காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆகிவிட்ட பிரியங்கா வாத்ரா கங்கை நதியில் 140 கிமீ பயணம் என்று ஒரு ஸ்டன்ட்டை இன்றைக்கு ஆரமித்திருக்கிறார். இந்திரா வாரிசுகளுக்கு தேர்தல் வரும்போதெல்லாம் கோவில் குளம், தீர்த்த யாத்திரை போகும் ஆசையும் வந்து விடுகிற வினோதம் காங்கிரஸ் அரசியலுக்கே உரித்தான தனி இஷ்டைல்!
பிரியங்கா அரசியல் காமெடிக்கு இன்னமும் இங்கே ஜனங்கள் பழகிக்கொள்ளாததால் ஒரு கோடி காட்டி விட்டு தமிழ்நாட்டில் நிகழ்நேரக் காமெடி என்ன என்று பார்க்கலாம்!
திகில் மீசிக்கோட முக்கிய செய்தி.
ஏதோ மய்யம்ன்னு ஒரு கட்சியாம். குமரவேல்ன்னு ஒரு ஆரம்ப கால நிர்வாகி விலகிட்டாராம். ஏனென்றால்... நேர்காணல்ல!!! ??? கோவை சரளா நீங்க எவ்வளவு செலவு செய்ய முடியும்ன்னு கேட்டுடுச்சாம்.
தள்ளு தள்ளு தள்ளு தள்ளு.... என்று முகநூலில் நையாண்டி செய்கிறார் R நாராயணன்.
குமரவேல் என்ன எதிர்பார்த்து வந்தாரோ தெரியாது!
எங்கிருந்து என்னமாதிரி அழுத்தம் வந்ததோ அதுவும் தெரியாது! கமல் காசர் மாதிரி கத்துக்குட்டி அரசியல் வாதிகளுக்கு இதுதான் நடக்கும்! இன்னமும் நடக்கும்!
நியூஸ் 7 சேனல் இப்படி சந்தோஷமாகக் கூப்பாடு போடுவது யாருடைய ப்ராக்சியாக? தெரிகிறதா? புரிகிறதா?
அடடே!மதி என்னமோ சூட்கேஸ் கலாசாரம் இப்போது தான் வேகமாய்ப் பரவுகிற மாதிரி படம் போடுகிறார்! தேர்தல் நேரத்தில், பதவியை வைத்து சம்பாதித்த ஏகப் பட்ட சூட்கேஸ்களில் ஏதோ ஒன்றிரண்டு வெளியே வரும்!
கோஷ்டிப்பங்கீடு என்றும் சொல்லலாம்! வாரிசுப் பங்கீடு என்று சொன்னால் இன்னமும் பொருத்தமாக இருக்குமோ?
படங்களில் கொஞ்சம் அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தோம்! என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் முக்கியமான கேள்வி!
கமல் ஹாசனின் குட்டிக் கட்சியிலேயே இப்படி பாலிடிக்ஸ் இருக்கும்போது, திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளை நடத்துவது எவ்வளவு கடினம்?
ReplyDeleteஇதுக்குப் பேரு பாலிடிக்சா? எதிரியை வளர விடக்கூடாதென்று ஒரு பெரிய கட்சி பின்னாலிருந்து வச்சு செஞ்ச மாதிரியே இருக்கே!
Delete