Monday, March 25, 2019

இரண்டு அரசியல் பகிர்வுகள்! முகநூல் முழுக்க மோசம் என்று யார் சொன்னது?

நண்பர் ராஜசிங்கர் வெறும் வாய்ச்சொல் வீரர் இல்லை. களத்தில் இறங்கிப் போராடுகிற இளைஞர் என்பதை, பதிவர்களாகவோ குழுமங்களிலோ அவரைத் தெரிந்து வைத்திருக்கிறோமா? ஒரு விவாதம் என்று வந்து விட்டால் சரியான தரவுகளுடன் தன்னுடைய தரப்பை எடுத்துச் சொல்லும் அற்புதமான எழுத்தாளர்! முகநூலில் சற்று முன் இப்படிப் பகிர்ந்திருப்பதைப் படித்தேன்.


ராகுல் எங்கு நின்றாலும் அவரை எதிர்த்து ஸ்மிரிதி ஈரானி போட்டியிருகிறாரா? ஏன் இப்போதைய பிஜேபி வாஜ்பேயி காலத்து பிஜேபி அல்ல?
அமேதியிலே தோற்றுவிடுவோம் என பயந்து பப்பு ராகுல் கான் கேரளாவிலே வயநாட்டிலே போட்டியிடலாம் என செய்தி வந்ததவும் பிஜேபி அங்கேயும் ஸ்மிரிதி இரானியை நிறுத்துவோம் என மறைமுகமாக சொல்லியுள்ளது.
இது ஒரு மிகப்பெரும் மாற்றம். அமேதியிலே ராகுலுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்துவது என்பதே பெரும் மாற்றமாக 2014 இல் இருந்தது. இப்போது அதற்கு ஒரு படி மேலாக போய் எங்கு நின்றாலும் எதிர்ப்பு உண்டு என சொல்கிறது பிஜேபி.
வாஜ்பேயி காலத்திலே எப்படி இருந்தது? அமேதியிலும் ரே பரேலியிலும் எந்த கட்சியுமே வேட்பாளர்களை நிறுத்தாது. அப்படியே நிறுத்தினாலும் மொக்கையாக யாரையேனும் நிறுத்துவார்கள். இதனால் பல லட்சம் ஓட்டுவித்தியாசத்திலே கான் காந்திகள் ஜெயித்துவந்தார்கள்.
2014 இல் மோடியும் அமீத்ஷாவும் இதை மாற்றி ஸ்மிரிதி இரானியை வேட்பாளராக்கினார்கள். கடும் பிரச்சாரமும் செய்தார்கள். முன்பு பல லட்சம் ஓட்டுவித்தியாசம், தொகுதி பக்கமே வராம இருந்தது என்றெல்லாம் போய் எல்லா வேட்பாளர்களையும் போல் ஓட்டு எண்ணும் போது கூட இருந்து பார்த்தும் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்திலே தான் ஜெயிக்க முடிந்தது.
அதன் பின்பும் தொடர்ந்து தொகுதிக்கு போனார் இரானி அவர்கள். சமீபத்திலே துப்பாக்கி தொழிற்சாலையை தொடங்கி வைத்தார் மோடி. இதிலே என்ன சிறப்பு என்றால் அந்த துப்பாக்கி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியது ராகுல் கான் 2007 இல். அதுக்கப்புறம் அது அப்படியே கிடந்து மோடி வந்து கட்டி முடிச்சு திறந்து வைத்தார்.
இப்போ எத்தினி லட்சம் ஓட்டு வித்தியாசத்திலே தோற்போம் என தெரியாததால் இங்கே ஒரு நல்ல தொகுதி பார்க்கவேண்டிய சூழ்நிலை. அதுவும் ராஜஸ்தான், கர்நாடகா, மேற்குவங்கம் என எங்கேயும் வெற்றி பெறக்கூடிய உறுதியான இடம் இல்லாததால் இங்கே வரவேண்டியிருக்கிறது.
யோசிச்சு பாருங்க? 70 வருடம் நாட்டை ஆண்ட கட்சி, கொள்ளுத்தாத்தாவிலே இருந்து பாட்டி, அப்பா, என மூன்று பேர் பிரதமராக இருந்தவர்கள். அம்மா மறைமுக பிரதமராக இருந்தவர். அந்த தொகுதியிலே இவர்கள் குடும்பம் தான் 1980 இல் இருந்து இன்று வரை வென்றது. 40 வருடமாக ஒன்றுமே செய்யாமல் அரச குடும்பம் போல தொகுதியை வைத்திருக்கிறார்கள்.
இதற்கு எல்லா கட்சிகளும் துணை போயிருக்கிறது. அப்போதைய பிஜேபி உட்பட.
இப்போ அதெல்லாம் முடியாது. எங்க நின்னாலும் எதிராக வேட்பாளரை நிறுத்துவோம் என பிஜேபி சொல்கிறது என்றால்
எவ்வளவு மாறியிருக்கிறது என பாருங்கள்?
ஏன் வாஜ்பேயியை ரொம்ப நல்லவர் என இவிங்க எல்லோரும் சொல்றாங்க ஏன் மோடியை எதிர்க்கிறார்கள் என பார்த்தால் இது தான் காரணம்.
அரசியல் என்பதை சும்மா பொழுது போக்குக்கு செய்யாமல் தேசப்பணியாக வாழ்வா சாவா போராட்டமாக செய்வது தான் மோடியின் புதிய பிஜேபி, புதிய இந்தியா.
இதிலே இன்னோன்றும் இருக்கிறது.
அது மோடிக்கு எதிராக ராஹூல் என இவர்கள் நிறுத்த முயலும் போது
ஸ்மிரிதி இரானிக்கு எதிராக ராஹுல் என பிஜேபி செய்து காட்டிவிட்டது.
ஸ்மிரிதி இரானியையே எதிர்த்து ஜெயிக்க முடியாத ராஹூலா, ஸ்மிரிதி இரானி கூட போட்டியிட பயப்படும் ராஹுலா மோடிக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள் என பிஜேபி கேட்கிறது?
மோடி மோடி என கூவிக்கொண்டிருந்த ராஹூல் இப்போது ஸ்மிரிதி ஸ்மிரிதி எனவும் கூவவேண்டும்.
சரி அப்படீன்னா மோடிக்கு எதிராகவும் கான்கிரஸ் இதை செய்திருக்கலாமே என நீங்கள் கேட்கலாம்.
செய்திருக்கலாம் தான். யார் தடுத்தார்கள்? வாரணாசிக்கு போய் வாக்காளர்களை பார்த்திருக்கலாம், அவர்களை குறைகளை கேட்டிருக்கலாம். ஆட்சியிலே இல்லை என்றாலும் அதை பற்றீ பேசியிருக்கலாம் பாராளுமன்றத்திலே குரல் கொடுத்திருக்கலாம்
லாம் லாம் தான். இதை செய்ய வாரணாசிக்கு ஏன் போகவேண்டும்? முதலிலே அமேதியிலும் ரேபரேலியிலும் செய்திருக்கலாமே?
அங்கு செய்திருந்தால் இந்த அவமானமே நேர்ந்திருக்காதே? ஒழுங்கா நாட்டை ஆண்டிருந்தால் வேலை செஞ்சிருந்தால் மக்களை மதித்திருந்தால் இப்படி மானங்கெட்டு நிற்கவேண்டியதில்லையே?
இது அடுத்த கிட்டிபிடி.
மோடிக்கு எதிராகவும் வேட்பாளரை நிறுத்தமுடியவில்லை.
ராஹுலுக்கு எதிராக நிறுத்தபட்ட வேட்பாளரையும் சமாளிக்க முடியவில்லை.
முடிஞ்சதா சோலி?
சரி தோத்து தான் போயிருவோம் அப்படீனாலும் கமுக்கமாக பிரச்சாரம் செஞ்சிருக்கலாம். வெளியே சொல்லாம.
இப்போ வெளிப்படையா சொன்னதாலே தேர்தல் தோல்வியை இப்பவே ஒப்புக்கொள்ளும்படி ஆகிவிட்டது.
ஏன் இப்படி நடந்துக்கறாங்கன்னா இதை வாஜ்பேயின் பிஜேபி என நினைச்சு
மோடி திரும்பவும் இந்தியா ஒளிர்கிறது என பிரச்சாரம் பண்ணுவார் முன்னே பண்ணியது மாதிரி அடிச்சிடலாம் என இருந்தாங்க. அதனாலே தான் கூட்டணிக்கு கூட அவசரம் காட்டல. எப்படியும் வறுமையை காரணம் காட்டி மோடியின் பிரச்சாரத்தை அமுக்கிடலாம் என இருந்தாங்க.
ஆனா இது புதிய இந்தியா, புதிய பிஜேபி, புதிய திட்டங்கள்.
மோடி எங்க அடிச்சா வலிக்குமோ அங்க அடிச்சிட்டார். இப்ப என்ன பண்ணுறது?
பார்ப்போம். எப்படியும் நாலஞ்சு நாளிலே தெரிஞ்சிட போகுது யார் எங்கே போட்டியிட போறாங்க அப்படீன்னு. 

டாக்டர் சுப்ரமணியன் சுவாமியை ரொம்பவும் தான் குறைத்து மதிப்பிடுகிறோம் என்ற வருத்தம் எனக்குண்டு. என்னதான் சில விஷயங்களில் மாறுபட்ட கருத்து இருந்தாலும் ஒரேயடியாகப் புறக்கணித்துவிட முடியாத ஆளுமை அவர் என்பது என்னுடைய கருத்து. சில அமீரகப் பதிவுலகப் போராளிகள் கூகிள் பிளஸ்சில் நான் இப்படிச் சொன்னபோது சுவாமியை நக்கலடித்துக் கமெண்ட் போடப்  பாய்ந்து கொண்டு வருவார்கள் 

கேள்விக்கென்ன பதில் என்று கேட்டு முடிப்பதற்கு முன்னாலேயே பதில்களை அள்ளியிறைப்பவர் டாக்டர் சுவாமி என்பது இந்த நேர்காணலில் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. நேற்றே இதை பகிர்ந்திருந்தும் கூட இதைப்பற்றிப் பேச, பின்னூட்டமிட எவருக்கும் தோன்றவில்லை. இப்படி வருத்தப்பட்டுக் கொண்டிருந்த நேரம் முகநூலில் B R  மகாதேவன் எழுதி இருந்த பகிர்வொன்றும் கண்ணில் பட்டது. இங்கேயும்!

நான் பிராமணன்; செளகிதார் அல்ல; பிராமணன் சொல்வதை செளகிதார் செயல்படுத்துவார்; செயல்படுத்தவேண்டும் என்று சுப்பிரமணியம் ஸ்வாமி சொன்னது ஜாதி மேலாதிக்க வார்த்தைகள் அல்ல; எந்தவொரு அமைப்பிலும் மூளையாக இருப்பவர்கள் வழிகாட்டத்தான் செய்வார்கள், மற்றவர்கள்தான் களமிறங்கிச் செயல்படுவார்கள். அதைத்தான் அவர் மொழியில் சொல்கிறார்.
*
அயோத்தி விஷயமாகட்டும் சல்லிக்கட்டாகட்டும் ஜெயலலிதா வழக்காகட்டும் அவருடைய பங்கு மதிக்கத்தக்கதே.
ராபர்ட் -ப.சி.- மாறன் வழக்காகட்டும் மெஹ்பூபா, கர்நாடக ஆட்சி விஷயமாகட்டும் அவர் சொல்வதைக் கேட்காமல் இழந்ததும் அதிகம். ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் கடந்த சில மாதங்களாக மட்டுமே கொஞ்சம் நம்பிக்கை தென்படுகிறது. இது போதாது.
அதோடு, மம்தா, மாயாவதி, கடைசி கால ஜெயலலிதா, சசிகலா-தினகரன், மாறன், ப.சிதம்பரம் என ஊழல் வழக்குகளில் வசமாகச் சிக்கியிருக்கும் அனைவரும் சொல்லிவைத்தாற்போல் பாஜகவை சகட்டு மேனிக்கு துளியும் பயமின்றித் திட்டித் திரிகிறார்கள். இவர்களின் ஃபைல்கள் உண்மையில் யார் கையில் இருக்கின்றன?
அத்தனை பேரையும் பிடித்துக் கொடுத்த பிறகும் எந்த நடவடைக்கையும் இல்லையென்றாலோ குறைந்தபட்சம் அரசியல்ரீதியாக அவர்களை தேச பக்தியுடன் செயல்படவைக்கவோ இந்துப் பெரும்பான்மையின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து நடக்கவைக்கவோ முடியவில்லையென்றாலோ ஸ்வாமிக்கு வருத்தம் இருக்கத்தானே செய்யும்.
நிரவ் மோதி பிடிபடாமல் தப்பியதற்கு நிதி அமைச்சகப் பிரதிநிதிதான் காரணம் என்கிறார். இதுபோல் அவர் பிறருக்குத் தெரியாத சில உண்மைகளைச் சொல்கிறார். அதற்கு அவரால் ஆதாரம் கொடுக்க முடியவில்லையென்றதும் அவரை சதிக் கோட்பாட்டாளர் என்று எளிதில் புறமொதுக்குகிறோம். உண்மையில் திருட்டைச் செய்பவர்கள் அவ்வளவு சாமர்த்தியசாலிகள் என்பது தெரிந்தநிலையிலும் நாம் ஸ்வாமியை சந்தேகிப்பது, கேலி செய்வது சரியே அல்ல. திருடர்களை வேறு வகையில் பிடித்து ஜெயிலில் அடைத்திருந்தால் மட்டுமே நமக்கு ஸ்வாமியைக் குறை சொல்லும் தார்மிக பலம் கிடைக்கும்.
*
சபரி மலை விவகாரத்தில் ஒவ்வொரு கோவிலின் பாரம்பரியத்தைக் காக்கும்வகையில் சட்டத்திருத்தம் –சட்டம் இயற்றுவது ஒன்றே ஒரே வழி. அதைச் செய்யாமல் நீதிமன்றத்திடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கம்யூனிஸ்டுக்கு ஒரு நியாயத்தை உருவாக்கிக் கொடுத்துவிட்டுப் போராடுவது ஒருவகையில் பெரிய தவறுதான்.
ஒருவேளை இந்து பக்தி-பாரம்பரிய உணர்வை இந்து அரசியல் உணர்வாக மாற்றச் செய்த தந்திரமென்றால் அது அந்தவகையில் பலன் தருமென்றால் நல்லதுதான். ஆனால், நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்தல் என்பது ஒருவகையில் தவறான முன்னுதாரணமே. வேறுவகையில் நமக்குப் பின்னடைவையே தரவும் செய்யும். சபரி மலை விவகாரத்தில் ஸ்வாமியின் நிலைப்பாடு இதுவே. சல்லிக்கட்டை மத கோவில் விழாவாகச் சொல்லி வென்று காட்டியவரைக் கொஞ்சம் நிதானமாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்வதே நல்லது.
*
அவர் இரண்டு விஷயங்கள் சொல்லியிருக்கிறார். அடுத்த ஆட்சி நரேந்திர மோதி தலைமையிலேயே அமையும். இன்னொன்று நரசிம்மராவும், வாஜ்பாயும் பொருளாதாரம், வளர்ச்சி என்று சிறப்பாகவே செயல்பட்டார்கள். எனினும் மக்கள் அவர்களை மீண்டும் தேர்தெடுக்கவில்லை. இதயத்தின் குரல் ஒன்று; மூளையின் குரல் மற்றொன்று.
*
மூத்தோர் சொல்லும் முது நெல்லியும் முதலில் கசக்கும். பின்னரே இனிக்கும். கசக்கும்போதே துப்பிவிட்டால் நஷ்டம் நமக்கே. வெற்றி கிடைத்துக் கொண்டிருக்கும்வரை சில விஷயங்களைக் கவனிக்காமல் புறமொதுக்கலாம். ஆனால், தொலை நோக்குப் பார்வையில் அது பின்னடைவையே ஏற்படுத்தும். சாணக்கியரை ஒதுக்கிவிட்டு சந்திரகுப்தரால் வெற்றி பெறமுடியலாம். ஆனால், சாணக்கியரும் சந்திர குப்தரும் சேர்ந்தால் கிடைக்கும் வெற்றிக்கு ஈடாக அது ஒருபோதும் இருக்காது.
*
ரஜினிகாந்த் பற்றி இவ்வளவு அதிர்ச்சியான வெளிப்படையான கணிப்பை எதிர்பார்க்கவே இல்லை. அவர் அரசியலுக்கு வரவே மாட்டார் (என்பது தெரியும்). வந்தால் ஜெயிலுக்குச் செல்வார் என்பது ஸ்வாமியின் மிகப் பயங்கரமான தீர்க்க தரிசனம்.
*
சசிகலா விவகாரத்தில் தவறுகள் செய்தது ஜெயலலிதாதான். அதோடு சசிகலா சிறையிலும் இருந்துவிட்டிருக்கும் நிலையில் வெளியே வந்தபின் அரசியலில் அவர் ஈடுபட வாய்ப்பு தரவேண்டும் என்கிறார். மிகவும் சரியான விஷயம் தான்.
*
பாகிஸ்தானுக்குள் சென்று தாக்குதல் நடத்தியதை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார். பின் லாடனைக் கொன்றதை உலக்குக்குக் காட்டினார்களா..? அவனுடைய உடலைக் கூடக் காட்டவில்லையே... அமெரிக்காவிடம் போய் யாரேனும் ஆதாரம் கேட்டீர்களா..? பாகிஸ்தான் எந்த தாக்குதலும் நடக்கவில்லை. யாரும் இறக்கவில்லை என்றுதான் சொல்வார்கள். 350 தீவிரவாதிகளை இந்தியா வீடு புகுந்து தாக்கிக் கொன்றுவிட்டது என்று சொல்லவா செய்வார்கள்.
மேலும் இதற்கான ஆதாரத்தை எப்படித் தர முடியும்? எல்லை தாண்டிச் சென்று தாக்கியது நிஜம். உலக நாடுகள் அந்த விஷயத்தில் நம் பக்கமே இருக்கிறார்கள். இதற்கு முன் இதைவிடப் பெரிய வன்முறையை பாகிஸ்தான் நம் மண்ணில் நிகழ்த்தியபோதும் நாம் சும்மாத்தான் இருந்தோம். இன்று தாக்கியது நிச்சயம் பெரிய வரவேற்கத் தகுந்த விஷயமே என்று தெளிவாகவே சொல்லியிருக்கிறார்.
*
தமிழகத்தில் பாஜக தனித்துத்தான் நிற்க வேண்டும் என்கிறார்.
தமிழகத்துக்கு நீட் தேர்வுக்கு விலக்கு தரப்படாது;
எழுவர் விடுதலை சாத்தியமே இல்லை. ராஜீவ் காந்தி நாடாளு மன்றம் எடுத்த முடிவின் படி ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பினார். அதற்காக அவரைக் கொன்றதை மன்னிக்கவே முடியாது. அதோடு அன்று அவருடன் சேர்ந்து 18 அப்பாவிகளும் இறந்திருக்கிறார்கள். அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் நம் மண்ணில் வந்து இப்படியான அராஜகம் செய்திருப்பதை எப்படி மன்னிக்க முடியும்? தூக்கில் போடாமல் இருப்பதே பெரிய கருணைதான் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
தேசிய உணர்வு, பிராந்திய உணர்வு இரண்டும் ஒன்றுக்கொன்று அனுசரித்துச் செல்லவேண்டும். இறுதி முடிவு தேச நலன் சார்ந்தே இருக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். இதில் எந்தத் தவறும் இல்லை.
கொள்கையில் சமரசம் செய்துகொண்டு கூட்டணி அமைத்துப் பெறும் வெற்றி என்பது ஒன்று வெற்றிக்குப் பின் கூட்டணியினர் சொல்வதைச் செய்து கொடுக்காமல் நம்பிக்கை துரோகம் செய்ய வழிவகுக்கும். அல்லது அவர்கள் கேட்கும் தேசவிரோதச் செயல்களைச் செய்து கொடுக்கவேண்டியிருக்கும். இரண்டுமே பெரிய பின்னடைவையே தரும். அதற்குப் பேசாமல் அனைத்துத் தொகுதியிலும் தனித்து நின்று கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியையாவது செய்யலாம் என்கிறார்.
ஊழலை எதிர்க்கும் தார்மிக வலு ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதால் போய்விடுவதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஒவ்வொரு ஊழலையும் உயிரைக் கொடுத்துக் கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு தனது நேர்மையின் குரலை யாரும் மதிக்காமல் அரசியல் செய்வதை அதுவும் தோற்றுப்போகும் வகையில் கெஞ்சிக் கூத்தாடி 4 சீட், ஐந்துசீட் பெற்று அவமானப்படுவதைப் பார்க்கையில் ஆதங்கம் இருக்கத்தானே செய்யும்.
தப்புச் செஞ்சும் நன்மை கிடைக்காதென்றால் நேர்மையாகவே இருந்துவிட்டுப் போகலாமே. நல்ல பெயராவது மிஞ்சும். பின்னாளில் அது நல்ல பலனைத் தரவும் செய்யும்தானே. நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் என்று சொல்ல எப்படியெல்லாம் அவரும் இறங்கிவரவேண்டியிருக்கிறது பாருங்கள்.
*
கடைசியாக தமிழக மக்களுக்கு அவர் விடுத்திருக்கும் வேண்டுகோள் மிகவும் முக்கியமானது. 40 எம்.பி.கள் தமிழகத்துக்கு இருக்கிறார்கள். தமிழகத்தின் நலன், தேசத்தின் நலன் இவற்றை ஒன்றுக்கொன்று எதிரானது என்று கருதாமல் டெல்லியில் செல்வாக்கை வளர்த்து நாட்டுக்கும் மாநிலத்துக்கும் நன்மை கிடைக்கச் செய்பவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்த எதிர்பார்ப்புகளின்படிச் செயல்படப் போகிறவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமே என்பது அவருக்குத் தெரியும். நாற்பதிலும் அவர்கள் நின்றிருந்தால் நிச்சயம் வெளிப்படையாக பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கும்படிக் கேட்டிருப்பார். அவர் அப்படிக் கேட்காமல் போனதற்கு அவரைப் பழித்துப் பலனில்லை.

4 comments:

  1. சுவாமியின் பேட்டியைக் கேட்டேன். அருமையாத்தான் சொல்லியிருக்கார். ஆனால் அவர் எப்போதும் நெகடிவ் ஆகப் பேசுபவர். வயதானால் என்ன என்று ஒரு இரண்டு வருடம் அவரை நிதியமைச்சராக வைத்திருக்கலாமோ?

    ReplyDelete
    Replies
    1. நம்மூரில் அரசியலே நெகடிவாகத்தான் இருக்கிறது என்கிறபோது சுவாமியை மட்டும் குறை சொல்வானேன்?வைரத்தை அறுக்க வைரம் தான் வேண்டியிருப்பதுபோல இவரைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நமக்குத் தெரியவில்லை!

      Delete
  2. // நிதியமைச்சராக வைத்திருக்கலாமோ?..//

    அவ்வளவு தான் வேறு வினையே வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. உணமைதான் ஜீவி சார்! கர்நாடகத் தொழிலதிபர்களிடமிருந்து ஜெவுக்கு நிதி வாங்கிக் கொடுத்தவருக்கு சீட் கொடுக்காமல் ஏமாற்றியதன் விளைவை சொத்துக்குவிப்பு வழக்காக ஜெ அனுபவித்தார் என்று சொல்வார்கள்.

      பயன்படுத்திக் கொள்வது என்பது நிதியமைச்சராக்குவதுதான் என்கிற அர்த்தத்தில் சொல்லப்பட்டது அல்ல.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)