Tuesday, March 12, 2019

தேர்தல் நேரம் காமெடி டைம்! சிரிப்பதா வருத்தப்படுவதா?

தமிழக அரசியல் தேர்தல் நேரத்தில் எவ்வளவு கீழ்த்தரமாகப் போகும் என்பதை ஆபாசத்தின் முன்னோடிக் கழகமான திமுக பேச்சாளர்கள் ஊத ஆரம்பித்திருப்பதிலேயே தெளிவாகத் தெரிகிறது.

திமுகவுக்கு வாக்களிக்கலாம் என்று நினைப்பவர்களைக் கூட வேண்டாமே என்று வெறுத்து ஒதுக்குவதற்கு லியோனி, தமிழன் பிரசன்னா போன்ற பேச்சாளர்களே போதும்! இரண்டு பெயர்கள் உதாரணம் மட்டுமே!


மின்னம்பலம் செய்தி இது! திமுக இதுவரை கற்ற வித்தை மொத்தத்தையும் களத்தில் இறக்கவிருப்பதாக! அப்படியானால் இதுவரை இறக்கியதே இல்லையா என்ன? இதெல்லாம் தேர்தல் நேரத்துக் காமெடி! அதற்கு மேல் வேறென்ன?

தேர்தல் நேரம் காமெடிடைம் தானே என்று சும்மா இருந்துவிட முடியுமா? இங்கே ஒவ்வொரு ஊடகமும், தெரிந்தே நஞ்சைக் கலந்து செய்திகளாகத் திணித்துக் கொண்டே வருவதை , வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகுமா? அல்லது தானே ஓய்ந்துவிடுமா?

கெட்டிக்காரனின் பொய்யும் புளுகும் எட்டுநாளைக்கு மேல் தாக்குப்பிடிக்காது என்று சொல்வார்கள். ஊடகப் பொய்களோ  அதிகபட்சம் மூன்றுநாட்களுக்கு மேல் தாக்குப் பிடிப்பதில்லை என்பதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? ஒரு பொய் பரபரப்புச் செய்தி என்றிருப்பது கொஞ்ச நேரமே! அதை மறைத்து இன்னொரு பொய், அடுத்தடுத்துப் பொய்ச்செய்திகளாக அணிவகுத்து வருவதில் பலிகடா ஆக்கப்படுவது உண்மை! அடுத்து, நம்முடைய யோசிக்கும் இயல்பே மழுங்கடிக்கப்படுவது!

காட்சிகள் மூலம் கதை சொல்பவர் என்ற சுய அறிமுகத்துடன் முரளிராம் எழுதிய முகநூல் பகிர்வு கொஞ்சம் வித்தியாசமாக! நம்மை யோசிக்க வைக்கிற மாதிரி.......
சன் டிவி மட்டுமே இருந்து வந்த காலகட்டத்தில் மக்களை கட்டிப் போட்ட ஓர் நிகழ்ச்சி நேருக்கு நேர். அதுவரையில் அரசியல் தலைவர்கள் பேட்டிகளை எழுத்தில் மட்டும் பார்த்தவர்கள் அவர்கள் வாயிலேயே கருத்துக்களை நேரடியாகக் கேட்க முடிந்தது.
இப்பொழுது இப்படி பேசுகிறார் அன்றைக்கு இப்படி சொன்னாரு என்று மக்கள் நினைத்த விஷயத்தை ரபிபெர்னார்ட் கேள்வியாக எழுப்பியதால் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது அந்த நிகழ்ச்சி. இதன் பலன் அவரை எம்பி பதவியை அடையும் நிலைக்கு கொண்டு போய் நிறுத்தியது.
தந்தி டிவியில் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியும் கூட இப்படிப்பட்டது தான். இதில் பார்வையாளர்கள் மனதில் எழுந்த கேள்விகளை ரங்கராஜ் பாண்டே கேட்டதால் அவர் புகழ் பெற்றார். கையை நீட்டினால் கன்னத்தில் அறைந்துவிடும் துாரத்தில் பிரமுகரை அமர்த்தி வைத்து அவருக்கு எதிரான கேள்வியை எழுப்புவதற்கு மனதில் எவ்விதமான கள்ளமும் இல்லாமல் இருக்க வேண்டும்.
அதனால் தான் அவர் தந்தி டிவியை விட்டு விலகிய பின்னரும் கூட அவருக்கு என்று இன்றும் கூட ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இது ஊடகத்தின் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் சமூதாயத்தில் இழிவான பெயரை வாங்கி தரும் அளவில் ஊடகங்கள், அல்லது அதன் பிரதிநிதிகளாகச் செயல்பட்டு வரும் நிருபர்கள் இருப்பது தான் வேதனையான விஷயம்.
கணக்கிலடங்காத அளவுக்கு இன்று ஊடகங்கள் வந்து விட்டதால், கேமரா பிடித்தவர்கள் எல்லாம் அறிவு ஜீவிகளாகி விட்டனர். அவர்கள் எந்த தலைவரின் கண் அசைவிற்கு சில நுாறு பேராவது காத்துக்கிடப்பாரோ அவரை எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்கும் அறிவைப் பெற்றுவிடுகிறார். இதற்கு அவர் கையில் இருக்கும் கேமராவும், எதைப் போடுவானோ என்ற அரசியல்வாதிகளின் அச்சமும் தான் முதலீடு.
மூத்த பத்திரிக்கையாளர்கள் கேள்விகளால் தலைவர்களை ஆவேசப்படுத்துவதும் இயல்புதான். ரஜினி பற்றிய கேள்விக்குக்கு கருணாநிதி பதில் சொல்ல விரும்பவில்லை என்று கூறிய நேரத்தில் இதற்கு எம்ஜிஆரிடம் பெற்ற அனுபவம் காரணமா என்று கேட்டு அவர் கோவையில் பேட்டி அளிப்பதையே கைவிட வைத்தவர் கோவையின் மூத்த பத்திரிகையாளர் வேலாயுதம். திருச்சியில் பிடிஐ நிருபராக இருந்த மறைந்த சவுந்தர்ராஜன் எப்போதும் மிஸ்டர் கருணாநிதி என்று அழைப்பதையே வழக்கமாக கொண்டு இருந்தார்.
இது போன்ற நிருபர்கள் தமிழகம் முழுவதும் பரவி உள்ளனர். அவர்கள் ஞானம், அனுபவம், கேள்வி கேட்கும் பாங்கு போன்றவை தலைவர்களை எதிர்த்து பேசவிடாமல் கட்டிப் போட்டது. ஆனால் இப்போது ஒரு தலைவரை சந்திக்கும் போது ஹோம்ஒர்க் கூட செய்யாமல் பத்துநிமிடத்திற்கு முன் நடந்த சம்பவத்தை மட்டும் கேள்வியாக மாற்றிக் கொண்டு போய் நிற்கும் போதுதான் பத்திரிக்கையாளின் தரம் பல் இளித்துவிடுகிறது.
இதனால் தான் தலைவர்களை மடக்கும் போது அவர்கள் வார்த்தைகளால் வெடிக்கிறார்கள். சமீபத்தில் அன்புமணியின் நேரலை பேட்டியில் நடந்ததும் இதுதான். அவரிடம் எத்தனையோ விஷயங்களை எழுப்பி இருக்கலாம்.
ஆனால் நீங்கள் ஏன் அதிமுக கூட்டணியில் இணைந்தீர்கள் என்பது மட்டுமே மீண்டும் மீண்டும் நிருபர்களிடம் இருந்து வந்த கேள்வி. இதற்கு அவர் விரிவான பதில் சொன்னால் கூட நிருபருக்கு பாமக பச்சோந்தி கட்சி என்பதை நிருபிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது. இதனால் சுற்றி சுற்றி அந்த கேள்விமட்டுமே எழுப்பபட்டது. அன்புமணி ராமதாஸ் கோபத்தின் உச்சத்திற்கு சென்றால் கூட , அதை முழுவதும் வெளிக்காட்டிக்கொல்லாமல்நிருபருக்கு தண்ணீர் கொடுக்க சொல்லி சமாளித்தார்.
நாங்கள் தானே தேர்தலில் போட்டியிடப் போகிறோம். நீங்கள் ஏன் இவ்வளவு பதட்டப்படுகிறீர்கள், விட்டா அடித்து விடுவீர்கள் போல என்றெல்லாம் அவர் விமர்சனம் செய்த போது நிருபர்கள் , அதற்கு எந்த விதத்தில் நடந்து கொண்டார்கள் என்பதை தமிழ மக்கள் தொலைக்காட்சிகள் வாயிலாக கண்டு சிரித்தார்கள்.
மக்களுக்கு உண்மையயை புரிய வைக்க வேண்டும் என்றால், ஸ்டாலினிடம் இதே போல தாண்டி குதித்து கேள்வி கேட்க வேண்டும். இலங்கையில் பல லட்சம் பேர் செத்த போது ஆட்சியில் இருந்தது நீங்களும் காங்கிரஸ் கட்சியும் தானே அப்போது என்ன செய்தீர்கள் என்று கேட்க வேண்டும். இலங்கை பிரச்னையை காரணம் காட்டித்தானே மத்திய அரசை விட்டு வெளியே வந்தீர்கள். அதன் பின்னர் அந்த பிரச்னையில் காங்கிரஸ் எவ்விதமான நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது என்று தற்போது கூட்டணி வைக்கிறீர்கள் என்று கேட்க வேண்டும்.
ஆனால் அதை செய்ய மாட்டோம். எளிதில் உணர்ச்சி வசப்படும் வைகோவை துாண்டிவிட்டு இழிவாக போட்டுக்காட்டி புகளாங்கிதம் அடைந்து கொள்வோம்.
பெரும்பாலும் திமுக, இடதுசாரி சிந்தனையில் பத்திரிகையாளர்கள் இருப்பதும். ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் ஒரு மறைமுக செயல்திட்டம் இருந்து வருவதும் தான் இது போன்ற இழி நிலைக்கு காரணம். ஆனால் அரசியல்வாதிகளும், மக்களும் நன்கு ஊடங்களை புரிந்து கொண்டு விட்டார்கள். இதனால் தான் மணல் கொள்ளை குறித்து உங்கள் டிவியில் விவாதம் நடத்துவீர்களா? மருத்துக் கல்லுாரி மாணவர்களிடம் ஒரு கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதை உங்கள் டிவியில் பேசுவீர்களா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
அரசியல்வாதிகளும் கேவலமாக பத்திரிக்கையாளர்களை நடத்துகிறார்கள். அரசியல் அனுபவமே இல்லாத பிரேமலதா நீங்கள் எங்கள் வீட்டு முன்பு காத்திருக்கிறீர்கள், அலுவலகத்தின் முன்பு காத்திருக்கிறீர்கள், அதற்காக நாங்கள் பேட்டி அளிக்க முடியாது என்கிறார். இவர்கள் பதில் சொல்லித்தான் நாடு நாசமாகப் போவது தடுத்து நிறுத்தப்பட போகிறதா. எதுவா இருந்தாலும் அறிக்கை விடுங்கள் என்று சொல்லிவிட்டு புறக்கணிக்கும் தைரியம் என் தொலைகாட்சிகளுக்கு இல்லாமல் போய்விட்டது.
பிரேமலதா எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன் ஒவ்வொருவராக கேளுங்கள் என்கிறார். அப்படி கேட்டு அவர் முகத்திரையை கிழித்துவிடலாமே. அதை விடுத்து நர்சரி பள்ளி மாணவர்கள் போல கத்தி கூச்சல் இட்டு அந்த அம்மையாரை கைஜாடையில் கிண்டல் செய்ய விட்டது யார் குற்றம். அந்தளவுக்கு ஊடகத்தினர் கட்டுப்பாட்டை இழந்துவிட்டோமா. நாமே கூச்சல் இடுவதால் எதிரில் இருக்கும் தலைவர்கள் எளிதில் தப்பி விடுகிறார்கள். ஒற்றை நிருபராக நேருக்கு நேர் செய்ய சாதனையை, கேள்விக்கு என்ன பதில் செய்த சாதனையை ஏன் ஊடக நண்பர்கள் செய்ய முடியவில்லை என்பதை சிந்தித்தாலே பாதி பிரச்னைகள் தீரும்.
பிரேமலதாவும் சரி, அன்புமணியும் சரி ஏன் கேள்வி கேட்டவர்களே மீண்டும் கேட்கிறீர்கள், புதியவர்கள் கேளுங்கள் என்று தூண்டுகிறார்கள். பேட்டி என்றதும் சோறு கண்ட காக்கை போல பறந்து செல்வது, பின்னர் அதுவே அடித்துக் கொண்டு எந்த காக்கையும் சோறு திங்க முடியாமல் பறந்து செல்வது போல எந்தவிதமா ஆயத்தமும் இல்லாமல் பேட்டியெடுக்க சென்று விட்டு யாரோ கேள்வி கேட்பார்கள், நாமும் அதை பதிவு செய்யலாம் என்று போவதால் தான் இந்த சிரமம். ஆளுக்கு ஒன்று அல்லது 2 கேள்வி என்று வெளியிலேயே பேசி வைத்துக் கொண்டு சென்றால், அனைவரும் தரமான பேட்டி எடுத்து ஒளிபரப்பு செய்ய முடியும். பத்திரிகைகளும் வெளியிட முடியும். ஊடகங்கள் இல்லாத காலங்களில் மூத்த நிருபர்கள் அவ்வாறுதான் செய்து வந்தனர். அதை விடுத்து ஒரு கேள்வியை எழுப்பி அதில் பிரச்னையானதும் அதிலேயே சுற்றி வந்து பேட்டியை முடித்துவிட்டு. வெளியே வந்துவிடுவது என்பதுதான் தற்போது பல நிருபர்களின் வாடிக்கையாகிவிட்டது
ஊடகங்கள் யாரையும் தாங்கிப்பிடித்து தலைவராக மாற்ற முடியாது. ஊடகத்தின் பலத்தால் மட்டுமே பிரதமராக உயர்ந்தவர் விபிசிங். அவரால் 5 ஆண்டுகள் ஆட்சியை தொடராமல் தோல்வி அடைந்த தலைவராகவே அவர் மரித்தார். அதே போல அரவிந்த் கேஜரிவால் கூட ஊடகம் ஊதி பெரிதாக்கிய பலுானில் பறந்து முதல்வராக மாறிவிட்டார். ஆனால் ஊழலை எதிர்க்கிறேன் என்று எந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராடுகிறேன் என்று ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர் கூறினாரோ, அதே காங்கிரஸ் கட்சியின் கூட்டணி வேண்டுமென்று அலையாக அலைந்து புலம்பித் திரிந்தார்.
அதே போல விஜயகாந்தை மட்டுமே ஊடகங்கள் இழிவு படுத்த முடிந்தது. அதற்கு ஏற்ப அவர் உடல் நிலை சரியில்லாமல் போய் அரசியலில் கிட்டத்தட்ட செயல்பட முடியாத நிலைக்கு வந்துவிட்டார். இதை ஊடகங்கள் வெற்றியாக எடுத்துக் கொண்டு அனைத்து தலைவர்களையும் உரசிப் பார்க்கிறது. இது ஜெயலலிதா போன்ற தலைவர்களிடம் எடுபடவில்லை. ஊடகங்களை தாண்டி அவர் வெற்றி பெற்றார். கருணநிதியை எந்த நிருபரும் அவ்வளவு எளிதில் அசைத்துவிட்டதாக சரித்திரம் இல்லை. அதையும் மீறி அவருக்கு பிடிக்காத கேள்வியை கேட்ட நிருபரிடம் வாரியா சேர்ந்து தீக்குளிப்போம், நீதான் கொலைகாரன் என்று கூறி கூட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விடுவார். ஊடகங்கள் என்ன செய்து விட முடியும் என்று அவர் எந்நாளும் கவலைப்பட்டதே இல்லை. அதே போல தான் மோடியும். அனைத்து ஊடகங்களும் எதிர்த்து பேசியும் கூட இன்று அவரை சுற்றியே தேசிய அரசியல் நடைபெற்று வருகிறது. ஏனெனில் இவர்களெல்லாம் தங்களது பேச்சுகளின் மூலம் மக்களிடம் நேரடியாகத் தொடர்பில் இருந்தவர்கள். ஊடகங்கள் இவர்களை உருவாக்கிவிடவில்லை.
எனவே நம்மைச் சுற்றி இருக்கும் அரசியல் சூழலைப் புரிந்துகொண்டு, நம் எல்லைகளைப் புரிந்து, செய்யும் பணி என்ன என்பதை அறிந்து எவ்வித சார்பு நிலையையும் எடுக்காமல் நடுநிலையோடு அரசியல் தலைவர்களை நிருபர்கள் அணுகினால் நம்துறை மீது விழுந்திருக்கும் கறையை போக்க இயலும்.
எனவே, ஊடக முதலாளிகள், அதில் பணியாற்றுவோர் என்று அனைவரும் அமர்ந்து பேசி சுயமரியாதையை மீட்டு எடுக்க வேண்டிய நேரம் இது. இல்லாவிட்டால் 90 எம்எல், போன்ற திரைப்படங்களை ஓட்டிதான் சானலை கரை சேர்க்க வேண்டி வரும். அப்போது பத்திரிக்கைத்துறையை ஜனநாயகத்தின் 4வது தூண் என்று யாரும் அழைக்கமாட்டார்கள். (நன்றி paranivelsankar )

இந்தப்பக்கங்களில் கொஞ்சம் யோசிக்க வைக்கிற விஷயங்களாக நிறையப் பார்த்துக் கொண்டே வருகிறோம்! தேர்தல்கள் ஒருநாள் கூத்தோ, காமெடியோ அல்ல! அடுத்த ஐந்தாண்டுகள் எப்படிப் பட்டவர்களிடம் சிக்கப்போகிறோம் என்பது  நாமே ஒரு விரல் புரட்சியாக நினைத்துச் செய்வதில் வருகிற விளைவு. 

இப்போதுள்ள தேர்தல் முறைகளில், தவறான கட்சி, வேட்பாளருக்கு வாக்களித்துவிட்டால், தவறைத் திருத்திக் கொள்ள முடியாது. தப்பான வேட்பாளரை திரும்பப் பெறவும் முடியாது.  

என்ன செய்வதாக உத்தேசம்?
                          

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)