மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி கோஷம் என்னாச்சு?
உறவுக்குகைகொடுப்போம் உரிமைக்குக் குரல்கொடுப்போம் என்று கூட முழங்கினார்கள்
திராவிட நாடு கோஷம் மாதிரியே அதுவும் வசதிக்கு ஏற்றபடி வெளியே வரும், கிடப்பிலும் போடப்படும் என்பது இங்கே வாடிக்கைதானே! 2004 முதல் 2014 வரை மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி என்று இருந்த காலத்தில் இந்த கோஷம் மாநிலத்தில் மொத்தக் கொள்ளை, மத்தியில் கூட்டுக் கொள்ளை என்று ப்ராக்டிகலாகச் செயல்படுத்தப் பட்ட பழைய கதையை இன்றைக்கு முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நினைவில் வைத்துக்கொண்டு, சொல்லி இருப்பது என்னவென்று பார்க்கலாமா?
World Econom.ic Forum வருடாந்திரக் கூட்டம் ஸ்விஸ் நாட்டில் டாவோசில் நடப்பதை ஒட்டி வந்தவர் India Today TVக்கு அளித்த பேட்டியில் சில கற்பிதங்களை உடைத்துப் பேட்டி கொடுத்திருக்கிறார்.
முதலாவதாக, 2019 தேர்தலில் கூட்டணி ஆட்சி என்று வருமேயானால் இந்தியப் பொருளாதாரம் தேக்கநிலை அடையும் என்று சொல்லியிருப்பது!
அடுத்து, காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்குமேயானால் ரகுராம்ராஜன் தான் நிதியமைச்சர் என்பதையும் வெற்று ஊகமென்று மறுத்திருக்கிறார்! முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்! சித்தப்பாவா பெரியப்பாவா எப்படிக் கூப்பிடுவதென்று அப்புறம் யோசிக்கலாம் என்கிற மாதிரியே!
GST வரிவிதிப்பைப் பற்றியும் பாசிட்டிவாகச் சொல்லி இருக்கிறார்! Demonetisation பின்னடைவுதான் என்கிறார்!
இங்கே ஒவ்வொரு மாநிலக்கட்சிக்கும் பிரதமர் கனவு இருக்கத்தான் செய்கிறது! ஆனால், தேசநலனுக்கு ஒத்துவராதென்பதை ரகுராம் ராஜன் கூடச் சொல்கிறாரே!
ஊழலுக்கு கைகொடுப்போம்... வழக்கிலிருந்து தப்பிக்கக் குரல் கொடுப்போம் என்று சொல்லலாம்!
ReplyDeleteரகுராம் ராஜன் சொல்லி இருப்பது "சில சமயங்களில் சில உண்மைகளை மறைக்க முடியாது" என்று சொல்லலாம்.
வராக்கடன் சுமை பெரிய பிரச்சினையாக உருவெடுக்க ஆரம்பித்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு காலத்தில் தான்! தள்ளிப்போட்டு, தள்ளிப்போட்டே இன்றைக்கு பத்துலட்சம் கோடி ரூபாயை எட்டவிருக்கிறது.
Deleteகடிவாளம் போடவேண்டிய ரிசர்வ் வங்கி, அரசியல்வாதி அமைச்சர்களால் வெறுமனே வேடிக்கை பார்க்கிற இடத்தில் வைக்கப்பட்டது. இதெல்லாம் தெரிந்த ரகுராம் ராஜன் RBI சுயாட்சி பற்றி, உர்ஜித் படேலைப் பற்றிப் பேசுவது நகைமுரண்! இல்லையா ஸ்ரீராம்? சௌகரியப்படும்போது மட்டும் உண்மையைப் பேசுகிற ரகுராம்ராஜனைப் பற்றி நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!
பழைய திருடர்களே ஆட்சியில் இருந்தால் அல்லது மீண்டும் வந்தால் நேற்றைக்கு சந்தா கோச்சார் (ஐசிஐசிஐ வங்கி), வீடியோகான் வேணுகோபால் தூத் மீது சிபிஐ வழக்குப் பதிந்ததுபோல, நடவடிக்கை சாத்தியமா?
முதல் படத்தைப் பார்த்தவுடனேயே, கோவிந்தசாமி, மதியழகன், அண்ணா என்று அமர்ந்திருப்பவர்களிடம் பார்வை தாவியது. அதுவும் மதியழகன் என்றால் அந்த நாள் சட்டசபை கலவர ஞாபகம் தான் நினைவுகளில் படிகிறது.
ReplyDeleteஎக்காலத்தும் வலிமையான தனித்த பெரும்பான்மை கொண்ட நடுவண் அரசு அமைவது தான் நாட்டுக்கு நல்லது. கொள்கை முடிவுகளை எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் தீர்மானமாக எடுக்க முடியும்.
வெகுஜன மக்களுக்கு ஆதரவாகக் கொள்கைகளை வகுத்துக் கொண்டால் சரித்திரத்தில் இடம் பெறுகிற உன்னதம் கிடைக்கும். 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சி அடுத்துத் தொடர்வதற்குக் கூட இட்டுச் செல்லும்.
அப்படித் தனித்த பெரும்பான்மை கிடைத்தாலும் ஏதாவது காரணங்களுக்காக நெருங்கிய கட்சிகள் என்று வேண்டப்பட்டவர்களாய் சிலருடன் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதும் சில சங்கடங்களை விளைவிக்கும். தனித்த பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் ஆட்சி அமைப்பதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்காத அதே நேரத்தில் மக்கள் பணிகளில் கவனம் செலுத்துகிற 'புனிதக் கட்சிகள்' இந்த நாட்டில்
தழைத்தோங்கினால் நாட்டுக்கு நல்லது. குறிப்பிட்ட அப்படியான கட்சிகளின் அசைக்க முடியாத எதிர்கால பலத்திற்கும் வழி கோலும்.
கொள்கை முடிவுகளை எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்காத, வலிமையான மத்திய அரசை நிறுவுவதில், வாய்ப்பிருந்துமே கூடக் கோட்டை விட்டவர், இப்போதைய மாநிலக்கட்சிகளின் கூக்குரல்களுக்குக் காரணமாக இருந்தவர் தாத்தன் நேரு என்பதைக் கசப்போடு நினைவு படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது ஜீவி சார்!
Delete1971 போரில் கிடைத்த வாய்ப்பைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக் கொள்ளாமல் ஒன்றுக்குஇரண்டாக பாகிஸ்தான் தலைவலியை நிரந்தரம் தானோ என்ற அளவுக்கு வளர்த்துவிட்டவர் இந்திரா. நேரு, இந்திரா, ராஜீவ் மூவருக்கும் மெஜாரிடியுடன் வலுவான மத்திய அரசை நிருவாக கூடிய வாய்ப்பும் கிடைத்தது. என்ன நடந்தது? தெளிவான பார்வை, இலக்கு எதுவுமில்லாமல் தாங்களும் கெட்டு, தேசத்தையும் பாழடித்தார்கள்.
Defacto பிரதமராகப் பின்னிருந்து இயக்கிய சோனியா அண்ட் கோ பத்தாண்டுகளில் சாதித்தது வரிசையாக வெடித்துக் கிளம்பிய ஊழல்கள் மட்டுமே!
வாஜ்பாயிக்குக் கிடைத்த வாய்ப்பை, ஓரளவுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடிந்தது
இந்தப் பின்னணியில், நரேந்திரமோடியின் முதல் ஐந்தாண்டுகளை எடைபோட வேண்டியிருக்கிறது. ஆனால் மோடிக்கெதிரான கூக்குரல்களில் எதை எடைபோட்டு, எது முக்கியமானது என்று சொல்ல முடிகிறது?
பதிவைத் தாண்டி, வாசிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்கட்டுமே என்றுதான் ரகுராம் ராஜனை முன்னிட்டு எழுதிய இந்தப்பதிவு!