தேர்தல் அறிக்கை, தேர்தல் வாக்குறுதி என்பதெல்லாம் அந்தநேரத்து சிலிர்ப்பு என்பதற்கு மேல் வேறு அர்த்தம் ஏதாவது இருக்கிறதா? இந்தத் தேர்தலில் எல்லோரையும் முந்திக்கொண்டு பாமக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது என்றால் இரு கழகங்களும் இன்றைக்குத் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஒரு சாங்கியத்தை நடத்தி முடித்திருக்கின்றன. ரங்கராஜ் பாண்டே இதுமாதிரி தேர்தல் அறிக்கைகள், வாக்குறுதிகள் நிறைவேற்றப் படக்கூடியதுதானா என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார். சாமானிய ஜனங்களுக்கு இதெல்லாம் வெறும் பொழுதுபோக்கு என்றிருக்கும் நிலைமை மாறாத வரை அரசியல்வாதிகளின் ஆகாசப்புளுகுகளுக்கு முடிவேது?
காமெடி நடிகைதான்! ஆனால் சிறுவயதிலேயே அதிமுக மேடையேறிப் பேசி, எம்ஜியாருடைய கவனத்தையும் ஈர்த்தவர் கோவை சரளா! CK குமரவேல் யார் என்ன என்ற விவரம் தெரியாமல் வம்புக்கிழுத்து விட்டாரோ?
புதியதலைமுறைக்காக நேர்காணல் நடத்தியவரைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. முதலாளி திமுக அணி வேட்பாளராகபோய்விட்டதால், நிகழ்ச்சியை எப்படிக் கொண்டபோவது என்பதில் ஒருவித தடுமாற்றம், புரிந்துகொள்ள முடிகிறது.
காரியமாகிற வரை கழுதை காலைக் கூடப் பிடிக்கத் தயாராக இருக்கும் அரசியல் களத்தில் இதெல்லாம் ரொம்ப சாதாரணமப்பா! படத்தில் மூன்றாம் கலீஞருக்குப் பொன்னாடை போர்த்தி, தயாநிதி ஆசி வாங்குகிறாரா என்ன?
பிரியங்கா வாத்ரா கங்கைநதிக்கரையில் படகுசவாரி பிரசாரமாக நடத்திக் கொண்டிருப்பதை நக்கலடித்து சதீஷ் ஆசார்யா வரைந்திருக்கும் இந்த கார்டூன் நிறைய செய்திகளைச் சொல்கிறது.
தினத்தந்தி புருடாவை விடுங்கள்! திருவிளையாடல் படத்தில் பாலையா சலித்துக்கொள்வாரே! என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை? அதேமாதிரி என்னையும் புலம்ப வைத்துவிட்டார்களே!
அதிமுக அணியில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன்
திமுக அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சு வெங்கடேசன்
அமமுக வேட்பாளராக மறைந்த கா காளிமுத்து மகன் டேவிட் அண்ணாதுரை
பாவிகளா! வேறு யாரையாவது வேட்பாளராக அறிவிக்க ஒரு அணிக்கும் தெம்பில்லையா?
முதல் ஆப்ஷன் ruled out. மீதமிருக்கிற இரண்டில் எந்தக் கொள்ளி கம்மியாகச் சுடுகிற கொள்ளி என்று பார்த்து ஓட்டுப் போட வேண்டுமா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதால் சு வெங்கடேசனையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டுமா? காவல்கோட்ட எழுத்தாளரை அப்படியெல்லாம் சகித்துக் கொள்ள முடியாது!
காளிமுத்து மகன் இருப்பதிலேயே குறையெதுவும் இன்னமும் வெளியே தெரியாத வேட்பாளர்தான்! ஆனால் தினகரன் முகாம் என்பது ரொம்பவே நெருடுகிறது.
அப்படியானால் மய்யமா? அய்யோ சாமி ஆளைவிடு!
என்னடா இது? மதுரைக்கு வந்த சோதனை? !!


