சீட் கிடைக்காத விரக்தியில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். (குட்டி ஜாமீனுக்குத் தொகுதி தங்கள் கையைவிட்டுப் போகாதென்று அவ்வளவு நம்பிக்கை!) இதன் தொடர்ச்சியாக ப.சிதம்பரம் மீது ராஜ கண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சிவகங்கை தொகுதியில் CONகிரசுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக கார்த்தி சிதம்பரம் ராஜகண்ணப்பனை சந்தித்து ஆதரவு பெற்றார். இதனால் ப. சிதம்பரத்தின் வெற்றியை(2009) எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு என்னவாகும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால், CONகிரசுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தாலும் கூட ப.சிதம்பரம் மீதான வழக்கு தொடரும் என ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதனால் ஆடு பகை, குட்டி உறவா என்ற கேள்வி CONகிரஸ் கட்சியினர் இடையே எழுந்துள்ளது. ப்பூ! வழக்கே !உன் விலையென்ன என்று அப்பச்சிகள் கேட்டால் கேள்விக்கு விடை தானாகத் தெரிந்து விடப்போகிறது!!
இன்னும் இழுபறிதான்! இதுதான் தலைப்புச்செய்தி என்றால் வெறுப்பு வருமா வராதா? தொடர்புடைய பதிவாக அதற்குப் பதிலாக கீழே!
CONகிரஸ் கட்சியில் இருந்து வெளியேறும் தலைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகரித்துக் கொண்டே போவதில் CONகிரஸ் மூழ்கிக் கொண்டிருக்கும் ஓட்டைப்படகு தான் என்பது நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் CONகிரஸ் கட்சியை உய்விக்க வந்த மாமணிகளாக நம்பப்படும் பப்புவும் பப்பியும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
நேற்றைய ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் பர்கா தத் ஒரே உபதேச மழை அல்லது புலம்பல்! Is the Congress playing for 2019 or 2024? படித்துப் பார்த்து விட்டு என்ன தோன்றுகிறது என்று சொல்லுங்கள்!
அரசியல் முந்தைய நாட்களில் கொஞ்சம் சீரியசான சப்ஜெக்டாக இருந்தது. திராவிடங்கள் தலையெடுத்துக் கூத்துக்கட்டி ஆட ஆரம்பித்தார்கள்! வாரிசுகளின் கைக்கு வந்தபிறகு வெறும் விளையாட்டாகப் போய்விட்டது.
இவர்கள் விளையாட, நாம் தான் கிடைத்தோமா?
அதென்ன CONகிரஸ்?
ReplyDeleteCon என்பது ஏமாற்றுவது, மோசடி செய்வது இப்படிப்பட்டவர்களை Conman என்பார்கள் ஓர் கட்சியே அப்படிப்பட்ட மோசடிக்கட்சியாக இங்கே இருப்பத்தைச் சுட்டிக் காட்ட, CONகிரஸ்
Deleteஅரசியலில் ராஜகண்ணப்பன், திருமாவளவன், வைகோ போன்ற நம்பத்தகாதவர்கள்தாம் இருக்கிறார்கள். ராஜகண்ணப்பன் இப்போதே 50 வாங்கிக்கொண்டு (பசி இடமிருந்து), தேர்தல் வழக்கைக் கண்டுகொள்ளாமல் விட்டதால் ஜெவின் நன்மதிப்பை இழந்தார், ஓரம் கட்டப்பட்டார் என்று படித்திருக்கிறேன்.
ReplyDeleteஒரு நடிகையோடு குடித்தனம் நடத்திய ராசி சரியில்லையோ என்னவோ? :)))
Deleteஇல்லை. வற்புறுத்தி (கட்டாயப்படுத்தி) அது நடந்ததால்தான் ராஜகண்ணப்பனை ஜெ. கழட்டிவிட்டார் என்றும் படித்த ஞாபகம் உள்ளது. (இதுபோல செங்கோட்டையன் அவர்களின் மனைவி ஜெ.விடம் புகார் சொல்லி-அதாவது இன்னொரு தொடுப்பு விஷயத்தை, அதனால் செங்கோட்டையன் அவர்களை ஜெ. கழற்றிவிட்டார்)
Deleteநான் கண்ணப்பன் விலைபோகவில்லை என்று சொல்லவில்லை! அவருடைய ராசி இன்னமும் மேலே வரவிடாதபடி செய்துகொண்டிருப்பதைத்தான் சொன்னேன்.
Deleteசெங்கோட்டையன் விவகாரத்தில் நீங்கள் சொன்னது உண்மை. ஆனால் மனிதர் பொறுமையாக இருந்து கட்சிக்குள் வந்தார், அமைச்சராகத் திறம்படப் பணியாற்றுகிறார். கண்ணப்பன் பலமுறை இங்கும் அங்கும் மாறியவர்
பர்க்கா த்த் புலம்புவது நியாயம்தான். அவரது பிசினெஸ்னா அடிபடுது. காங்கிரஸ் இருந்தால் எவ்வளவு சம்பாதித்திருப்பார்.
ReplyDeleteஉண்மைதான்! ஐமு கூட்டணிக் குழப்ப அரசியலில் பர்கா தத் முதற்கொண்டு நிறைய ஊடகக் காரர்கள் அதிகாரத்தரகு வேலையில் நன்றாகச் சம்பாதித்தார்கள்! எக்ஸ்க்ளூசிவ் செய்தி அது இது என்று ஏகப்பட்ட தம்பட்டமும் செய்துகொள்கிற வாய்ப்பும் கிடைத்தது. பிரதமர் ஜனாதிபதி வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களில் இவர்களுக்கும் இடம் இருந்தது.
Deleteநரேந்திர மோடி பிரதமரானதும் ஒரே நாளில் அத்தனை சுகபோகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.