நம்மூர் தேர்தல்களில் எல்லோர் கண்ணிலும் படுகிற ஆனால் கவனிக்க மறந்து விடுகிற ஒரு விஷயம், அரசு வாகனங்களில் தேர்தல் அவசரம் Election Urgent என்ற வாசகங்களோடு ஒரு வேலையும் இல்லாமல் ஆனால் வெட்டி முறிக்கிற மாதிரி அங்குமிங்கும் போய்வருவது!
அதுமாதிரித்தான், ஒரு விஷயமுமில்லாமல், தினசரி ஒரு பதிவு, சமயங்களில் இரண்டு என எழுதித்தள்ளிக் கொண்டிருக்கிறாயோ? இது நண்பர் ஒருவருடைய கேள்வி! இங்கே வந்து வாசிக்க நினைப்பவர்களுமே கூட அப்படித்தான் நினைக்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்ள உண்மையிலேயே விரும்புகிறன்!
இட்லி வடை பொங்கல்! #16 சனிக்கிழமை ஸ்பெஷல் என்று அந்தப் பக்கங்களில் எழுதிய பதிவு உட்பட பலபதிவுகளுக்கு வாசகர் வருகை இன்னமும் pickup ஆகவில்லை. இத்தனைக்கும் சில முக்கியமான விஷயங்களைக் குறித்தான பதிவுகள் அவை என்பதற்கு மேலே கொடுத்த சுட்டி ஒரு சாம்பிள். ஆனால் கூகிள் அனலிடிக்ஸ் சொல்கிற விவரங்களில் மெனெக்கெட்டு 2010 இல் எழுதிய பதிவுகளை வரிசையாகப் பார்த்துக் கொண்டிருக்கிற பயனாளர் இருப்பதையும் பார்க்க முடிகிறது. தேடிவந்து வாசிக்கும் வழக்கம் குறைந்து வருகிறது என்று ஒதுக்கிவிட்டுப் போகமுடியாத, புரிந்து கொள்ளமுடியாத சிக்கலாக தமிழ் வலைப்பதிவுலகம் இன்றைக்கு இருக்கிறதோ?
*******
இந்த இடைத் தேர்தல்னு ஒரு காமெடி நடக்கும் நம் ஊரில்.. ஏதாவது MLA இறந்து போனாலோ, ராஜினாமா செய்தாலோ, பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்டாலோ அந்தத் தொகுதியில் இந்தக் காமெடியை நடத்தும் நம் தேர்தல் ஆணையம்.. பலரும் இந்த இடைத் தேர்தலைப் பற்றிச் சொல்லும் போது ஏற்கனவே ஜெயித்த கட்சியில் இருந்தே இன்னொருவரை மீதிக் காலத்திற்கு MLAவாக இருக்க வைத்து விடலாம் என்கிற கருத்தைக் கொண்டவர்கள் தான்..
ஏனென்றால் இந்த இடைத் தேர்தல்களை ஆளுங்கட்சிகள் என்ன லட்சணத்தில் நடத்தும் என்பதும் உலகத்திற்கே தெரியும்.. தேவையற்றச் செலவுகளும், பேரங்களும் கேலிக்கூத்துக்களும் இருக்கும் என்பதால் தான் பலரும் இடைத்தேர்தலே வேண்டாம், ஏற்கனவே ஜெயித்த கட்சியிலேயே ஒருவரை மீண்டும் தேர்ந்தெடுத்து விடலாம் என்கிறார்கள்.. பெரும்பாலும் எதிர்க்கட்சிகளும், பல சிறிய கட்சிகளும் இடைத்தேர்தல்களை ஏதாவது ஒரு சாக்குச் சொல்லிப் புறக்கணித்து விடுவதும் இதனால் தான்.. ஏதோ தேர்தல் நடத்தியாக வேண்டுமே என்கிற கடமைக்காக பெயருக்கு நடத்தப்படுபவை இடைத் தேர்தல்கள்..
சரி இப்ப மேட்டருக்கு வாரேன்.. ஒரு அரசியல்வாதி.. அவர் மிகத் தெளிவாகச் சொல்கிறார், நான் சட்டசபைத் தேர்தலில் தான் நிற்பேன் என ஒரு குறிப்பிட்டத் தேர்தலை.. அவரிடம் போய் வார்டு கவுன்சிலர் தேர்தலில் இருந்து பாராளுமன்றத் தேர்தல், பாகிஸ்தான் அதிபர் தேர்தல்னு எது நடந்தாலும் “நீங்க இந்தத் தேர்தல்ல நிப்பீங்களா?”ன்னு மைக்கை நீட்டிக்கொண்டு நம் மீடியாக்கார முட்டாள்கள் கொஞ்சம் கூட அறிவே இல்லாமல் கேட்கிறார்கள்..
அந்த ஆளும் கேப்டன், பிரேமலதா, இளையராஜா மாதிரியெல்லாம் இவர்களை டீல் செய்யாமல் மரியாதையாக, “எப்பா நான் சட்டசபைக்குத் தேர்தல் வரும் போது தான் நிப்பேன்”னு தன்மையாகச் சொல்கிறார்.. இவர்கள் உடனே ஃப்ளாஷ்நியூஸ் போடுகிறார்கள், ”ரஜினி பாராளுமன்றத் தேர்தலில் நிற்கவில்லை”, “இடைத்தேர்தலிலும் ரஜினி நிற்கவில்லை” என..
ஏன்டா டேய் அவர் தான் ஒரு வருசம் முன்னாடி இருந்தே சொல்லிக்கிட்டு இருக்கார் சட்டசபைத் தேர்தல் தான் இலக்குன்னு.. அப்பப்ப செய்தி பாக்குற எனக்கே இது நல்லா ஞாபகம் இருக்கு.. டெய்லி நியூசுக்காக நாக்கைத் தொங்கப்போட்டு அலையும் உங்களுக்கு மட்டும் மறந்து போயிருதா? இல்ல, ’24 மணி நேரம் சேனல் ஆரம்பிச்சிட்டோமே, எதையாவது போட்டு ஆகணுமே’ங்கிறதுக்காக ஒரே செய்தியை மாசத்துக்கு ஒருக்க வேற வேற மாதிரி ட்விஸ்ட் பண்ணி போடுறீங்களா?
//பற்றிச் சொல்லும் போது ஏற்கனவே ஜெயித்த கட்சியில் இருந்தே இன்னொருவரை மீதிக் காலத்திற்கு MLAவாக இருக்க வைத்து விடலாம் என்கிற கருத்தைக் கொண்டவர்கள் // - இதில் அவ்வளவாக அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. நாட்டில் ஏற்கனவே 33% இட ஒதுக்கீடு கிரிமினல் குற்றவாளிகளுக்குப் போய்விட்டதாகச் செய்தி (தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் அத்தனைபேர் மேல் கிரிமினல் குற்றங்கள் இருக்காம்). இப்போ இந்தச் சட்டம் வந்தால், அவனவன், அவனுடைய கட்சிக்காரர்களையே கறுப்புப் பூனைப் படை இல்லாமல் சந்திக்கமுடியாது. அதனால்தான் இந்த மாதிரி சட்டம் வராது.
ReplyDeleteதேர்தல் சீர்திருத்தங்களில் இடைத்தேர்தல்களே அவசியமில்லை என்பதான ஒரு கருத்து உண்டு. அதன்படி தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு கட்சியே தவிர, வேட்பாளர் அல்ல. தனியாகப்பார்க்கும்போது, இருக்கிற தலைவலியோடு புதிதாகச் சேர்க்கிற ஒன்றாகத்தான் தெரியும். தேவைப்படுகிற தேர்தல் சீர்திருத்தங்கள் என்னென்ன என்பதுகுறித்து ஒரு முழுமையான பார்வை கிடைத்தால் அதிலுள்ள நியாயமும் புரியும். இதன் மீது பரவலான விவாதம் இப்போது மிகவும் அவசியம்..
Deleteஎழுபதுகளில் தினமணி ஆசிரியர் திரு ஏ என் சிவராமன் வெவ்வேறு ஜனநாயக நாடுகளில் உள்ள தேர்தல் முறைகள், அவைகளில் உள்ள குறை நிறைகளைக் குறித்து தொடர்கட்டுரைகளாக எழுதினார். வாசகர்களை சிந்திக்கவைத்த தொடர் அது.
இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு winner takes all என்கிற வெஸ்ட்மின்ஸ்டர் தேர்தல் முறை ரொம்பவும் சௌகரியமாக இருப்பதால் தேர்தல் சீர்திருத்தங்களுக்காக அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. ஜனங்களுக்கோ இதைப்பற்றி எதுவுமே தெரியாது!
உண்மைத் தொண்டன் என்பவன் யார்? அவன் 'உண்மையான தொண்டன்' என்றால், எதையும் அந்தக் கழகத்திலிருந்து எதிர்பார்க்கக்கூடாது. இன்னொரு கழகத்தில் ஜெ. இருந்தவரை, யாரையும் கோபுர உச்சியில் வைப்பார். அதனால் அதிமுக தொண்டனுக்கு வாய்ப்பாவது இருந்தது. திமுகவில் அது 'சுத்தம்'.
ReplyDeleteதிமுக பாளையக்காரர்கள் கட்சியாக மாறி நீண்டகாலம் ஆகிவிட்டதே!
Deleteபொதுவா வட சென்னை-கம்யூனிஸ்டுகள், மத்திய சென்னை-மாறன், தென் சென்னை-காங்கிரஸ் என்பதுதான் ஒதுக்கீடு. அதனால வதந்திகளை நம்ப வேண்டாம். ஆனால் உதயநிதி கோட்டாலதான் கள்ளக்குறிச்சில பொன்முடி பையன் நிக்கப்போகிறாராம். (எம்.எல்.ஏ சீட்டுகளில், அன்பழகனுக்கு ஒரு இடம், கருணாநிதி வண்டியைத் தள்ளிக்கொண்டு சென்றவருக்கு ஒரு இடம் என்றெல்லாம் கோட்டா உண்டு என்று பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள். (அந்த எலெக்ஷன்ல)
ReplyDeleteநீங்க சொன்னது உண்மை.
Delete//உதயநிதி கோட்டாலதான் கள்ளக்குறிச்சில பொன்முடி பையன் நிக்கப்போகிறாராம்//
Deleteஇப்படி ஒரு செய்தியை நானும் பார்த்தேன். ரெண்டு முருகன், எ வ வேலு இன்னபிற பாளையக்காரர்கள் வாரிசுகளை வளர்த்துவிடாவிட்டால், திமுக முதல்குடும்பத்து வாரிசுகளும் தலையெடுக்க முடியாது என்பது கருணாநிதி காலத்தைய, கழகம் வளர்ந்த கதை. அப்படியே இன்றும் தொடர்கிறது!
உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள தினமும் எழுதுங்க.வேறு எதையும் பார்க்க வேண்டாம்.
ReplyDeleteஆரம்பநாட்களில் இருந்தே வாசகர் எண்ணிக்கை, பின்னூட்டங்கள் இவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் தான் எழுதிவருகிறேன். பிரபல பதிவர் எழுத்தாளர் ஆகிவிடும் ஆசையெல்லாம் இருந்ததில்லை. ஆனாலும் சொல்கிற விஷயங்களைக் கவனிக்கிறார்களா, யோசிக்கிறார்களா என்ற கேள்விக்கு விடைதெரியாமல்தான் அனலிடிக்ஸ் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்பதே!
Deleteஇருந்தாலும், ஆற்றுப்படுத்தியதற்கு மிகவும் நன்றி ஜோதி ஜி!
ஊடகத்தினருக்கு கேப்டன் பிரேமலதா இளையராஜா ஆகியோர் தான் சரியான நபர்கள். இவர்களைப் போல திட்டினாலும் திரும்ப அதையே செய்து அசிங்கப்பட்டு நிற்பார்கள்.
ReplyDeleteகேப்டன் துப்பியதில் தவறே இல்லை.