேர்தல் பிரசாரம் செய்தவிதம் பாராட்டியே ஆக வேண்டும்! ராகுல் காண்டி எதையும் கற்றுக்கொள்கிற பிறவி இல்லை என்பதால் News 18 தளத்தில் ஜோ பைடன், தேஜஸ்வி யாதவ் இருவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று எழுதியது வெறும் நப்பாசை தான்!         

Naysayers may have rejected the Modi government’s plan to provide free ration to more than eight crore people of Bihar, but by doing this, the Prime Minister has ensured that not a single person goes hungry to the bed in the night. Out of the 4.7 crore accounts opened under the Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) in Bihar, more than 2.5 crore belong to women. The government has transferred more than Rs 13,000 crore into these accounts. It became difficult even for leaders of the opposition parties to discount these welfare measures that have benefitted a large segment of the population. The opening up of academic institutions of eminence such as AIIMS, Nalanda University and NIFT among others, and infrastructure development like airport in Darbhanga, will transform the lives of the people of Bihar.

Prime Minister Modi has asserted that the development of India is incomplete without the development of Bihar. 

இப்படி ஒரு கருத்து வெளியாகியிருப்பது சேகர் குப்தாவின் The Print தளத்தில் தான் என்றால் அது மிகப் பெரிய ஆச்சரியம். 

மீண்டும் சந்திப்போம்.  

2 comments:

  1. தேஜஸ்வி மக்களுக்கு ஒரு நம்பிக்கை அளித்திருக்கிறார் (குறைந்தபட்சம் அவர் கட்சிக்கு).

    பாஸ்வான் கட்சியினால் நிதீஷின் வெற்றி குறைந்தது. இல்லாவிடில் 140 பெற்றிருக்கக்கூடும் (மொத்தமா).

    Thatstamil, Minnambalam போன்ற ஊடகங்கள் விளம்பர வருவாய் மற்றும் அவங்களுக்கே உரிய அரசியல் உணர்வினால், செய்திகளைத் திரித்துத்தான் வெளியிடும். இப்போது அதில், காங்கிரஸுக்கு தமிழகத்தில் அதிக சீட் போட்டியிட திமுக ஒதுக்கக்கூடாது என்ற கருத்தைப் பரப்பி வருகிறது. அவைகள் பல சமயம், திமுகவின் ஊதுகுழலாகச் செயல்படுகின்றன (அப்படி என்றாலே Anti National Voiceதான் வரும்)

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நெத,!

      பதிவின் நீளம் கருதி நான் சொல்லாமல் விட்ட ஒரு முக்கியமான விஷயம், பிஜேபியின் வலுவான ஸ்தாபனக் கட்டமைப்பு! தமிழ்நாடு பிஜேபி கிளை மாதிரி இல்லாமல் இந்தியா முழுவதும் ஒரு ஒழுங்கு, கட்டுப்பாட்டுடன் செயல்படக்கூடிய தொண்டர்களைக் கொண்ட அமைப்பாக இருப்பது பீஹாரிலும் இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட வலுவான ஸ்தாபனாக் கட்டமைப்பு கொண்டவையாக இருந்தவைதான்! காலம் இடது, வலது,CPI-ML என்று உடைந்துபோனபிறகு ஸ்தாபனக்கட்டமைப்பு நிறையவே நீர்த்துப்போக வைத்திருக்கிறது இல்லாவிட்டால் வலதுசாரி பிஜேபிக்கு சரியான மாற்றாக இடதுசாரிகள் இருப்பது இயல்பாகவே நடந்திருக்கும். இங்கே காங்கிரஸ் உள்ளிட்ட வேறெந்தக் கட்சிக்கும், கட்சி அமைப்பு உட்கட்சி ஜனநாயகம், விவாதங்கள் எதுவுமே இல்லை. இவையெல்லாம் மக்காத குப்பைகளாக இன்னமும் நீடிப்பது ஜனங்களாகிய நம்முடைய குற்றமே.

      இங்கே கழகங்களுடைய அரசியல் வேறு ரகம். காங்கிரசும் சரி, கழகங்களும் சரி, பணபலத்தால் ஊடகங்களை வளைத்துப் போடா முடிகிறது. ஊடகக்காரர்களும் சந்தோசமாய் விலைபோக்கத்தயாராகத்தான் இருக்கிறார்கள் என்பது காலத்தின் கோலம்.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)