Saturday, March 9, 2019

தேதிமுக! அழகிரி பயத்தில் திமுக! மணியோசை வரும் முன்னே!

முந்தைய பதிவில் நெல்லைத்தமிழன் எழுப்பியிருந்த கேள்வி நிறையவே யோசிக்க வைத்தது! எவ்வளவு யோசித்தாலும் விடையென்னவோ இருகோடுகள் தத்துவம் தான்! இங்கே தங்கள் தரப்பு பலவீனங்களை மறைக்க எதிராளியின் பலவீனத்தை ஓங்கித் தம்பட்டம் அடிப்பது தமிழக அரசியலின் வாடிக்கையாகவே ஆகிவிட்டது.  இந்த வீடியோவின் தலைப்புக்கும், உள்ளடக்கத்துக்கும் சம்பந்தமே இல்லை!    

//"விஜயகாந்த் வளர்த்த தேமுதிகவை ஏன் சுதீஷும், பிரேமலதாவும் அழிக்கிறார்கள்?" : ஆர்.கே.ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்.// - இந்தக் கேள்வியே எனக்கு அபத்தமாகவும், ராதாகிருஷ்ணன் அவருடைய briefஐத் தாண்டிக் கேட்பதாகவும்தான் தோன்றுகிறது. ராதாகிருஷ்ணன் விருப்பத்துக்கு தேதிமுக கட்சி நடத்தமுடியுமா? அதுக்கு அவர்தான் புதுக் கட்சி துவங்கணும்.

பிரேமலதாவுக்கு க்ளேரிட்டி ஆஃப் தாட் இருக்கு. என்னைக் கேட்டால் ஸ்டாலினைவிட தெளிவாக பதில் சொல்றார். ஸ்டாலின் இன்னும் எழுதிக்கொடுப்பதை வாசிப்பவராகத்தான் இருக்கார்.

நெல்லைத்தமிழனும் இதை வாசித்துக் கொண்டிருக்கிற நண்பர்களும் புரிந்துகொள்ளவேண்டியது மேலே உள்ள கேள்வியிலேயே பதிலாகவும் இருக்கிறது. வாலறுந்த நரி கதையில் அது மற்றநரிகளிடம் வாலறுந்து இருப்பது தான் அழகு என்று சொல்வதுபோல நேரடியாகச் சொல்லாமல், இப்படி வால் இருப்பதே அசிங்கம் என்று பழித்துச் சொல்வதற்கு, கைநீட்டி கவர் வாங்குகிற ஊடகங்கள் இங்கே பிராக்சியாகக் கூவுவது தான் கதைக்கும் நடப்புக்கும் உள்ள வித்தியாசம்! 

இதற்கு மேல் இதைப்பற்றி எழுதிக்கொண்டே போனால் எனக்கு தேதிமுக முத்திரை குத்திவிடுவார்கள்! 

அழகிரியால் மதுரையில் போட்டியிட தயங்கும் திமுக?

விருதுநகரில் நிறைந்த அமாவாசையில் தென்மண்டல மாநாடு நடத்திக் காட்டிய தி மு கழகம் அழகிரி என்ன செய்வாரோ என்ற கலக்கத்தில், மதுரை நாடாளுமன்றத் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உ வாசுகிக்கு தாரை வார்க்கவிருப்பதாக ஹிந்து நாளிதழ் செய்தி சொல்கிறது. சட்டசபைத் தேர்தலில் வாசுகி மதுரை தொகுதி ஒன்றில் ம ந கூட்டணி வேட்பாளராகப்  போட்டி இட்டு 13000 சொச்சம் வாக்குகள் வாங்கினார் என்று ஞாபகம் வருகிறது.  

திமுகவினர் சிலர் கூறியதாவது: மதுரையில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஸ்டாலின் தயங்காமல் திமுக வேட்பாளரை நிறுத்தலாம். மதுரையை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்குவதாக பரவும் தகவலால் கட்சியினர் விரக்தியில் உள்ளனர். ஒருவேளை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் கட்சியினரின் ஒத்துழைப்பு இருக்குமா என்பது சந்தேகமே என்றனர்.

ஆட்டம் பாட்டம் அவதூறுமழை மண்டல மாநாடு மெகாகூட்டணி......... 

எல்லாமே பதவிக்குத்தாண்டா!

 

6 comments:

  1. திண்டுக்கல் லியோனி, இந்த எலெக்‌ஷனின் வடிவேலுவாக ஆகப் பார்க்கிறார். திமுக, தேதிமுகவைப் பற்றி அவ்வளவு கலாய்த்ததே, பிறகு எதற்கு, மரத்திலிருந்து கனி மடியில் விழும் என்று வாயைத் திறந்துகொண்டு இருக்கணும்? இந்தத் தேர்தலிலும் ஆரம்பத்திலேயே தேதிமுக வேண்டாம் என்று திமுக சொல்லியிருக்கலாமே. எதற்கு அவங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்து மார்க்ஸிஸ்ட், விசிக போன்ற கட்சிகளை 'காத்திருப்பு' பட்டியலில் வைக்கணும்?

    லியோனி போன்ற கட்சிப் பேச்சாளர்கள் எல்லாமே, நாக்கை அடகு வைத்து வாழ்கிறவர்கள். அவர்களுக்கு என்று ஒரு கொள்கையோ கோட்பாடோ கிடையாது. இந்த மாச சம்பளம் வந்துச்சா கட்சியிலிருந்து.. ஓகே. சரி.. இன்னைக்கு என்ன நிலைப்பாடு எடுக்கணும்? என்பதுதான் இவங்க வேலையே.

    இதுக்காக தேதிமுக, பாமக போன்ற கட்சிகள்லாம் செய்வது சரி என்று சொல்ல வரலை. தேர்தல், வேட்பு என்பதெல்லாம் பிஸினெஸாப் போய் எத்தனை வருடங்களாயிற்று. யாருக்கேனும் பைத்தியமா 35 கோடி செலவழித்து மக்கள் சேவை செய்வதற்கு...

    ReplyDelete
    Replies
    1. //யாருக்கேனும் பைத்தியமா 35 கோடி செலவழித்து மக்கள் சேவை செய்வதற்கு...//

      ஒரு முக்கியமான விஷயத்தைத் தொட்டிருக்கிறீர்கள், நெல்லைத்தமிழன்! வாழ்த்துகள்!
      எதற்காக இவ்வளவு செலவு செய்ய வேண்டும்? வீட்டுக்கு வீடு டிவி ஸ்மார்ட் போன் இருக்கிற காலத்தில் எதற்காகப் பொதுக்கூட்டங்கள், வீதி, வீட்டுக்குவீடு பிரசாரங்கள், ஊடக விளம்பரங்கள் என்று செலவு செய்ய வேண்டும்?

      இவைகளைத் தடை செய்துவிட்டாலே பெருமளவு செலவு, தலைவலி குறையுமே!

      Delete
  2. 'நாங்க பார்.. மானஸ்தர்கள். ஒரு வாரம் தான் கூட்டணிக்கு வரங்களான்னு காத்துட்டிருந்தோம்.. அவங்க மானம் கெட்டவர்கள்.. இரண்டு வாரமா காத்துட்டிருக்காங்க' என்று பேசும் லியோனி! யாருக்குமே வெக்கம் மானம் இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்.. ஒரு வாரம் காத்துட்டிருந்தா மானமுள்ளவன்.. அதுக்கு மேலே காத்துட்டிருந்தா மானம் கெட்டவன்.. அப்படின்றது என்ன லாஜிக்கோ!

    ReplyDelete
    Replies
    1. லியோனிகளுக்குத் தேவை உளறுவதற்கு ஒரு மேடையும் மைக்கும்! பின்னே கைநிறைய துட்டு! லாஜிக், மூளை எல்லாவற்றையும் கழற்றிவைத்துவிட்டுப் பேசுகிற உபிக்களுடைய ஸ்டாண்டர்ட் இதுதானே பந்து! :)))

      Delete
  3. //இதுக்காக தேதிமுக, பாமக போன்ற கட்சிகள்லாம் செய்வது சரி என்று சொல்ல வரலை. தேர்தல், வேட்பு என்பதெல்லாம் பிஸினெஸாப் போய் எத்தனை வருடங்களாயிற்று. யாருக்கேனும் பைத்தியமா 35 கோடி செலவழித்து மக்கள் சேவை செய்வதற்கு...
    //
    அரசியல் வாதிகள் பணவரவை முறைப் படுத்த வேண்டும். நாமெல்லாம் ஒரு வேலைக்கு போய் சம்பளம் வாங்கி குடும்பம் நடத்துவோம்.. அரசியல் வாதிகள் பண நோக்கமில்லாமல் சேவை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி சரி? அரசியல்வாதிகள் அரசு பதவிக்கு வரும்போது தான் சம்பளம் என்று வாங்குகிறார்கள். மற்றபடி வருவது எல்லாமே முறைப்படுத்தப் படாத, முறையில்லாத பணவரவு மட்டுமே. இந்த 'elephant in the room ' பற்றி பேசாமல், நாங்கள் பதவிக்கு வந்தால் லஞ்ச ஊழலை ஒழிப்போம் (வருவதே லஞ்ச ஊழல் பண்ணத்தான்!), சுத்தமான அரசு.. என்றெல்லாம் பேசுவது வேற்றுக் கூச்சல் தான்!

    இன்றைய தேதியில் அரசியல் நிறைய செலவு பிடிக்கும் தொழில். யார் நிறைய செலவு செய்ய முடியுமோ, அவர்கள் பின்னால் பேச்சாளர்கள் / ஊடகங்கள் / (பல) அரசு அதிகாரிகள் .. எல்லோரும் இருப்பார்கள். பதவிக்கு வந்த பின் இதை மேலும் பலப் படுத்திக்கொள்வார்கள் இது ஒரு vicious cycle!

    வெறும் வேட்டி அழகு / தெளிவான பேச்சு .. இதன் மூலமா இத்தனை வருடம் இவ்வளவு ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு பின்னாலும் ப சி அடிக்கடி திரைகளில் தோன்றுவதும் பேட்டிகள் கொடுப்பதும் சட்டத்தில் இருந்து தப்பிப்பதுமாக இருக்கிறார்? காங்கிரஸுக்கு தேவையான அளவு பணத்தை திரட்டும் சக்தி அவருக்கு இருப்பதால் மட்டுமே இப்படி இருக்கிறார்!

    இருப்பதிலேயே கொஞ்சம் கம்மி ஊழல் பண்ணக்கூடியவர் கிடைத்தால் போதும். உருப்பட்டுவிடுவோம்!

    ReplyDelete
    Replies
    1. இங்கே மதுரைப்பக்கம் மட்டத்துல ஒசத்தி என்றொரு சொலவடை பயன்படுத்துவோம்! 30% என்பது நிச்சயம் நல்ல மார்க் இல்லைதான்! ஆனால் மற்றவர்கள் அதையும் வீடாக கம்மியாக வாங்கியிருக்கும்போது 30% மட்டத்துல ஒசத்தியாகிவிடுகிறது இல்லையா?

      இப்படி மட்டமானவர்கள், படுமட்டமானவர்கள் எப்படி எங்கேயிருந்து உருவாகிறார்கள்? நம்மிடமிருந்துதான் இல்லையா?! அப்படியானால் இப்படிக் கொசுக்கள் புழுக்களை உற்பத்தி செய்கிற சாக்கடையாக நாம்தான் இருக்கிறோம் என்பதும் தெரிகிறது இல்லையா?

      மாற்றம், நம்மிடமிருந்துதான் ஆரம்பித்தாகவேண்டும்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)