நரசிம்ம ராவ்: இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி ஜெ. ராம்கியின் சரளமான தமிழ் மொழிபெயர்ப்பில் வினய் சீதாபதியின் புத்தகத்தை இன்றைய மீள்வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளத் தூண்டுதலாக இருந்தது ஞாயிறு இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியிருந்த ஒரு அருமையான செய்தித்தொகுப்பு.
சிலவருடங்களுக்கு முன்புவரை கிழக்கு வெளியீடுகள் எதையும் வாங்குவதில்லை என்ற முடிவு, என்மகன் வாங்கிவைத்திருந்த புத்தகங்களில் பெரும்பகுதியை என்னிடம் தள்ளிவிட்டதில், முறியடிக்கப்பட்டது. இன்றும் பி வி நரசிம்ம ராவ் என்கிற மகத்தான மனிதனைப் பற்றி நமக்குத் தெரிந்ததெல்லாம் என்ன என்பதை யோசிக்க வைத்த ஒரு நல்ல புத்தகம் இது.
It were these crucial 90 minutes that paved the way for India’s historic decision to liberalise its economy in 1991. Rao was told that foreign exchange reserves had dipped to Rs 2,500 crore, only enough to meet three months’ imports என்று ஆரம்பிக்கிற ஒரு நினைவுத்தொகுப்பை வாசித்துத்தான் பாருங்களேன்! பிரதமர் நரசிம்ம ராவ், தன்னுடைய நிதியமைச்சராக இருக்கும்படி முதலில் கேட்டுக் கொண்டது முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் I G படேலைத்தான்! உடல்நலக் குறைவு காரணமாக அவர் ஏற்க மறுத்து விடவே அடுத்த சாய்சாகத் தான் மன்மோகன் சிங் அழைக்கப்பட்டார் என்கிற சேதி போகிற போக்கில் இந்த நினைவுத் தொகுப்பில் வருகிறது!
சிராக் பாஸ்வான்! பீஹார் அரசியலில் செல்வாக்கோடு இருந்த ராம்விலாஸ் பாஸ்வானுடைய மகன், தந்தையின் அரசியல் வாரிசும் கூட! தந்தை நடத்தி வந்த லோக் ஜனசக்தி பார்ட்டியின் (LJP) தலைவரும் கூட.பிஹார் அரசியலில் நிதீஷ் குமாரின் JDU (S) கட்சியும் LJP யும் சமஅளவிலான வாக்குவங்கியை வைத்திருந்தது பழைய கதை. ஆனால் நிதீஷ்குமாரின் அரசியல் சாதுர்யம் அவரைக் கொண்டுபோன உயரத்தை பாஸ்வான்+ எட்டிப் பிடிக்கமுடியவில்லை கடந்த சட்டசபைத் தேர்தல்களில் NDA கூட்டணியை விட்டு வெளியேறி, தனித்துப்போட்டி ஆனால் பிஜேபிக்கு மட்டும் ஆதரவளிப்பதான விளையாட்டை சிராக் பாஸ்வான் நடத்தியதில் நிதீஷ் குமார் ரொம்பவுமே சேதப்பட்டுப் போனார் என்பதை நாடுமறந்தாலும் நிதீஷ் குமார் மறக்கவில்லை. Since then, Mr Kumar has been clear that the onus was on the BJP to show that it did not have a secret understanding with the LJP, drawn a red line at Chirag Paswan’s induction into the Union council of ministers, if and when a Cabinet reshuffle occurs, and worked to weaken Mr Paswan’s hold over his party. This plan succeeded (with perhaps the BJP’s blessings) when five LJP Members of Parliament decided to elect Pashupati Kumar Paras, the late Paswan’s brother, as parliamentary party leader என்று உச்சுக்கொட்டுகிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலையங்கம்
நிதீஷ் குமார் பீஹார் அரசியலில் தன்னுடைய பிடியை மறுபடி பெற்றுவிட்டார் என்று எடுத்துக்கொள்வதா? அல்லது சிராக் பாஸ்வான் தன்னுடைய பிடியை இழந்து விட்டாரா? இப்போது அவர்முன் இருக்கிற சாய்ஸ் என்ன? இதற்குமேலும் பிஜேபியோடு காலம் தள்ள முடியுமா? பீஹாரில் எதிர்த்தரப்பான லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வியோடு கை.கோர்ப்பாரா?
இங்கே கழகங்கள் அடிக்கிற லூட்டியில் வெறுத்துப் போய் வேறுபக்கம் பார்க்கப்போனால் அங்கேயும் இத்தனை ரணகளமா? ஒண்ணும் புரியலையே சாமி!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment