புத்தகங்கள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பகிர்ந்து கொள்வதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட வலைப்பதிவு இது.
ஓராண்டைத் தாண்டியாகிவிட்டது.இந்த வருடத்தில் அறுபத்திரண்டு பதிவுகளும், சென்ற ஆண்டு கடைசியில் இரண்டுமாக மொத்தம் அறுபத்துநான்கு பதிவுகள் இந்தப்பக்கங்களில் வெளியாகி இருக்கின்றன.
வெறும் புத்தக வாசிப்பு, இது எனக்குப் பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்ற ரீதியில், அல்லது வெறும் விமரிசனமாக மட்டும் குறுகி நின்றுவிடாமல், வாசிப்பையும் தாண்டி எழுத்து என்னென்ன விதங்களில் தாக்கத்தை, தொடர்சிந்தனையைத் தோற்றுவித்திருக்கிறது என்ற மையப் புள்ளியை வைத்து மட்டுமே இந்தப் பக்கங்களில் பேச முயற்சி செய்திருக்கிறேன்.
மனிதவளம், தலைமைப்பண்பு, சுய முன்னேற்றம் மேலாண்மை பற்றிய பதிவுகளுக்கு இந்தப்பக்கங்களில் இன்னும் முக்கியத்துவம் கொடுக்க ஆசை! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், எப்படி வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ள முடியுமானால் செய்வதை இன்னமும் திருந்தச் செய்ய முடியும்!
இந்தப்பக்கங்களில் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன, பிடிக்காத விஷயம் என்ன, என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதைப் பின்னூட்டங்களில் பகிர்ந்துகொள்ள முடியுமானால், இந்தப் பக்கங்களை மேம்படுத்த பேருதவியாக இருக்கும்!
Bonne Année 2011
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
\\மனிதவளம், தலைமைப்பண்பு, சுய முன்னேற்றம் மேலாண்மை பற்றிய பதிவுகளுக்கு இந்தப்பக்கங்களில் இன்னும் முக்கியத்துவம் கொடுக்க ஆசை\\
ReplyDeleteஎன் ஆசையும் இதுவே..
ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களே...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்..
ReplyDeleteஜீவி சார்! திரு.சிவா!
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.
சிவா!
படித்ததில் பிடித்ததாக, நம்முடைய இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் பொருந்திப் போவதான நிறைய விஷயங்களைக் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றாக, கோர்வையாக, கேஸ் ஸ்டடியோடு சேர்த்து எழுத ஆசை. இந்த வலைப்பக்கங்கள், என்றைக்கு வந்து படித்தாலும், படிப்பவருக்குப் பயன் உள்ளதாக இருக்கவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.