Showing posts with label அழகிரி பயம். Show all posts
Showing posts with label அழகிரி பயம். Show all posts

Saturday, March 9, 2019

தேதிமுக! அழகிரி பயத்தில் திமுக! மணியோசை வரும் முன்னே!

முந்தைய பதிவில் நெல்லைத்தமிழன் எழுப்பியிருந்த கேள்வி நிறையவே யோசிக்க வைத்தது! எவ்வளவு யோசித்தாலும் விடையென்னவோ இருகோடுகள் தத்துவம் தான்! இங்கே தங்கள் தரப்பு பலவீனங்களை மறைக்க எதிராளியின் பலவீனத்தை ஓங்கித் தம்பட்டம் அடிப்பது தமிழக அரசியலின் வாடிக்கையாகவே ஆகிவிட்டது.  இந்த வீடியோவின் தலைப்புக்கும், உள்ளடக்கத்துக்கும் சம்பந்தமே இல்லை!    

//"விஜயகாந்த் வளர்த்த தேமுதிகவை ஏன் சுதீஷும், பிரேமலதாவும் அழிக்கிறார்கள்?" : ஆர்.கே.ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்.// - இந்தக் கேள்வியே எனக்கு அபத்தமாகவும், ராதாகிருஷ்ணன் அவருடைய briefஐத் தாண்டிக் கேட்பதாகவும்தான் தோன்றுகிறது. ராதாகிருஷ்ணன் விருப்பத்துக்கு தேதிமுக கட்சி நடத்தமுடியுமா? அதுக்கு அவர்தான் புதுக் கட்சி துவங்கணும்.

பிரேமலதாவுக்கு க்ளேரிட்டி ஆஃப் தாட் இருக்கு. என்னைக் கேட்டால் ஸ்டாலினைவிட தெளிவாக பதில் சொல்றார். ஸ்டாலின் இன்னும் எழுதிக்கொடுப்பதை வாசிப்பவராகத்தான் இருக்கார்.

நெல்லைத்தமிழனும் இதை வாசித்துக் கொண்டிருக்கிற நண்பர்களும் புரிந்துகொள்ளவேண்டியது மேலே உள்ள கேள்வியிலேயே பதிலாகவும் இருக்கிறது. வாலறுந்த நரி கதையில் அது மற்றநரிகளிடம் வாலறுந்து இருப்பது தான் அழகு என்று சொல்வதுபோல நேரடியாகச் சொல்லாமல், இப்படி வால் இருப்பதே அசிங்கம் என்று பழித்துச் சொல்வதற்கு, கைநீட்டி கவர் வாங்குகிற ஊடகங்கள் இங்கே பிராக்சியாகக் கூவுவது தான் கதைக்கும் நடப்புக்கும் உள்ள வித்தியாசம்! 

இதற்கு மேல் இதைப்பற்றி எழுதிக்கொண்டே போனால் எனக்கு தேதிமுக முத்திரை குத்திவிடுவார்கள்! 

அழகிரியால் மதுரையில் போட்டியிட தயங்கும் திமுக?

விருதுநகரில் நிறைந்த அமாவாசையில் தென்மண்டல மாநாடு நடத்திக் காட்டிய தி மு கழகம் அழகிரி என்ன செய்வாரோ என்ற கலக்கத்தில், மதுரை நாடாளுமன்றத் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உ வாசுகிக்கு தாரை வார்க்கவிருப்பதாக ஹிந்து நாளிதழ் செய்தி சொல்கிறது. சட்டசபைத் தேர்தலில் வாசுகி மதுரை தொகுதி ஒன்றில் ம ந கூட்டணி வேட்பாளராகப்  போட்டி இட்டு 13000 சொச்சம் வாக்குகள் வாங்கினார் என்று ஞாபகம் வருகிறது.  

திமுகவினர் சிலர் கூறியதாவது: மதுரையில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஸ்டாலின் தயங்காமல் திமுக வேட்பாளரை நிறுத்தலாம். மதுரையை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்குவதாக பரவும் தகவலால் கட்சியினர் விரக்தியில் உள்ளனர். ஒருவேளை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் கட்சியினரின் ஒத்துழைப்பு இருக்குமா என்பது சந்தேகமே என்றனர்.

ஆட்டம் பாட்டம் அவதூறுமழை மண்டல மாநாடு மெகாகூட்டணி......... 

எல்லாமே பதவிக்குத்தாண்டா!

 

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)