கமல் காசன் எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகப் பேசும் சில தருணங்களில், எப்போதையும் விட அதிகமாகக் குழப்புவார்! தெரிந்த விஷயம்தானே! என்று ஒதுக்கி விட்டுப் போய்விட முடியாத உளறலுடன் வந்தால் என்ன செய்வீர்கள்?
நான் சொல்ல வந்த விஷயம், 32வது நிமிடத்தில் இருந்து.
காஷ்மீரில் ஏன் பொது வாக்கெடுப்பு நடத்தவில்லை? இந்திய அரசு எதற்கு பயப்படுகிறது? - கமல்ஹாசன் கேள்வி என்று அதையே தலைப்பாக்குகிறது ஹிந்து நாளிதழ். காஷ்மீர் விவகாரத்தை இந்த அளவுக்குப் பிரச்சினையாக வளர்த்து விட்டதே நேருதானே!
இது எப்போது என்று கேட்கிறீர்களா?
கமல் காசர்கள் தங்களுடைய அறிவுமட்டத்துக்கு நெருங்கி வரும் திராவிடங்களோடு அரசியல் பேசுவது சரி!அதற்காக காஷ்மீர் பிரச்சினை, பொதுவாக்கெடுப்பு என்றெல்லாம் தெரியாத விஷயங்களையும் பேசுவது சரிதானா?
K Panbarasu காட்சிகள் மூலம் கதை சொல்பவர் என்று முகநூலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சொல்வது இது
தனிநபர்களை விட, அரசியல் கட்சிகளை விட தேசம் பெரிது! கமல் காசன் உளறல் தேசிய அளவில் பெரும் கோபத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது.