சிலவருடங்களுக்கு முன்னால் பொன்மாலை பொழுது பதிவர் மாணிக்கத்துக்கும் எனக்கும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களில் யார் யார் குரல் எந்தெந்த நடிகர்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்ற விவாதம் நடந்ததுண்டு. கதா நாயகனுக்குப் பாடவென்றே பாடகர்கள் வந்ததெப்போது என்ற கேள்வியும் கூடவே வந்ததுண்டு!
பதிபக்தி படத்தில் ஜெமினி கணேசனுக்காகவும் இந்தப் பாடலை A L ராகவன்சுசீலாவுடன் இணைந்து பாடி இருக்கிறார். எப்படி இருக்கிறது?
சீர்காழி கோவிந்தராஜன்! வெண்கலக் குரலோன்! சில படங்களில் கதாநாயகனுக்காகவும் பாடியிருக்கிறார்! கொஞ்சம் கேலி கிண்டல் கலந்து பாடுவதென்றால் சீர்காழிக்கு குஷி வந்துவிடும் போல!
மனிதன் மாறவில்லை படத்துக்காக ஜெமினி கணேசனுக்கு சீர்காழி பின்னணி பாடியிருப்பது அத்தனை பொருத்தமாகவா இருந்தது?
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன் மாதிரி டைட்டில் சாங் பாடுவது சீர்காழிக்குக் கொஞ்சம் ராசியாக இருந்ததுண்டு! ஆனால் முத்துராமன் மாதிரி நடிகர்களுக்குப் பாடியதை என்னவென்று சொல்வது?
சீர்காழி கோவிந்தராஜன் மாதிரியே அந்தநாட்களில் கதா நாயகனுக்கும் பாடியதுண்டு பின்னாட்களில் காமெடியனுக்கும் பாடியதுண்டு! A L ராகவன்! திறமையான பாடகர்!
மனிதன் மாறவில்லை படத்தில் A நாகேஸ்வர ராவுக்காக இந்தப்பாடலை A L ராகவனும், ஜமுனாவுக்காக P சுசீலாவும் பாடிய டூயட் இது!
கல்யாண் குமாருக்காக A L ராகவன் பாடிய இந்தப்பாடல் அந்த நாட்களில் ரொம்பவுமே பிரபலம்! காதல் தோல்வியில் துவண்ட விடலைப்பையன்களுடைய இதயகீதமாகவே அந்த நாட்களில் இந்தப்பாடல் இருந்தது. நம்ப முடிகிறதா?
காசே தான் கடவுளடா! இந்தப் படத்துக்காக A L ராகவன் கோஷ்டியாக பாடிய பாடல் இது. ஆனாலும் தனித்துத் தெரிவதைக் கேட்க முடிகிறதா?
எனக்கென்னவோ சீர்காழியை விட A L ராகவன் தான் சிறந்த பாடகராகத் தோன்றுகிறது! உங்களுக்கு??
மீண்டும் சந்திப்போம்.