ஜாடை ஒன்றே போதுமா?
காங்கிரஸ் கட்சி அப்படித்தான் நினைக்கிற மாதிரித் தெரிகிறது! தினசரி தளத்தில் இதைச் சொல்கிற விதமே மிகவும் அருமையாக!
நேரு உல்லாசப்பிரியர் என்று தெரிந்த அளவுக்கு, மகள் இந்திரா எப்படிப்பட்ட தறுதலை, ராவடி என்பதை எம் ஓ மத்தாய் தவிர இன்னும் பலபேர் புத்தகமாக எழுதியும் கூட, வெளியே பரவலாகத் தெரியவில்லையே என்கிற மனக்குறை எனக்குண்டு!
ஒரு தொலைகாட்சி விவாதத்தில் காங்கிரசின் அமெரிக்கை நாராயணன் பேசியத்தைக் கேட்ட பிறகு காங்கிரஸ்காரர்களே பழைய குப்பைகளைக் கிளறி எடுக்க வைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை பிரகாசமாகத் தெரிகிறது.
மருத்துவர் ராமதாஸ் ட்வீட்டரில் ஏதாவது ஒரு செய்தியைப் பகிர்ந்தால், உள்ளூர் நிலவரத்தோடு முடிச்சுப்போட்டு எதிர்க்கேள்வி கேட்பவர்கள் இங்கே தமிழ்நாட்டில் அதிகம்!
நேரு உல்லாசப்பிரியர் என்று தெரிந்த அளவுக்கு, மகள் இந்திரா எப்படிப்பட்ட தறுதலை, ராவடி என்பதை எம் ஓ மத்தாய் தவிர இன்னும் பலபேர் புத்தகமாக எழுதியும் கூட, வெளியே பரவலாகத் தெரியவில்லையே என்கிற மனக்குறை எனக்குண்டு!
ஒரு தொலைகாட்சி விவாதத்தில் காங்கிரசின் அமெரிக்கை நாராயணன் பேசியத்தைக் கேட்ட பிறகு காங்கிரஸ்காரர்களே பழைய குப்பைகளைக் கிளறி எடுக்க வைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை பிரகாசமாகத் தெரிகிறது.
போஸ்டரில் நாயகனாக வருவார் என்று எதிர் பார்க்கப் பட்டவரை போஸ்டர் ஒட்டுகிற விடலையாக கார்ட்டூன் வரைந்து சந்தோஷப் பட்டிருக்கிறது, வேறு யார்? ஹிந்து நாளிதழ் தான்!
அமேதி தொகுதியைச் சேர்ந்த விவசாயிகள் திரண்டு ராகுல் காந்திக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற விவசாயிகள் பலர் ‘‘இத்தாலிக்கு திரும்பிச் செல்லுங்கள்’’ எனக் கூறி ராகுல் காந்திக்கு எதிராக கோஷமிட்டனர். இது கூட ஹிந்து செய்திதான்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு பொ அகத்திய லிங்கம் ஜாக்டோஜியோவுக்காக இப்படி உருகுகிறார் கள யதார்த்தமோ வேறு மாதிரி இருக்கிறது. நேரெதிரான பாசிட்டிவ் செய்தி ஒன்று இங்கே
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தேர்தல் காலத்தை ஒட்டி, பிளாக்மெயில் செய்கிற மாதிரிப் போராட்டம் நடத்துவது ஒரு தொடர்கதையாகிக் கொண்டே இருப்பதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்து வெகுகாலம் ஆகிவிட்டது. Accountability கொஞ்சமும் இல்லாமல் சலுகைகள், சம்பளம் கேட்பது, இங்கே கழகங்கள் ஊட்டி வளர்த்த கோளாறு. ஜெயலலிதா ஒருமுறை சாட்டையைச் சுழற்றினார். அடங்கி கிடந்தார்கள். இவர்களிடம் தேர்தல் வேலை கொடுக்கப்படுவதை வைத்து இப்போது மீண்டும் துள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.
பின்னணியில் ஒரு கழகம் இருப்பதும் கூட இங்கே எல்லோருக்குமே தெரிந்தது தான்!
அதிகம் முடிவளர்ந்தால் மொட்டை என்கிற கதை நிகழ்வது எப்போதோ?
8:33 PM - 24 Jan 2019
திருச்சியில் தேசம் காப்போம் என்று கூட்டம் நடத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியைத் தனக்காக கெலித்து விட்டார்! ஒரு சீட்டு, ரெண்டு சீட்டுக்காக என்னென்னவெல்லாம் கூவவேண்டி இருக்கிறது!!
பாட்டாளி மக்கள் கட்சி என்ன செய்யப்போகிறது? மருத்துவர் அதைப் பற்றி இன்னமும் ஒன்றும் சொல்லக் காணோம்!