வாசகர்களுக்கு உளங்கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! வான் மழை வழாது பொழிக ! மழைவளம் சுரக்க!பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!
ஜான் பி கோட்டர் தன்னுடைய புத்தகத்தில், மாற்றங்களுக்குத் தடையாக இருக்கும் ஒரு எட்டு முக்கியமான தடைகளைப் பட்டியல் இடுகிறார். அதற்கப்புறம், ஒரு எட்டு முக்கியமான வழிகளில் எப்படி மாற்றத்தை நாம் விரும்புகிற விதத்தில் நிர்வகிக்க முடியும், சாதிக்க முடியும் என்பதையும் சொல்கிறார்.
அதுவும் சுருக்கமாக வெறும் நூற்று எண்பத்தேழு பக்கங்களில்!
முதலில் அவர் மாற்றங்களுக்குத் தடையாக இருக்கும் எட்டுக் காரணிகள் எவை என்று சொல்வதைப் பார்க்கலாம்.இதற்கு மாற்றாக, மாற்றங்களுக்கு ஒரு எட்டு வழிகளை சொல்வதையும் அதனதன் கீழேயே சேர்த்துப் பார்த்து விடலாம்!
இங்கே புத்தகத்தின் குறிப்பிட்ட பகுதிகளை கூகிள் புக்ஸ் தளத்தில் இணையத்திலேயே வாசிக்க முடியும்.
1. Allowing too much complacency
Establishing a Grater sense of urgency.
Establishing a Grater sense of urgency.
2. Failing to create a sufficiently powerful guiding coalition
Creating the Guiding Coalition.
3. Underestimating the power of Vision
Developing a Vision & Strategy
Developing a Vision & Strategy
4. Under communicating the Vision by a factor of 10 (or 100 or even 1000)
Communicating the Vision, Change.
Communicating the Vision, Change.
5. Permitting obstacles to block the Vision
Empowering others to act.
Empowering others to act.
6. Failing to create short-term Wins
Creating short-term Wins.
Creating short-term Wins.
7. Declaring Victory too soon
Consolidating Gains and producing even more change
Consolidating Gains and producing even more change
8. Neglecting to anchor Changes firmly in the Corporate Culture
Institutionalizing Changes in the Culture.
Institutionalizing Changes in the Culture.
நிறுவனங்கள் தோற்பதற்கான முக்கியமான எட்டுக் காரணங்களைப் பட்டியலிடும் ஜான் பி கோட்டர், நிறுவனங்கள் ஜெயிப்பதற்கான எட்டு வழிமுறைகளையும் அடுத்து சொல்கிறார். சிவப்பு, நீல வண்ணங்களில் இரண்டையும் அடுத்து அடுத்துப் பார்க்கிறீர்கள் இல்லையா?
கொஞ்சம் இந்த இரண்டு பட்டியல்களையும் பார்த்துவிட்டு, உங்கள் மனதில் என்ன கேள்விகள் எழுகிறதோ, அதை எழுதுங்கள்!
கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக, ஒரு விளம்பரம்! மாற்றங்கள் என்றால் நமக்கு என்னென்னமோ தோன்றுகிறது இல்லையா?
கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக, ஒரு விளம்பரம்! மாற்றங்கள் என்றால் நமக்கு என்னென்னமோ தோன்றுகிறது இல்லையா?
காம்லின் நிறுவனத்துக்கோ அது ஒரு வினோதமான விளம்பரமாக!
மாற்றங்களை, ஒரே நிமிடத்தில் விளக்கி விடுகிறார்களாம்!
தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்வும் வளமும் எல்லோருக்கும் பொங்கிபெருகட்டும்
நல்லா இருக்கு. ரத்ன சுருக்கமா அழகா எடுத்து சொல்லிருக்காங்க?
ReplyDeleteChange Management என்ற தலைப்பில் இது இந்தப்பக்கங்களில் எட்டாவது பதிவு, மஹா! விஷயம் என்னவோ எளிமையானது தான்! மாற்றம் என்பது, தவிர்க்க முடியாதது என்பதல்ல,. மாற்றம் என்பது மிக அவசியமானது. ஆனால், பழக்கங்களின் அடிமைகளாகவே இருந்துவிட்டுப் போய்விடுகிற சுபாவம் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது,.தட்டிக் கழிக்கப் பார்க்கிறது, முடிந்தால் தள்ளிப் போடப் பார்க்கிறது.
ReplyDeleteஇந்தப் பொதுவான உலக இயல்பின் பின்னணியில் தான் மாற்றத்தை சாதிக்க, சில முன்னோடிகள், தலைவர்கள், அந்தத் தலைவர்களைப் பின்பற்றுகிற ஒரு சிறு குழு என்று ஆரம்பிக்கிறது. தலைவனையும் பின்பற்றுகிற அந்த சிறு குழுவையும் பொதுவாகப் பிணைப்பது ஒரு தெளிவான பார்வை, செயல் திட்டம் என்று தொடங்குகிறது. அனுபவங்களில் கிடைக்கிற வெற்றி படிக்கட்டுகளாகிறது. மாற்றம் என்பது தொடர்ந்து நிகழும் ஒரு ப்ராசஸ் ஆக மாறுகிறது.
முந்தைய பதிவுகளையும் Change management என்ற தலைப்பின் கீழ் எல்லாமே கிடைக்கும், படித்துப் பார்த்துவிட்டு, கருத்தை சொல்லுங்கள்! .