Wednesday, January 5, 2011

வாசிக்க நினைத்திருக்கும் புத்தகங்கள்..!

ஜனவரி பிறந்து விட்டது!

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், ஹேங் ஓவர்கள் முடிந்த பிறகு, அடுத்து ஒன்று ஆரம்பமாகவேண்டுமே! இங்கே தமிழ்ப்பதிவுகளில் சுடச் சுட வடை என்ற ரீதியில்,  இன்னும் கொஞ்ச நாட்களுக்கு பரபரப்பாக இருக்கப் போவது சென்னையில் நேற்றுத் துவங்கிய புத்தகக் கண்காட்சி தான்! புத்தகக் கண்காட்சியில் என்ன புத்தகங்களை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்து வாங்கினேன், அதில் என்ன வாசித்தேன், என்ன பிடித்தது அல்லது ஏன் பிடிக்கவில்லை என்ற மாதிரியான விவரங்களை எல்லாம் எதிர்பார்க்க முடியாது.

சென்ற வருடம், இதே சென்னைப் புத்தகக் கண்காட்சியைப் பற்றி எழுதிய இந்தப் பதிவில் ஒரு வாசகர் எழுப்பியிருந்த கேள்விக்கு பதில் சொன்னதில் இன்றைக்குக் கூட எந்த மாற்றமும் இல்லை.


"மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணையில், புத்தகங்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கையில், பின்னால் மென்மையான குரலில், அந்தப் புத்தகத்தை பற்றியோ, அதை விட இன்னும் சிறப்பான புத்தகம் ஒன்றையோ அறிமுகம் செய்யும் குரல்! புத்தகத்தை விற்பனை செய்யவேண்டுமே என்ற விற்பனையாளனின் குரல் அல்ல அது! புத்தகங்களை நேசித்த, அதை முழுமையாக வாசித்தஒரு வாசகன், இன்னொரு வாசகனோடு ஆர்வமாகப் பகிர்ந்துகொள்ளும் குரல்!

திரு நவநீத கிருஷ்ணன், அந்தப் புத்தக நிலையத்தில் வேலைக்கு சேர்ந்து, அதன் செயலாளராகவும் ஆனவர். சென்ற (2009) அக்டோபரில் தான் காலமானார்! பள்ளி இறுதிப் படிப்பை மட்டுமே முடித்த அவரால், வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை கடைக்கு வருகிறவர்களிடமும் உண்டாக்கத் தெரிந்த வித்தையை நிறையத் தரம் அனுபவித்தவன் நான்.

வாசிப்பை ஊக்குவிப்பது எப்படி என்பதை நான் பார்க்கும் விதம் வேறு! ஆர்ப்பாட்டமான கண்காட்சிகளை நடத்தி, அங்கே காண்டீனில் என்ன சாப்பிட்டோம் எந்த எந்தப் பிரபலங்களைப் பார்த்தோம் என்று பட்டியலும் புகைப்படமும் வெளியிடுவது மட்டுமே ஊக்குவிப்பது என்று நீங்கள் கருதினால், அதற்கு நான் தடையாக இருக்கப் போவதில்லை.

அடுத்தது, வலைப்பதிவுகளில் எழுதுபவர்களில், இன்னும் ஐம்பதாண்டுகளில் கொண்டாடப் படப் போகிறவர்களைப் பற்றி...அப்படி யாராவது வருவார்கள், அல்லது வரவே மாட்டார்கள் என்பதெல்லாம் என்னுடைய நம்பிக்கைகளின் சுமையில் சேர்த்துக் கொள்வதாக இல்லை. வலைப் பதிவுகளின் வடிவமும், வெளிப்படுத்துகிற கலையும், புத்தகங்கள், கவிதை எழுதுவதை விட வேறானது.

அதைக் கண்டுகொள்வதற்கு ஐம்பதாண்டுகள் போகவேண்டாம்! இப்போதே, இங்கேயே R P ராஜ நாயஹம் ஒருவர் இருக்கிறார். அவரை விட, வலைப் பதிவுகளைத் திறமையாகக் கையாளத் தெரிந்த வித்தைக்காரரைப் பார்ப்பது மிகவும் கடினம். இதை சொல்லும்போதே வேறு யாருமே இல்லை என்று சொல்வதற்காக இல்லை, இன்னும் பல பதிவர்கள் வெவ்வேறு வடிவங்களில் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், நானும் அவர்களை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

இந்த வலைப்பதிவு வடிவம் வேறு, புத்தகமாகப் படிக்கிற வடிவம், உள்ளடக்கமே வேறு. நான் சொல்ல வந்தது, கொஞ்சம் பேர் தெரிய வந்தவுடன், அல்லது சும்மா எழுதிக் கிறுக்கியதை எல்லாம் வெளியிட்டு, மாப்பிள்ளை மச்சான் படைப்பும் அதில் ஒரு ஓரத்தில் வந்திருக்கிறது என்ற ஒன்றை மட்டும் வைத்துக் காசு பார்ப்பவர்களைக் குறித்தானது மட்டுமே! அதே மாதிரி, இணையத்தில் எழுதியதையே, புத்தகமாக வாந்தி எடுக்கும் ரிபீட்டு கல்ச்சரை மட்டுமே!"

இந்த ஒரு அம்சத்தில் என்னுடைய கருத்துவேறுபாட்டைத் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால், இதுமாதிரிக் கண்காட்சிகள் புத்தக விற்பனையை அதிகரிக்கச் செய்யும் தூண்டுகோலாக இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஒரு புத்தகக் கடையில் டிஸ்ப்ளேயில் வைத்து ஆறுமாதமோ  அல்லது ஒரு வருடத்திலோ விற்கிற ஒரு புத்தகம், இந்த மாதிரிக் கண்காட்சியில் ஒரே நாளில் அந்த எண்ணிக்கையைத் தாண்டிவிடுகிறது. பதிப்பகங்கள் சந்தோஷப்படலாம்! அவர்களாகப் பார்த்துக் கொடுக்கிற ராயல்டி கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்குமே என்று புத்தக ஆசிரியர்களும் கூட சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்!

காசு கொடுத்து, தேடிப் பிடித்து வாங்கும் வாசகனாய் நாமும் சந்தோஷப் படுகிற மாதிரி புத்தகங்கள் வந்திருக்கிறதா என்பது வாசகர் பார்வையில் இருந்து எழவேண்டிய கேள்வி! நாம் தேடுகிற விஷயங்கள், அந்தப் புத்தகத்தில் கிடைக்கிறதா? நம்முடைய சிந்தனையை உயர்த்திக் கொள்கிற விதத்தில் நாம் வாங்கும் புத்தகங்கள் உதவியாக இருக்கிறதா?

சென்ற  வருடம் புத்தகக் கண்காட்சியில் என் மகன் வாங்கி வந்த புத்தகங்களில், ஜெயமோகனின் "இன்றைய காந்தி" கொஞ்சம் குறிப்பிட்டுச் சொல்கிற மாதிரி இருந்தது.  திரு ராமச்சந்திரா குஹா எழுதிய INDIA After Gandhi ஆங்கில புத்தகத்தைப் போல ஜெயமோகனின் நூல் ஒரு முழுமையான புத்தகமாக, தேவையான தகவல்களுடன் கூடிய புத்தகமாக இல்லை என்றாலும் கூட, தமிழில் வெளியான புத்தகம் என்ற வகையில் கொஞ்சம் உயரமான இடத்தில் தனித்து இருக்கிறது. தமிழினி வெளியீடாக வந்த இந்தப் புத்தகம், இன்று கூட வாங்கிப் படிக்கக் கூடியது தான்.

இந்த வருடம் புத்தகக் கண்காட்சி துவங்கிவிட்டது என்பதற்காகவோ, கண்காட்சி சுரம் என்னையும் தொற்றிக் கொண்டுவிட்டது என்பதற்காகவோ இல்லாமல், புத்தகங்களை அதன் உள்ளடக்கம், ஆசிரியரின் அனுபவம், எழுத்துவன்மை இவைகளைப் பற்றி தெரிந்து வைத்திருப்பதால் மட்டுமே இந்த வருடம்  நான் வாசிக்க, வாங்க நினைத்திருக்கும் ஒரு சில புத்தகங்களின் அறிமுகமாக!

1.Makers of Modern India

ராமசந்த்ர குஹா இந்தப் புத்தகத்தில், நவீன பாரதத்தைச் செதுக்கிய சிற்பிகளாக ஒரு பத்தொன்பது நபர்களைக் குறித்து அவர்களுடைய எழுத்துக்கள், பேச்சுக்களில் இருந்து எடிட் செய்து தொகுத்து வெளியிட்டிருக்கும்  இந்த நூலை இந்த ஜனவரியில் வாங்கிப் படிக்க உத்தேசித்திருக்கிறேன். இந்தப் புத்தகத்தை கல்கத்தாவில் அறிமுகம் செய்து பேசிய ராமச்சந்திர குஹா சொன்ன ஒரு கருத்து, வங்காளம்  உருப்படுவதற்காகவாவது சிபிஎம் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி அரசு பத்தாண்டுகளுக்கு முன்னரே ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டிருக்க வேண்டும் என்று சொன்ன ஒரு விமரிசனத்தை அன்றாட செய்திகளில் சென்ற மாதம் பார்க்க நேர்ந்தது.அப்போது  இந்த புத்தகத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்[புக் கிடைத்தது. 

ராமசந்த்ர  குஹா இந்தப் புத்தகத்தில்,  ஜனங்களுக்கு மறந்து போன அல்லது அறிமுகமே இல்லாமல் போன  தாராபாய் ஷிண்டே, ஹமீத்  தல்வாய், சையத் அஹமத் கான் போன்ற சிலரைத் தன்னுடைய பட்டியலில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். ஜனங்களுக்கு நினைவில் இருக்கும் முக்கியமான புள்ளிகளான, சர்தார் வல்லபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திரா போஸ் இருவரையும் சேர்த்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், இந்த இருவரும், செயல் வீரர்களாக மட்டுமே இருந்திருக்கிறார்கள்! அதாவது, இவர்கள் எழுதிய, பேசியதன் அடிப்படையில் தொகுப்பதற்குப் போதிய விவரங்கள் இல்லாததுதான் என்று சொல்லப்படுவது கொஞ்சம் நெருடுகிறது.

ஆனாலும் சரித்திரமே தெரியாமல் சரித்திரத்தை போதிக்க முற்படுகிற முற்போக்கு எழுத்தாளர்கள், சரித்திரப் பேராசிரியர்கள் நிறையப் பேரைப் படித்து அலுத்து விட்ட அனுபவம், சரித்திரத்தைக் கொஞ்சம் கோர்வையாக, என்ன சொன்னாலும் அதற்குப் போதுமான ஆதாரங்களுடன், குறிப்புக்களுடன் சொல்லத் தெரிந்த திரு ராமசந்த்ர குஹா, தன்னுடைய பார்வையில் என்ன சொல்ல வருகிறார் என்பதை, அவர் தொகுத்து வெளியிட்டிருக்கும் இந்த நூலை வாங்கிப் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலை இந்தப் புத்தகக் கண்காட்சியி துவங்கிய தருணம் தோற்றுவித்திருக்கிறது.

இணையத்தில் ஒரு தளத்தில் ரூ.543/- என்றும் இன்னொன்றில் ரூ.559/-என்றும் விலையைப் பார்க்க முடிந்தது.இணையத்தில் புத்தகங்களை வாங்கத் தெரிந்தவர்களுக்கு, ஆண்டு முழுவதுமே புத்தகத் திருவிழா-கண்காட்சிதான் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லையல்லவா!

2.பாரதிக் கல்வி - ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்

 
3.அறிவும் நம்பிக்கையும் - ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்


தமிழினி வெளியீடாக இந்தப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் என்பதை சொல்வனம் இதழில் வந்த இந்தக் குறிப்பில்மட்டும் தான் தெரிந்து கொள்ள முடிகிறது. தமிழினி, விருபாடாட்காம் மற்றும் வேறெந்த தளங்களிலும், புத்தகத்தைப் பற்றிய மேலதிக விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. எத்தனை பக்கங்கள், விலை விவரம் பற்றியும் எந்தத் தகவலும் தெரிந்து கொள்ள முடியவில்லை.



அதனால் என்ன?!

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனின் மோகனத் தமிழை மின்தமிழ் மற்றும் தமிழ்வாசல் கூகிள் வலைக் குழுமங்களில் நிரம்ப அனுபவித்தவன்! அவருடைய வாசிப்பு அனுபவம், தான் சொல்ல வருவதைப் பாங்குடன் சொல்கிற நேர்த்தி இவைகளைத் தொடர்ந்து படித்து அனுபவித்து வருகிறவன். தாயை போல பிள்ளை நூலைப் போல சேலை என்பார்கள் இல்லையா!  அந்த வகையில் அவருடைய மோகனத் தமிழ் எப்படி இருக்கும் என்பது ஏற்கெனெவே தெரிந்திருப்பதனால், இந்த இரண்டு நூல்களையும் இந்த ஜனவரியிலேயே வாங்கிப் படிக்கும் உத்தேசம் இருக்கிறது.

இந்த ஆண்டு படிக்க உத்தேசித்திருக்கும் நூல்களின் பட்டியல், நூல்களைப் பற்றிய சுருக்கமான மதிப்பீடுகளை  இன்னும் ஒன்றிரண்டு பதிவுகளில் தொடர்ந்து பேசுவோம்!

Change Management மாற்றங்களுக்குத் தயாராவது குறித்த தொடர்பதிவுகள் கொஞ்சம் இடைவெளி விட்டுத் தொடரும்! மனிதவளம், மேலாண்மை, நிர்வாகம், மார்கெடிங் துறை குறித்த பதிவுகளைத் தொடர்ந்து இந்தப்பக்கங்களில் எழுதும் விருப்பம் இருப்பதை ஏற்கெனெவே சொல்லியிருக்கிறேன்!


டிஸ்கி ஒன்று

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் எழுதிய  இரு நூல்கள் புத்தகக் கண்காட்சியில் கடைக்கு 12.01.2011 அன்று விற்பனைக்கு வந்து சேர்ந்தன. 

தமிழினி -- கடை எண் 354, 355 

United Writers Shop No 29 

நூல்கள் --- 

1) பாரதிக் கல்வி, ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன், தமிழினி, டிசம்பர் 2010, பக்கம்
128, ரூ 80. 

2) அறிவும், நம்பிக்கையும் -- ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன், தமிழினி, டிசம்பர்
2010, ரூ 55 

முதல் நூல் பாரதியின் கருத்துகளைப் பற்றிய இலக்கிய விமரிசனம். 

இரண்டாவது நூல் மனித சிந்தனை மரபுகளின் வரலாற்றில் அறிவும் நம்பிக்கையும் எந்தவிதமான ஊடுகலந்த இயக்கம் கொள்கின்றன என்பதைப் பற்றி விவேகாநந்தரையும், நம்மாழ்வாரையும் முன்னிறுத்தி எழுதப்பட்ட பண்பாட்டு விமரிசனம். 

"படிக்க நேர்ந்தால் படிப்பவர்கள் கருத்துகள் சொன்னால் நன்றாக இருக்கும். அவ்வாறு சொல்வோருக்கு முன்கூட்டியே நன்றிகள்" . 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் தன்னுடைய நன்றிகளை முன்கூட்டியே இப்படி தெரிவித்திருக்கிறார்!


6 comments:

  1. //வங்காளம் உருப்படுவதற்காகவாவது சிபிஎம் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி அரசு பத்தாண்டுகளுக்கு முன்னரே ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டிருக்க வேண்டும் என்று சொன்ன ஒரு விமரிசனத்தை அன்றாட செய்திகளில் சென்ற மாதம் பார்க்க நேர்ந்தது.அப்போது இந்த புத்தகத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்[புக் கிடைத்தது//

    ஒரு படித்த முட்டாளின் பயன்னற்ற வார்த்தைகள் இவை. கம்யூனிஸ்ட் அவர்களுடைய வங்க மொழிக்கு செய்த மொழி சேவையை வேறு யாரும் எந்த மொழிக்கும் செய்ததில்லை நீதிமன்ற மொழி மாநில மொழிகளில் வங்கமொழி மட்டுமே இருப்பதாக சொல்லப்படுகிறது.

    ReplyDelete
  2. விடுதலை என்ற பெயரில் எழுதும் தோழர் அனானி!

    ராமச்சந்திரா குஹாவைப் பற்றித் தெரிந்து தான் பேசுகிறீர்களா, அவர் எழுதிய புத்தகம் எதையாவது படித்திருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் படித்த முட்டாளின் பயனற்ற வார்த்தைகள் அவை என்று ஒரு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறீர்கள்.

    அளவு மாற்றம்-பண்பு மாற்றம் பற்றிய அடிப்படை விதியை அறிந்து வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். தொடர்ந்து ஆட்சிபீடத்திலேயே இருந்து பழகியவர்கள், ஜனங்களிடம் இருந்து அந்நியப்பட்டுப் போனதை இன்னமும் புரிந்துகொள்ளாமலேயே அரசியல் நடத்திவருபவர்களைப் பற்றி ராமச்சந்திரா குஹா தெரிவித்த கருத்து மிகச் சரியானதே என்று தான் நான் கருதுகிறேன்.

    ஒரு முழுமையான அரசியல் விவாதம் நடத்துகிற களம் இல்லை இது. நான் படிக்க நினைத்திருக்கும் சில புத்தகங்களைப் பற்றியது. இந்தப் புத்தகத்தைப் பற்றியோ, அல்லது அவருடைய முந்தைய புத்தகம் எதையாவது படித்துவிட்டு அப்புறம் அவரைப் பற்றிக் கருத்துத் தெரிவித்திருந்தால், இங்கே படிக்க வருகிற வாசகர்களுக்கும், எனக்கும் மாற்றுக் கருத்தைத் தெரிந்துகொள்கிற நல்ல வாய்ப்பாக இருந்திருக்கும்.

    நீங்கள் யாரோ எவரோ எனக்குத் தெரியாது, ஆனால் மேற்கு வங்கத்தில் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தால் கேரளா- இதற்காக தனக்குத் தெரிந்த அத்தனை சாகசங்களையும் நிகழ்த்தத் தெரிந்த கட்சி மார்க்சிஸ்ட் கட்சி என்பதை நான் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறேன். அது தெரிந்த காரணத்தால் தான், ராமசந்த்ரா குஹா சொல்வதற்காக மட்டும் இல்லை, ஒரு இயக்கம் தன்னை சரி செய்து கொள்வதற்காகவாவது, பதவியில் இருந்து இறக்கப்பட வேண்டும் என்றே நானும் விரும்புகிறேன்.

    ReplyDelete
  3. அருமையான பகிர்வுங்க.... மிக்க நன்றி.

    இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி திருமதி சித்ரா!

    புத்தாண்டு, மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அனைவருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. தவறாமல் வருகை தந்து பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.பின்னூட்டங்களை அவசியம் படித்து ரசித்து அனுபவிக்க வேண்டும். இந்த இணைப்பில் சென்று பட்டங்களை பெற்றுக்கொளவும்.நன்றி.
    http://ponmaalaipozhuthu.blogspot.com/2011/01/blog-post_12.html

    ReplyDelete
  6. வாருங்கள் மாணிக்கம்!

    உங்களுடைய பதிவில் டாக்டர் பட்டம் =உலக மகா இளிச்சவாயன் என்ற அர்த்தத்தில் அல்லவா, இந்தப் பட்டம் வருகிறது!

    ஏற்கெனெவே "உலக மகா டாக்டர்களை" எல்லாம் பார்த்து விட்டபடியால், இந்த டாக்டர் பட்டங்களில் நாட்டம் எப்போதுமே இருந்ததில்லை. ஒவ்வொரு தேர்தல் முடிவும் இந்த மாதிரிப் பட்டங்களை ஜனங்களுக்கு அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது தனியாக இந்த அலங்காரம் தேவை தானா என்று கூடத் தோன்றுகிறது!!

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)