வேட்பாளர் அறிவிப்பைக் கூட சினிமா பாணியில் ஒரு 4 நாள் இன்டெர்வல் விட்டு வெளியிடுவது கமல் காசர் இஷ்டைல் போல! இன்று முதல்பகுதியாக 21 பெயர்களை சென்னை தி.நகரில் அறிவித்துவிட்டு அடுத்த அறிவிப்பு, கோவையில் என்று இட(ம்)வெளி விட்டும் அறிவித்திருக்கிறார்.
''அழகான வேட்பாளரை பிரதிநிதியாக்கத் தவறி விடாதீர்கள்''- தமிழச்சிக்காக உதயநிதி பிரச்சாரம் உதயநிதியை மூன்றாம் கலீஞர் என்று அழைப்பது சரிதானோ? திராவிட பாரம்பரியம் தப்பாமல் பிறந்த வாரிசு என்று கேலிசெய்யப்படுவதாக தினசரி தளத்தில் செய்தி சொல்கிறது
இந்திய தேர்தல் ஆணையத்தில் இதுவரை 2 ஆயிரத்து 293 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் புதிதாக 15 கட்சிகள் உதயமாகி உள்ளன.
சென்னை போரூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சி.
முகப்பேரை தலைமையிடமாகக் கொண்டு மக்கள் விடுதலை கட்சி.
நெல்லை சி.என்.கிராமத்தை தலைமை அலுவலகமாக கொண்டு அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம்.
கும்பகோணம் பட்டீஸ்வரத்தை தலைமையிடமாகக் கொண்டு அண்ணா, எம்ஜிஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகம்.
விழுப்புரம், திருக்கோயிலூரை தலைமை அலுவலக முகவரியாக அளித்து தமிழ் தெலுங்கு தேசிய கட்சி.
சென்னை கோடம்பாக்கத்தை தலைமை அலுவலகமாக கொண்டு மக்கள் முன்னேற்ற செயல் கட்சி.
நாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு மக்கள் மசோதா கட்சி.
திருவள்ளூரை தலைமையிடமாக அறிவித்து ஊழல் எதிர்ப்பு இயக்க கட்சி.
வேலூர் காட்பாடியை தலைமை முகவரியாக காட்டி தமிழ் மாநில முற்போக்கு திராவிட கழகம்.
சென்னை, எர்ணாவூரை தலைமையிடமாகக் கொண்டு அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம்.
சென்னை ஆழ்வார்பேட்டையை தலைமையகமாகக் கொண்டு ஸ்வதந்திரா கட்சி (மக்கள்)
சேலம், ஆத்தூரை தலைமை அலுவலகமாக கொண்டு விவசாயிகள் மக்கள் முன்னேற்ற கட்சி
கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு அனைத்திந்திய மக்கள் கட்சி.
வேலூரை தலைமை அலுவலகமாக காட்டி தேசிய உழவர் உழைப்பாளர் கழகம்.
கோவையை தலைமையிடமாகக் கொண்டு நியூ ஜெனரேசன் மக்கள் கட்சி.
ஆகிய கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.
இவ்வளவு அரசியல் கட்சிகள் அவசியம் தானா? இவற்றில் பெரும்பாலானவை லெட்டர்பேட் கட்சிகள் மட்டுமே. வரி ஏய்ப்பு செய்வதற்காகவே பயன்படுத்தப் படுபவை என்பது தெரிந்தும் தேர்தல் ஆணையம் பதிவு செய்வது கேவலமாக இல்லையா?
பலகட்சி தேர்தல்முறை என்பதில் ஒரு கட்சிக்குக் குறைந்தபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை நிரூபணம். பதிவாகிற வாக்குகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக வாங்குகிற கட்சி நீக்கம் செய்யப்படுவதும் சுயேட்சைகள் என்கிற ரகமே இல்லாமல் செய்வதும் இன்றைக்கு அவசரமாகத் தேவைப்படும் சீர்திருத்தங்கள்!
புதுக் கட்சிகள் மட்டுமல்ல, எந்த ஒரு பதிவு பெற்ற கட்சியும், பிற கட்சியோடு கூட்டணி வைத்துக்கொண்டால், கட்சியின் பதிவை நீக்கிவிடவேண்டும். கூட்டணி வைத்துக்கொள்ளும்போது, தனியாக ஒரு கட்சி என்று ஏன் வைத்துக்கொள்ளவேண்டும்? இது எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும். அப்போதான், பெரும்பான்மை மக்களின் ஆதரவு யாருக்கு என்று தெரியும். கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிடும்போது, குறைந்தபட்ச வாக்குகளை (தற்போது உள்ள நடைமுறைபோல) வைத்தால் அதனை பதிவு பெற்ற கட்சியாக ஏற்றுக்கொள்ளலாம்.
ReplyDeleteஇப்போல்லாம், கொள்கையை மட்டும் கடன் வாங்குவதில்லை. அடுத்த கட்சியின் சின்னத்தையும் கடன் வாங்கி போட்டிபோடுகிறார்கள். வெட்கக்கேடு.
coalition politics என்பது ஜனநாயகத்தில் அங்கீகரிக்கப்படுகிற, ஒருவிதமான சமரசம். தேர்தல் சீர்திருத்தங்களில் அதன் மேல் கைவைக்க முடியாது.ஆனால் வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி, lawmakers என்றாவதற்கு அரசியல்சாசனம் குறித்த அடிப்படை ஞானம் இவைகளோடு தங்கள் தொகுதி வாக்காளர்களுக்குப் பொறுப்பானவர்கள் என்பதை வெளிப்படுத்தவேண்டிய கட்டாய நடைமுறைகள் என்று வேண்டுமானால் தேர்தல்முறைகளில் சீர்திருத்தம் கொண்டுவரலாம். இங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு எவருக்கும் பதில் சொல்ல வேண்டியதே இல்லை என்கிற நிலைமை முதலில் மாற்றப்பட்டாக வேண்டும்.
Deleteகாலங்களாக உதிரிக்கட்சிகள் பெருகுவதை வாக்காளர்களும், தேர்தல் சீர்திருத்தங்களும் தான் கட்டுப்படுத்த முடியும்.
காளான்களாக என்று கடைசிவரியின் ஆரம்பவார்த்தையைத் திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.
Deleteஇன்னொன்று, ஒவ்வொரு கட்சிக்கும், இவ்வளவு செலவழிக்கலாம் என்று இருக்கும். அதனை கேபிடலைஸ் பண்ணிக்கொள்ளவும், தகிடுதத்தம் செய்யவும்தான் லெட்டர்பேட் கட்சிகள் உள்ளன. யோசித்துப் பாருங்கள், பச்சமுத்துக்குள்ள கட்சிக்கு எங்க ஓட்டு இருக்கு, எதை வைத்து அவர் கட்சி நடத்துகிறார், எப்படி அவர் சீட் பெற்றார் என்று...
ReplyDeleteஇங்கே தொழில் செய்கிறவர்களில் வித்தை தெரிந்தவர்கள் பச்சமுத்து போல தேர்தல் நாங்கடை கேட்டு பிறகட்சிகள் மிரட்டலில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் கூட கட்சி ஆரம்பிக்கிறார்கள். கூட்டணி, சீட் ஜெயிப்பது எல்லாம் உபரி லாபம்
Delete