கர்நாடக முதல்வர் HD குமாரசாமி அவருடைய கட்சி வருகிற தேர்தலில் 20 சீட்டு ஜெயித்தால், ஒரு கன்னடரே பிரதமராகலாம் என்று பேசி முழுதாக 4 நாள் ஆகவில்லை! அடுத்த அரசியல் வெடியை எடுத்து வீசியிருக்கிறார்! முதலில் கன்னடர் பிரதமராவது பற்றி என்ன சொன்னார் என்று பார்த்துவிடலாமே!
நேற்று முன்தினம் மைசூரில் குமாரசாமி இன்னொரு அபசுரமாக அரசியல் வெடியை வெடித்திருக்கிறார் என்கிறது செய்தி. அவருடைய தந்தை தேவே கவுடா பிரதமராக இருந்தபோது தீவீரவாதிகள் குண்டு வெடிக்கவில்லையே யாரும் சாகவில்லையே என்று சொல்லி விட்டு ஏன் இப்போது அதெல்லாம் நடக்கிறது என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.போதாக்குறைக்கு ஜம்மு காஷ்மீரில் இந்தோ பாகிஸ்தான் எல்லைக்கு திறந்த ஜீப்பில் சென்ற ஒரே பிரதமர் தேவே கவுடா என்பதையும் சொல்லியிருப்பதை என்னவென்று எடுத்துக் கொள்வது? அவர் சொன்னதை வைத்து, பாகிஸ்தானிகள் அவரை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்றும் புரிந்துகொள்ளலாம் இல்லையா?
World Economic Forum வருடாந்திரக் கூட்டம் ஸ்விஸ் நாட்டில் டாவோசில் நடப்பதை ஒட்டி வந்தவர் ரகுராம் ராஜன் India Today TVக்கு அளித்த பேட்டியில் சில கற்பிதங்களை உடைத்துப் பேட்டி அளித்திருக்கிறார். முதலாவதாக, 2019 தேர்தலில் கூட்டணி ஆட்சி என்று வருமேயானால் இந்தியப் பொருளாதாரம் தேக்கநிலை அடையும் என்று சொல்லியிருப்பது! இப்படி இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே எழுதியிருந்ததை ஒரு முறை நினைவு படுத்த வேண்டியிருக்கிறது!
அதோடு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கூட!
கிருஷ்ண மூர்த்தி SJanuary 25, 2019 at 12:06 PM
கொள்கை முடிவுகளை எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்காத, வலிமையான மத்திய அரசை நிறுவுவதில், வாய்ப்பிருந்துமே கூடக் கோட்டை விட்டவர், இப்போதைய மாநிலக்கட்சிகளின் கூக்குரல்களுக்குக் காரணமாக இருந்தவர் தாத்தன் நேரு என்பதைக் கசப்போடு நினைவு படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது ஜீவி சார்!
1971 போரில் கிடைத்த வாய்ப்பைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக் கொள்ளாமல் ஒன்றுக்குஇரண்டாக பாகிஸ்தான் தலைவலியை நிரந்தரம் தானோ என்ற அளவுக்கு வளர்த்துவிட்டவர் இந்திரா. நேரு, இந்திரா, ராஜீவ் மூவருக்கும் மெஜாரிடியுடன் வலுவான மத்திய அரசை நிருவாக கூடிய வாய்ப்பும் கிடைத்தது. என்ன நடந்தது? தெளிவான பார்வை, இலக்கு எதுவுமில்லாமல் தாங்களும் கெட்டு, தேசத்தையும் பாழடித்தார்கள்.
Defacto பிரதமராகப் பின்னிருந்து இயக்கிய சோனியா அண்ட் கோ பத்தாண்டுகளில் சாதித்தது வரிசையாக வெடித்துக் கிளம்பிய ஊழல்கள் மட்டுமே!
வாஜ்பாயிக்குக் கிடைத்த வாய்ப்பை, ஓரளவுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடிந்தது
இந்தப் பின்னணியில், நரேந்திரமோடியின் முதல் ஐந்தாண்டுகளை எடைபோட வேண்டியிருக்கிறது. ஆனால் மோடிக்கெதிரான கூக்குரல்களில் எதை எடைபோட்டு, எது முக்கியமானது என்று சொல்ல முடிகிறது?
பதிவைத் தாண்டி, வாசிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்கட்டுமே என்றுதான் ரகுராம் ராஜனை முன்னிட்டு எழுதிய இந்தப்பதிவு!

மோடி மீது காங்கிரசுக்கு இருக்கிற பயம் என்னென்ன அரசியல் காமெடிகளை அரங்கேற்றிக் கொண்டு வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டிய அவசியமும் ஒரு தெளிவான நிராகரிப்பை உதிரிகளுக்கு மட்டுமல்ல, இடம் கொடுத்த காங்கிரசுக்கும் சொல்ல வேண்டிய தருணம் நெருங்கி வருகிறது!