Tuesday, July 23, 2019

படங்களோடு கொஞ்சம் செய்தி! கொஞ்சம் விமரிசனம்!

வித்தியாசமான பலநேரங்களில் பத்திபத்தியாக எழுதிக் கொண்டிருப்பதை விட சில படங்களே செய்திகளின் அரசியலைத் தெளிவாகச் சொல்லிவிடுவதை வெகுவாக ரசித்திருக்கிறேன்! சிலநேரம் படத்தோடு ஒருசில வார்த்தைகள் சேரும்போது அங்கே ஒரு அருமையான காமெடியும் சேர்ந்துவிடுவதை உங்களில் எத்தனை பேர் அனுபவித்திருக்கிறீர்கள்?

   

இந்தப் படத்தை மட்டும் பார்த்தால், நம்மில்  பெரும்பாலும்  அப்படியே கடந்துபோய்விடுவோம்தான் இல்லையா? ஆனால்  இப்படி சில வார்த்தைகளோடு சேர்த்துப் பார்த்தால் எப்படி இருக்கிறது? கொஞ்சம் சொல்லுங்களேன்!

Narayanan R 
தேவரய்யாவையும், காமராஜரய்யாவையும் கும்பிடுகிறார் சரி. போட்டோக்கு போஸ் முடிஞ்சது.
அதென்ன மூக்குப்பொடிக்கு செருப்பு துடைக்கிறது கோப்ப்ப்பால்...?🤔
பார்த்தவுடன் பிபி எகிறிடுச்சோ ? தொப்புனு தல சுத்தி விழுந்துட்டீங்க ?  


The Accidental Chief Minister கேட்பதாக! சதீஷ் ஆசார்யா கார்டூன் போட்டதே தப்பு என்றொரு கருத்து இருப்பதை நானறிவேன்! அதற்காக?  The Accidental  Prime Minister,  The Accidental Party President  இப்படி எல்லாமே காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே நடக்கிறதே! அது ஏன்? எப்படி என்ற கேள்வி வரக்கூடாதா?  


  
சட்டமன்ற உறுப்பினர்களை சில்லறையாகவோ மொத்தமாகவோ பிஜேபியினரால்  விலைக்கு வாங்கப் பட்டிருப்பதாக சித்தராமையா இன்றைக்கு சட்டசபையில் பேசியிருக்கிறார், அவர்   சரியாகத்தான் பேசியிருக்கிறார் என்றா நினைக்கிறீர்கள்? ஆதாயத்துக்காக சாத்தான் கூட வேதம் போதுமாம்!  என் முதுகில் குத்தியவர்கள், அமைச்சர்களாக வரவிடமாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியின் பணப்பெட்டி DK சிவகுமார் உணர்ச்சிவசப்பட்டு சபதம் செய்தது ஆகப்பெரிய காமெடி! இதே சிவகுமார் பிஜேபி என்ன தருவதாகச் சொன்னார்களோ அதை நாங்களே தருகிறோம் என்று பேசியதும் கூட பொதுவெளியில் உலவிக் கொண்டிருப்பதுதான்!

ஆனாலும் வித்தியாசமான கட்சி என்று சொல்லிக் கொண்டு பிஜேபி இப்படிச் செய்வது சரியா தவறா என்று கருத்துச் சொல்வதற்கு முன்னால், கடந்த இரண்டுவாரங்களாக என்ன நடந்தது, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக (??) காங்கிரசும் தேவே கவுடாவின் கட்சியும் என்னென்ன பேரங்களில் இறங்கி எப்படி எப்படியெல்லாம் உருக்கமாக சீன் போட்டார்கள் என்று பார்த்துவிட்டு அங்கே முதலில் காறித்துப்பிவிட்டு, இங்கே வந்து  சொல்லலாம்! 

இல்லையென்றால் அவரவர் இருப்பிடத்திலேயே #GoBackModi கருப்பு பலூன்களை பறக்கவிட்டு அமைதியாகலாம்!

மீண்டும் சந்திப்போம்.
         

4 comments:

  1. கோபால் பட கமெண்ட்ஸ் சுவாரஸ்யம்.

    குமாரசாமி ஆட்சி கலைந்த செய்தி வந்து கொண்டிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. குமாரசாமி அரசு கவிழ்ந்ததைத் தனிப்பதிவாகவே எழுதிவிட்டேன் ஸ்ரீராம்! இங்கே எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் குமாரசாமி நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது பேசக்கூட ஆரம்பிக்கவில்லை.

      Delete
  2. கடவுளை வணங்கும் கொள்கை இல்லாத மூக்குப்பொடி காலில் விழுவதும்,

    கடவுளை வணங்கியவர்களை கும்பிடுவதும்தான் இதில் முரண்.

    ReplyDelete
    Replies
    1. காசையே கடவுளாகக் கும்பிடுகிற திராவிடக்கும்பலில் கோப்ப்பால்சாமி முரண்பாடுகளுடைய மொத்த உருவம்! #GoBackModi பலூனைப் பறக்கவிட்டு அரசியல் பேசியவர், மோடியைச் சந்தித்து சால்வை அணிவித்து வணங்குகிறார்! இவரை ராஜ்யசபா எம்பியாகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கக் கூடாது என்று கடிதம் எழுதிய டாக்டர் சுப்ரமணியன் சுவாமியைக் கட்டிப் பிடித்துப் பேசுகிறார்! அந்தக் காட்சிகளுக்கு முன்னால் இந்தப்படம் வெறும் ஜுஜ்பிதான்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)