எழுச்சித்தமிழன் என்று எந்த நேரத்தில் #விசிக தலைவர் திருமாவளவனுக்கு அடைமொழி கொடுத்துக் கூப்பிட ஆரம்பித்தார்களோ? மனிதர் நாளை அக்டோபர் 24 ஆம் தேதி விசிக நடத்தவிருக்கும் மனுஸ்ம்ருதிக்கு எதிரான போராட்டத்துக்காக திருமாவளவன் பேசியது ஒரு பெரிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது திருமா பெண்களுக்கு எதிராக அநாகரீகமாகப் பேசியதற்கு மன்னிப்புக் கேட்டே ஆகவேண்டுமென்று குஷ்பு அளித்திருக்கிற பேட்டி கீழே! வீடியோ 21 நிமிடம்.
சனாதன தர்மத்தில் பெண்கள் பரத்தையர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்று இந்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது தொடர்பான விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திருமாவளவனின் பேச்சை கண்டித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சர்வதேச மனித உரிமை சங்கத்தின் ஆந்திர மாநில அமைப்பு சார்பில திருமாவளவன் பேச்சை கண்டித்து அவருடைய உருவ பொம்மை எரிப்பு போராட்டம் திருப்பதியில் நடைபெற்றது.
திருப்பதியில் நாலுகால் மண்டபம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் திருமாவளவனுக்கு எதிராகவும், அவருடைய பேச்சு கண்டிக்கும் வகையிலும் கோஷம் எழுப்பிய சங்கத்தின் ஆந்திர மாநில தலைவர் கிரண் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் திருமாவளவன் உருவபொம்மை எரித்து போராட்டம் நடத்தினர்.

