சொல்லாதே யாரும் கேட்டால்! சொன்னாலே தாங்க மாட்டார்! இப்படி ஒரு பழைய திரைப்படப்பாடல் இந்தத் திருட்டுச் செய்தியைப் படித்தபோது பின்னணியில் ஒலிக்கிற மாதிரியே இருந்ததென்றால் நம்புவீர்களா?
கிஸ்லே பாண்டே! ட்வீட்டரில் தன்னை சுப்ரீம் கோர்ட் சொலிசிட்டர் என்று சொல்லிக்கொள்பவராம்! உத்தரப் பிரதேச போலீசோ இந்தமனிதர் சட்டப்படிப்பெல்லாம் போலி என்கிறது.இப்போது சொன்னால் தாங்க முடியாதென்று சொன்னது இவர் நிஜவக்கீலா போலி வக்கீலா என்பதல்ல! கிரேட்டர் நொய்டாவில் இவர் வாடகைக்கு எடுத்திருக்கிற flat இல் இருந்து திருடுபோன 13 கிலோ தங்கம், ரொக்கம் பிடிபட்டிருப்பதுதான் விஷயம். இது வரை பதிவுசெய்யப்பட்ட திருட்டு வழக்குகளிலேயே சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், ரொக்கமாக 57 லட்சரூபாய் என்றிருந்தால் யாரால் தான் தாங்க முடியுமாம்? சொல்லுங்களேன்!
இத்தனைக்கும் இந்த வீடு இந்த போலி வக்கீல் பெயரில் இல்லை. ஏகப்பட்ட மோசடிப்புகார்கள் இவர்மீது இருப்பதாக போலீஸ் சொல்கிறது. அதெல்லாம் 18, 19 வருடங்களுக்கு முந்தையவை என்று லாயர் அசால்டாகச் சொல்கிறார்.
எப்படி இதுமாதிரி மோசடிப்பேர்வழிகள் எல்லாம் உலக மகாடாக்டர் ரேஞ்சிலேயே இருக்கிறார்கள் என்பதை இந்தச் செய்தியைப் படித்தபோது முதலில் அதிர்ச்சி அடுத்து ஆச்சரியம் என்று டாஸ்மாக் பக்கம் போகாமலே மயக்கம் வந்துவிட்டது .
மீண்டும் சந்திப்போம்.
எங்கிருந்து வருகிறார்கள் இது போன்ற Fraud கள் ? ரக்த பீஜன் போல வெட்ட வெட்ட மேலும் மேலும் முளைத்துக்கொண்டே இருக்கிறார்கள் இவர்கள்!
ReplyDeleteவேறெங்கிருந்து வருவார்கள் என்று நினைக்கிறீர்கள் பந்து? !!
Deleteஊழலில் திளைத்துக் கொள்ளையடிப்பது பிறப்புரிமையாக நினைத்துக் கொண்டிருக்கும் அரசியல் வியாதிகளிடமிருந்துதான்! கழகங்கள் வலுவாக இருப்பதும் கூட இதுமாதிரித் திறமைசாலிகளால்தான்!