ராகுல் தேறுவாரா? இப்படித் தலைப்பிட்டு நேற்றைக்கு தினமலர் செய்தி ஒன்றைப் பார்த்தேன்.ரசித்தேன், சிரித்தேன்! தலைப்பே தேறமாட்டார் என்பதைச் சொல்லி விட்ட பிறகு வேறென்ன செய்ய முடியும், நீங்களே சொல்லுங்கள்! அவர் போகிற இடங்களில் எல்லாம் கோஷ்டிப்பூசலும் தோல்வியும் சேர்ந்தே துரத்துகிறது! இதில் ராகுல் காண்டியை மட்டுமே குறைசொல்லிப் பிரயோசனமில்லை. தும்பை விட்டு வாலைப்பிடிக்கிற காங்கிரஸ் கலாசாரம் வேறு இருக்கிறதே!
மத்திய அரசில் ராஜாங்க மந்திரியாக இருந்த நாட்களில் கேள்வி கேட்பாரில்லாத கோட்டைவாயாக உளறித் திரிந்த நாராயணசாமி பாண்டிச்சேரி முதல்வரான பிறகு ஒப்பீட்டளவில் சற்று அடக்க ஒடுக்க, மாகவே இருந்தார் தான்! அவருடைய கர்மா, கிரண் பேடியை புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக வரவழைத்து அவருடன் மோதுவதையே முழுநேர அரசியலாகவும், தொழிலாகவும் ஆக்கிவைத்தது. வாய்தான் பெரிதே தவிர காரியத்துக்கு ஆகாதவர் என்று தெரிந்த பிறகு அவருடன் சேர்ந்து அரசியலில் பயணித்து தற்கொலை செய்துகொள்வதற்கு யார் தான் தயாராக இருப்பார்? ஆக இதுவரை காங்கிரஸ் ஊழல் கோட்டையாகவே இருந்துவந்த பாண்டிச்சேரி முதன்முதலாக, அந்த கெட்ட சகவாசத்திலிருந்து விடுபடுகிற நேரமும் வந்துவிட்டது போல! நாளைக்கு ராகுல் காண்டி புதுச்சேரிக்குத் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக வரப்போகிறாராம்! வந்து நாராயணசாமி ஒப்பாரி வைப்பதைக் கேட்கப் போகிறாரா? பயணத்திட்டத்தில் மாறுதல் இருக்குமா? கழுத்தைப்பிடித்துத் தள்ளுகிறவரை நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்குவது காங்கிரஸ்காரன் குணாதிசயம்! நாசாவும் அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறார்! இதில் ராகுல் காண்டி வந்து என்ன செய்து விடமுடியும்?
கழுத்தைப்பிடித்துத் தள்ளுகிறவரை நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்குவது காங்கிரஸ்காரன் குணாதிசயம்! நாசாவும் அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறார்! இதில் ராகுல் காண்டி வந்து என்ன செய்து விடமுடியும்?
அதீதக்கற்பனைகளினாலேயே இந்திய சரித்திரத்தை எழுதிவரும் ராமச்சந்திர குகா இன்றைக்கு NDTV தளத்தில் Why Modi And Shah Fear Young Activists என்ற தலைப்பில் மோடி அமித் ஷா இளைஞர்களைக் கண்டு பயப்படுவது ஏன் என்கிற மாதிரிப் பொருமித் தீர்த்து எழுதியிருக்கிறார்