சிங்காரச் சென்னை வெர்ஷன் 2.0 வரப்போகிறது என்பது கொஞ்சம் பழசு! இப்போது சென்னையில் கோழிதிருடக் கூடக் காரில் வந்திறங்குகிறார்கள் என்கிறது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். கொரட்டூர் காவல்துறை 10 நாட்டுக் கோழிகளைத் திருடிச்சென்றவர்களைத் தேடுகிறார்கள் என்று விவரிக்கிறது.
இது வேறுவிதமான சோஷலிசக் கொடும் காமெடி!
இது ஒன்றியக் காமெடி! ஓவராயிடுச்சுன்ன உடனேயே சுருதியைக் குறைத்துக்கொண்டது பெரும் காமெடி.
GST கவுன்சிலின் 44வது கூட்டம் இன்றைக்கு நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. போன கூட்டத்தில் 21 பக்கம் எழுதி வைத்து ரவுசுகாட்டிய DWD இந்தக்கூட்டத்தில் பேச்சு மூச்சே காணோம்!
டிஸ்கி: தமிழக நிதியமைச்சர் தன் எதிர்ப்பைச் சொன்னதாக, அரசு செய்திக்குறிப்பு ஒன்று சொல்கிறது. கவுன்சில் கூட்டத்தின் ஒன்றரை மணிநேர வீடியோவில் மட்டுமல்ல கூகிள் செய்தித் தேடலிலும் அதைக் காணோம்.
என்ன இது பிரிட்டிஷ் ராணி எலிசபெத்துக்கு வந்த சோதனை? உள்ளூர்ப் பல்கலைக்கழகத்திலேயே படம் வைக்கத்தடையா?
என்ன இது பிரிட்டிஷ் ராணி எலிசபெத்துக்கு வந்த சோதனை? உள்ளூர்ப் பல்கலைக்கழகத்திலேயே படம் வைக்கத்தடையா?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment