Showing posts with label DK சிவகுமார். Show all posts
Showing posts with label DK சிவகுமார். Show all posts

Wednesday, September 4, 2019

மீண்டும் "கரு" நாடகம்! #DirtyTricks alias D K சிவகுமார்!

ர்நாடக அரசியல் நிறையவே  வித்தியாசமானது. ஊழல் சம்பாத்தியத்தை அங்கே ஜனங்கள் ஒரு பெரிய குற்றம் என்று நினைப்பதில்லை என்பது அங்கே ஆரம்பகாலம் தொட்டே நிலவி வரும் ஒருவித கலப்படமான அரசியல் கலாசாரம்.  எல்லாவிதமான நிழல் சமாச்சாரங்களிலும், சமீபத்தைய Coffee Day சித்தார்த்தா தற்கொலை வரை, சம்பந்தப் பட்டிருப்பதாகச் சொல்லப்படும்   DK சிவகுமார் கைது செய்யப்பட்டிருப்பதில் கர்நாடக பிஜேபி வெளிப்படையாகத்  தன்னுடைய  மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் எங்கே இந்தக் கைது நடவடிக்கையால்  DK சிவகுமார் தியாகி, ஹீரோ ரேஞ்சுக்குப் போய்விடுவாரோ என்று ஒரு பக்கம் அச்சத்தில் வாயை மூடிக் கொண்டிருக்கிற பரிதாபம் தான் இந்திய அரசியலின் காமெடி கலந்த  ட்ராஜெடி!



DK சிவகுமார் விநாயக சதுர்த்தி அன்று தன் தந்தையை நினைத்து அஞ்சலிசெய்யக்கூட விடவில்லையென்று உருகிக் கண்ணீர் விட்டதும், ஒக்கலிகர் சமுதாய ஆதரவை கணிசமாகக் குத்தகைக்கு எடுத்திருப்பதும்  (தேவே கவுடாவும் ஒக்கலிகர் தானென்றாலும் அவர் கட்சிக்கு ஆதரவென்பது ஒரு குறிப்பிட்ட குறுகிய பகுதிக்குள் சுருங்கி விடுகிறது) நயமாகவும் பயமுறுத்தியும் காரியம் சாதிக்கிற அவருடைய சாதுர்யம், எல்லாமாகச் சேர்ந்து கர்நாடக முதல்வர் நாற்காலியைக் குறிவைத்தே செய்யப்படுவது சிதம்பர ரகசியம். #DirtyTricks இல் கைதேர்ந்தவராக  DK சிவகுமார் இருப்பது தான் அவருடைய பலமும் பலவீனமும்!


கைது செய்யப்படுகிற தருணங்களில் எல்லாம் அரசியல் வாதிகளுக்கு நெஞ்சுவலி முதல் எல்லாக் கோளாறுகளும் முன்னுக்கு வந்துவிடும் என்பதில் சிவகுமார் மட்டும் விலக்கா என்ன?
   
கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ராகுல் காண்டி முதல் கே சி வேணுகோபால் வரையில் எல்லோரும் வழக்கமாகச் சொல்வதுதான்! நாட்டுக்கு நல்லது செய்ய நினைத்ததற்கா கைது? ஹவாலா முதல் மணி லாண்டரிங் என்று சட்டவிரோதச் செயல்பாடுகளில் தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்களின் அடிப்படையில்தானே கைது செய்திருக்கிறார்கள்? நீதிமன்றம் கூட இன்றைக்கு செப்டெம்பர் 13 வரை அமலாக்கத்துறை கஸ்டடியில் சிவகுமார் இருக்கட்டும் என்று சொல்லிவிட்டதே! 


All Roads Lead to Rome என்கிறமாதிரி சிதம்பரமோ சிவகுமாரோ விவகாரங்கள் இட்டுச் செல்வது இத்தாலி மம்மி வகையறாவிடம் தான் என்பதால் கூவல் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதும் புரிந்துகொள்ளக் கூடியதுதான்! கர்நாடக ஊடகங்கள் கூவுவது நம்மூரை விட மிகமோசமாக இருக்கிறது என்பதில் சந்தோஷப்படுவதா? வருத்தப்படுவதா?

மீண்டும் சந்திப்போம்.
   
   

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)