தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாதுரியமாகப் பேசவும் முடிவெடுக்கவும் வல்லவர் என்பதை சமீபகால நிகழ்வுகள் காட்டிக் கொண்டிருக்கின்றனவோ?
தேதிமுகவுடனான பேச்சுவார்த்தைகள், நெருடல்களை சாமர்த்தியமாகப் பதில் சொல்லிச் சமாளிக்கிறார். கள யதார்த்தம் புரிந்து பேசுகிற ஒருசில அரசியல்வாதிகளுள் எடப்பாடியும் இருக்கிறார் என்பது ஏன் இங்கே பரவலாகத் தெரியவில்லை?
தலைமை தேர்தல் ஆணையம் கமல் காசர் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி அறிவித்து இருப்பதோடு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்படவில்லை என்றும் செய்தி சொல்கிறது.
MNM thanks the Election commision for granting us the "Battery Torch" symbol for the forthcoming elections. So appropriate. @maiamofficial will endeavour to be the “Torch-Bearer” for a new era in TN and Indian politics.
“Torch-Bearer” தமிழில் எப்படிச் சொல்வது? விளக்கு பிடிப்பவர் அல்லது விளக்கு ஏந்துபவர் என்றா? இப்படியெல்லாம் கேள்வி வரும் என்று அவர்களே தமிழிலும்! ஆனால் bearer இல்லை!
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “பேட்டரி டார்ச்” சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. பொருத்தமான சின்னம் தான். @maiamofficial தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும்.
எதிர்க்கட்சிகளுக்கும் தேடிவந்து தேர்தல் நிதி படியளக்கும் கார்ப்பரேட் முதலாளி முகேஷ் அம்பானி மகன் திருமண விழாவில் இசுடாலின் கலந்து கொண்டாராமா? இந்த வீடியோவில் அதிபிரபலங்கள் பெயர், முகம்தான் தெரிந்ததே தவிர இசுடாலின் போன்றவர்களைக் காணமுடியவில்லையே ஏன்?
நாடாளுமன்றத்தேர்தல்களோடு, 4 மாநில சட்டசபைத் தேர்தல்களுக்குமான தேதிகளை இன்று மாலை தேர்தல் ஆணையம் அறிவிக்கவிருக்கிறது. தேர்தல் திருவிழா அதிகாரபூர்வமாய் களைகட்டத் தொடங்கிவிடும்!
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கவா இத்தனை எழுதுவது? விசிக, பாமக இடதுசாரிகள் மாதிரியான உதிரிகளை அவர்கள் எந்த அணியில் இருந்தாலும் முற்றொட்டாக நிராகரிப்பது என்பதில் இருந்து வாக்காளர்களுடைய சரியான அரசியல் செயல்பாடு தொடங்குகிறது!
நினைவில் வைத்துக் கொள்வீர்கள் தானே!
No comments:
Post a Comment