அன்பின் சீனா என்று பதிவுகள், பின்னூட்டங்களில் இனிமேல் பார்க்க முடியாது. நேற்று இயற்கை எய்தியதாக எங்கள் பிளாகில் KG கூடுதல் தகவலும், இடதுபக்கம் புகைப்படம் போட்டு அஞ்சலி செய்ததிலும் தகவல் தெரிய வந்தது. வலைப்பதிவுகளில் எழுதுவதை நிறுத்திவிட்டார். முகநூல் பதிவுகள் 2013க்குப் பிறகு எதுவுமில்லை. வலைச்சரம் கூட 2015 க்குப் பிறகு இயங்கவில்லை. ஆனால் சீனா என்றவுடன் அவருடைய சிரித்த முகமும், எவரையும் காயப்படுத்தாத நாகரீகமான பின்னூட்டங்களும் நினைவுக்கு வராத தமிழ்ப் பதிவர்களே அநேகமாக இருக்க முடியாது.
சீனா என்று செட்டிநாட்டு வழக்கப்படி சுருக்கமாக அழைக்கப்பட்ட திரு சிதம்பரம் அவர்களுக்கு இதய பூர்வமான அஞ்சலிகளைத் தெரிவிப்போம்.
நேரடியாக சந்தித்ததில்லை என்றாலும், ஆரம்ப நாட்களில் blogs for a cause என்று ஒரு பொதுவிஷயம் குறித்து பதிவர்கள் எல்லோரும் பதிவெழுதலாம் என்ற யோசனையை முன்னெடுத்துக் கொண்டிருந்த சமயங்களில், பதிவர் வால் பையன் அருண் மூலமாகத் தொலைபேசியில் என்னோடு பேச ஆரம்பித்தது, அடுத்த ஓரிரு வருடங்கள் வரை தொடர்ந்தது.
அன்பின் சீனா! போய் வாருங்கள்!
தகவலுக்கு மிக நன்றி. வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஆதர்சமாக இருந்தவர்.
ReplyDeleteமிக நபான சுருக்கமான எழுத்துக்கு உரியவர். தமிழுக்கு மேன்மை கொடுத்து பதிவர்களை உற்சாகப் படுத்தியவர்.
அன்பின் சீனா. வணக்கமும் அஞ்சலிகளும்.
எங்கள் இதயபூர்வமான அஞ்சலி. நல்ல மனிதரின் இழப்பு மனதுக்குள் கஷ்டமாக இருக்கிறது.
ReplyDeleteஎனது ஆழ்ந்த இதயபூர்வமான அஞ்சலிகள் .ஐயா அவர்களுக்கு
ReplyDeleteஅவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறேன்
ReplyDeleteமிக மிக அன்பான மனிதரின் இழப்பு பெரிய இழப்பு வலையுலகிற்கு
ReplyDeleteஎங்களின் ஆழ்ந்த அஞ்சலிகள் அவர் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்.
துளசிதரன், கீதா
ஆழ்ந்த இரங்கல்
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்...
ReplyDelete