Saturday, March 30, 2019

விந்தைகள் நிறைந்தது தேர்தல்களம்!

ஹரன் பிரசன்னா முகநூல் பகிர்வில் இந்த வீடியோவை பார்த்தேன். உண்மையிலேயே வேறே லெவல்! வெறும் 45 வினாடிகள்தான்! கன்னத்தில் அறைந்து நடப்பு நிலவரத்தைச் சொல்கிறது. ரெண்டு முருகன் வீட்டில் ரெய்டு நடந்தது பற்றி இசுடாலின் ஏதாவது சொல்லியிருக்கிறாரா என்று பார்த்தால் கண்டனம் தெரிவித்திருக்கிறாராம்! தினமணி தளத்தில் செய்தி 

பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன் என்று சொன்னாராம் துரைமுருகன். பயந்துகொண்டே சொன்னாரா அல்லது பயப்படாமல்தான் சொன்னாரா என்று தெரிந்துகொள்ள ஆசைதான்!

இது  ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா தளத்தில் வெளியான நையாண்டி. இந்து தமிழ்திசை வேறுமாதிரி கவலைப்படுகிறது.

ஏன் வாரிசுகளே இல்லையா என்ன? எதற்கு இந்த வீண் கவலை?  


ஜனவரி 23 இல் சனாதன வேரறுப்போம்! ஜனநாயகம் காப்போம்! என்று சூளுரைத்து திமுக கூட்டணியில் 2 சீட் வாங்கிவிட்ட திருமாவளவன்  செய்திருப்பது என்ன? சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குப்போய், திருநீறு பூசி தீட்சிதர்களிடம் வாக்கு சேகரித்தாராம்! விகடன் தளம் செய்தி சொல்கிறது.

சரி, வேட்பாளர் வந்தார்! கும்பிடுபோட்டார்! தீட்சிதர்கள் திருநீறு கொடுத்தனுப்பியதோடு விட வேண்டியதுதானே? ஆளூர் ஷா நவாசுக்கு இந்துக் கோவிலுக்குள் என்ன வேலை?   கோவிலுக்குள் வந்து வாக்கு சேகரிப்பது என்ன தேர்தல் லோலாயித்தனம்? 

Raja Sankar
கோவிலுக்கு வந்தா திருநீறு கொடுத்துவிட்டா போதாதா?
இப்படி இளிச்சிட்டே கொஞ்சி குலாவ வேணுமா? விட்டா காலிலியே விழுந்து ஆசீர்வாதம் வாங்கிருப்பாங்க போல.
இதனால் தான் பூணூல் அறுத்தாலும் திட்டினாலும் அடித்தாலும் மற்றவர்கள் யாரும் உதவிக்கு வர்றதில்லை.
பின்னே இவிங்களுக்கு உதவ போயி இவிங்களே பூணூல் அறுத்தவனோட கொஞ்சி குலாவ போயிடுவாங்க எல்லாம் நினைக்கறாங்க.இதுல பலருக்கு ரோஷம் பொத்துட்டு வருதாம். வந்தா வாங்க வராட்டி போங்கன்னு. அதான் யாரும் வர்றதில்லையே அப்புறம்?
அப்படி அந்த வயிறுக்கு சோறூ தின்னேதான் ஆகனுமா?
கொஞ்சமாச்சும் வெக்கம் ரோஷம் மானம் எல்லாம் வேண்டாமா?இதுல யாராச்சும் தமிழ்ல பாடுவேன் அப்படீன்னா மட்டும் உடனே ரவுடி ஐயர் ஆகிடுவாங்க.
ஏன்னா பசிக்கும்ல அப்படீன்னு.அப்படீன்னா என்ன? இந்த கோவிலை இடிப்பேன் என சொன்ன ஆட்களுக்கு இந்த தீட்சிதர்கள் ஆதரவாகத்தானே இருக்கிறார்கள் என அர்த்தம்.
ஒருவேளை அந்த கட்சியிலேயே மானவெக்கம் இல்லாம உறூப்பினராக இருப்பாங்களா? இதையும் செஞ்சிட்டு ஆ ஊன்னா சாஸ்திரம் சம்பிரதாயம் என சொல்லுவாங்க பாருங்க கடுப்பாவும். முதல்ல நீங்க சாஸ்திரம் சம்பிரததாயத்தை எல்லாம் கடைபிடிங்க. அப்பாலிக்கா மத்தவிங்களுக்கு அறிவுரை சொல்லலாம்.சாதிக்கு 5 சதம் பத்து சதம் இப்படி கோடாரிக்காம்புகள் இருக்கறது உலக வழக்கம் தான். 
ஆனா சாதியே கோடாரிக்காம்புகளால் ஆனதா இருக்ககூடாது. அழிஞ்சு தான் போவும். 

என்று பொங்கியிருப்பதில் தவறே இல்லை! இங்கே ராதிகா கீச்சுக்கு ஒருத்தர் பொங்கியிருக்கிறார்! 
விந்தைகள் நிறைந்தது தேர்தல் களம்! 
      

2 comments:

 1. ஏதோ திருமாவளவனுக்கு கொள்கை, மானம், வெட்கம் இருக்கறமாதிரி எழுதறீங்களே.... ராஜபக்‌ஷே தரும் லஞ்சுக்கும் பரிசுக்கும் போய் பல் இளித்துவிட்டு வந்தாரே... இங்கேயும் இலவச உணவு கிடைக்குமா என்று பார்த்திருப்பார். இவருக்கு நல்ல நேரம். அதனால்தான் பாமக திமுக அணியில் சேரலை. சேர்ந்திருந்தால் திருமா இப்போது டிடிவி தினகரனுக்கு சாமரம் வீசிக்கொண்டிருப்பார்.

  ReplyDelete
  Replies
  1. ஒரு தனிமனிதனாக எவருடைய தன்மானம், கொள்கைப்பிடிப்பு இவைகளை நான் விமரிசிப்பதில்லை.

   ஒரு தனிமனிதனாக திருமாவளவன் மீது கொஞ்சம் நம்பிக்கை சில ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது. ஆனால் ஒரு அரசியல் இயக்கமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது எனக்குப் பிரமாதமான அபிப்பிராயம் இருந்ததில்லை. நிராகரிக்கப்படவேண்டிய உதிரி என்றுவிசிக, இடதுகள், பாமக என்று தொடர்ந்து தெளிவாகவே சொல்லி வருகிறபோது, இதென்ன வீண் சந்தேகம்?

   Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)