Showing posts with label பீஹார். Show all posts
Showing posts with label பீஹார். Show all posts

Tuesday, June 15, 2021

இப்போது வாசித்துக்கொண்டிருப்பது! சிராக் பாஸ்வான்::காற்று பிடுங்கப்பட்ட பலூன்!

நரசிம்ம ராவ்: இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி ஜெ. ராம்கியின் சரளமான தமிழ் மொழிபெயர்ப்பில் வினய் சீதாபதியின் புத்தகத்தை இன்றைய மீள்வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளத் தூண்டுதலாக இருந்தது ஞாயிறு இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியிருந்த ஒரு அருமையான செய்தித்தொகுப்பு.

சிலவருடங்களுக்கு முன்புவரை கிழக்கு வெளியீடுகள் எதையும் வாங்குவதில்லை என்ற முடிவு, என்மகன் வாங்கிவைத்திருந்த புத்தகங்களில் பெரும்பகுதியை என்னிடம் தள்ளிவிட்டதில், முறியடிக்கப்பட்டது. இன்றும்  பி வி நரசிம்ம ராவ் என்கிற மகத்தான மனிதனைப் பற்றி நமக்குத் தெரிந்ததெல்லாம் என்ன என்பதை யோசிக்க வைத்த ஒரு நல்ல புத்தகம் இது.


It were these crucial 90 minutes that paved the way for India’s historic decision to liberalise its economy in 1991. Rao was told that foreign exchange reserves had dipped to Rs 2,500 crore, only enough to meet three months’ imports
என்று ஆரம்பிக்கிற ஒரு நினைவுத்தொகுப்பை  வாசித்துத்தான் பாருங்களேன்! பிரதமர் நரசிம்ம ராவ், தன்னுடைய  நிதியமைச்சராக இருக்கும்படி முதலில் கேட்டுக் கொண்டது முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் I G படேலைத்தான்! உடல்நலக் குறைவு காரணமாக  அவர் ஏற்க மறுத்து விடவே அடுத்த சாய்சாகத் தான் மன்மோகன் சிங் அழைக்கப்பட்டார் என்கிற சேதி போகிற போக்கில் இந்த  நினைவுத் தொகுப்பில் வருகிறது! 



சிராக் பாஸ்வான்! பீஹார் அரசியலில் செல்வாக்கோடு இருந்த ராம்விலாஸ் பாஸ்வானுடைய மகன், தந்தையின் அரசியல் வாரிசும் கூட! தந்தை நடத்தி வந்த லோக் ஜனசக்தி பார்ட்டியின் (LJP)  தலைவரும் கூட.பிஹார் அரசியலில் நிதீஷ் குமாரின் JDU (S) கட்சியும் LJP யும் சமஅளவிலான வாக்குவங்கியை வைத்திருந்தது பழைய கதை. ஆனால் நிதீஷ்குமாரின் அரசியல் சாதுர்யம் அவரைக் கொண்டுபோன உயரத்தை பாஸ்வான்+ எட்டிப் பிடிக்கமுடியவில்லை கடந்த சட்டசபைத் தேர்தல்களில் NDA கூட்டணியை விட்டு வெளியேறி, தனித்துப்போட்டி ஆனால் பிஜேபிக்கு மட்டும் ஆதரவளிப்பதான விளையாட்டை சிராக் பாஸ்வான் நடத்தியதில் நிதீஷ் குமார் ரொம்பவுமே சேதப்பட்டுப் போனார் என்பதை நாடுமறந்தாலும் நிதீஷ் குமார் மறக்கவில்லை. Since then, Mr Kumar has been clear that the onus was on the BJP to show that it did not have a secret understanding with the LJP, drawn a red line at Chirag Paswan’s induction into the Union council of ministers, if and when a Cabinet reshuffle occurs, and worked to weaken Mr Paswan’s hold over his party. This plan succeeded (with perhaps the BJP’s blessings) when five LJP Members of Parliament decided to elect Pashupati Kumar Paras, the late Paswan’s brother, as parliamentary party leader என்று உச்சுக்கொட்டுகிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலையங்கம் 


நிதீஷ் குமார் பீஹார் அரசியலில் தன்னுடைய பிடியை மறுபடி பெற்றுவிட்டார் என்று எடுத்துக்கொள்வதா? அல்லது சிராக் பாஸ்வான் தன்னுடைய பிடியை இழந்து விட்டாரா? இப்போது அவர்முன் இருக்கிற சாய்ஸ் என்ன? இதற்குமேலும் பிஜேபியோடு காலம் தள்ள முடியுமா?  பீஹாரில் எதிர்த்தரப்பான லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வியோடு கை.கோர்ப்பாரா?  


இங்கே கழகங்கள் அடிக்கிற லூட்டியில் வெறுத்துப் போய் வேறுபக்கம் பார்க்கப்போனால் அங்கேயும் இத்தனை ரணகளமா? ஒண்ணும் புரியலையே சாமி!


மீண்டும் சந்திப்போம்.

Monday, August 19, 2019

கற்றதும் பெற்றதும்! It is now payback time!

ற்றதும் பெற்றதும் என்று எழுத்தாளர் சுஜாதா ஆனந்த விகடனில் எழுதியது அந்தநாட்களில்  ரொம்பவுமே பிரசித்தம். விகடன் அந்தத் தொடரை 4 பாகங்களாக வெளியிட்டது என்று நினைவு. கொஞ்சம் புதிய விஷயங்களைத் தொட்டு எழுத ஆரம்பித்த எழுத்து அது! வலைப்பக்கங்களில் எதற்கு எழுதுகிறோம் என்ற கேள்விக்கு முன்னெல்லாம் உழைத்துக் களைத்ததில் (?!!) ச்சும்மா டைம்பாஸ் என்று தான் பதில் வரும்! இப்படி blogs எழுதுவது பொழுதுபோக்க, மொக்கையாக இருந்தாலும் பரவாயில்லை சீரியசான மேட்டர் மட்டும் பேசாதே என்று கும்மியடிக்க கூடிய கூட்டமாகவே இருந்த பழைய காலம் மலையேறிவிட்டது என்றுதான் எனக்கு பத்துப் பன்னிரண்டு ஆண்டுகாலத்துக்கும் மேலான பதிவுலக அனுபவம் சொல்லிக் கொடுத்திருக்கிறது.


ல்ல எழுத்தென்பது எழுதியவனுக்கும் வாசிப்பவருக்கும் கொஞ்சம் பயனுள்ளதாக, எழுதுகிறவன் தான் கற்றுக் கொண்ட அனுபவத்தை வாசிப்பவருக்கும் கடத்துவது தான்! இது ஒருவாசகனாக என்னுடைய தீர்மானமாக இன்றுவரை இருக்கிறது. ஏதோ பதிவுக்கு வந்தோமா என்னத்தையோ வாசித்தோமா என்றில்லாமல் வந்ததற்குப்  பயனாக ஏதோவொரு  புது விஷயத்தை அல்லது ஒரு மாறுபட்ட பார்வையில் செய்தியைப் பார்க்க முடிவதாக இந்தப் பக்கங்கள் இருக்கவேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாக! எனக்குப் புதியவிஷயங்களைக் கற்றுக்கொடுத்த இணையத்தில், பயனுள்ளதாக சிலவிஷயங்களைக் கவனப் படுத்துவது என்னுடைய நன்றியைத் திருப்பிச் செலுத்துவதாக இருக்கவேண்டும், இல்லையா!  


நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காஷ்மீரில் மத்திய அரசு செய்திருக்கிற ஆர்டிகிள் 370 abrogation இன்னும் கொஞ்ச காலத்துக்கு இந்தியா பாகிஸ்தான் சீனா மூன்று நாடுகளிலும் தேநீர்க் கோப்பைக்குள் சுனாமியாக மட்டுமே பேசுபொருளாக இருக்கும் என்பதால் அங்கே என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கவோ பேசாமல் இருக்கவோ முடியுமா? ஜம்மு காஷ்மீர் விவகாரம் இதுவரை இருந்த தேக்கத்தை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டு விட்டது. எப்படி என்பதை சேகர் குப்தா  14 நிமிட  வீடியோவில் இங்கே சொல்கிறது.

          
துவரை சர்வதேச அரங்கில்  பாகிஸ்தானுக்கு மட்டுமே சாதகம், ஆதரவு என்றிருந்த நிலை அப்படியே உல்டாவாக மாறியிருக்கிறது. தீவீரவாதிகளை அனுப்பிக் கலவரங்களை உருவாக்குவது, அணுஆயுதப் பூச்சாண்டி காட்டுவது, எல்லைப் பகுதியில் போர்ப்பதற்றத்தை சும்மா லுலுலாயிக்காகவேனும் பில்டப் கொடுத்துப் பார்ப்பது என்ற வழக்கமான ஸ்டன்ட் எதையுமே செய்யமுடியாமல் இம்ரான்கான் தொடர்ச்சியாக ஐந்து ட்வீட்டர் செய்திகளோடு ஒப்பாரியை நடத்திக்கொண்டு  குறுகிப்போய்க் கிடக்கிறார். அவரைப் பொம்மையாக வைத்து ஆட்டுவிக்கும் பாகிஸ்தான் ராணுவம் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நிற்கிறது. இதற்கு மேலும் ஆர்டிகிள் 370 கைகழுவப்பட்டது சரிதானா என்ற வீண் சந்தேகம், விவாதங்கள் எல்லாம் எதற்கு? நேரமிருந்தால் யூட்யூப் தளத்தில் இந்த வீடியோவுக்கு வந்திருக்கிற கமென்ட்ஸ் என்னவென்றும் பாருங்களேன்!   


ங்கே படத்தில் லொள்ளு பிரசாத் யாதவுடன் கைகொடுத்துக் கொண்டிருப்பவர் பீஹார் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா.பிஹார் மாநிலத்தில் 3 முறை முதல்வர் பதவியை வகித்தவர் ஜெகநாத் மிஸ்ரா. இன்று காலமானார் என்ற தகவலோடு இந்துதமிழ்திசை நாளிதழ் இப்படி அவருடைய கீர்த்தியைச் சொல்கிறது: பிஹாரில் லாலு பிரசாத் யாதவ் அரசியல் சக்தியாக உருவெடுக்கும் முன்பாக காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்த ஜெகநாத் மிஸ்ரா மாநிலத்தின் மிக வலிமையான தலைவராக விளங்கினார். லாலு பிரசாத்தின் அரசியல் எழுச்சிக்கு பிறகு மிஸ்ராவின் அரசியல் வீழ்ச்சியடைந்தது. பிஹாரில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல்களும், லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை நடந்த ஊழல்களும் தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டன.   

முதல் முறை முதல்வராக இருந்தது 750 நாட்கள் 2வது முறை 1133 நாட்கள் 3வது முறை 95 நாட்கள் என்று மொத்தம் 1978 நாட்கள் பீஹார் முதல்வராக இருந்தார். பீகாரின் கடைசி காங்கிரஸ் முதல்வர் இவரே!  1990 மார்ச் மாதத்தோடு சரி! அப்புறம் காங்கிரஸ் கட்சி இன்றைக்கும் அங்கே எழுந்திருக்க முடியவில்லை என்பது தான் முக்கியமான செய்தி. இன்னொரு சுவாரசியமான கேள்வி,  ஊழல்புகாரில் சிக்கிய காங்கிரஸ் மந்திரிகள் தண்டிக்கப் பட்டாலும் கூட சிறைக்குப் போனதில்லை என்பது காங்கிரஸ் கட்சியின் அதீத சாமர்த்தியமா?  அல்லது நம்முடைய சிஸ்டம் எப்படிக் காங்கிரசால் கெடுக்கப்பட்டது என்பதன் அடையாளமா? 

யோசித்து ஒரு பதில் கிடைக்கிறதா என்று பாருங்கள்!

மீண்டும் சந்திப்போம்.
      

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)