புதன்கிழமை என்றால் எங்கள்Blog இல் கேள்விபதில் பதிவு கௌதமன் சாருடைய தனிக்காட்டு ராஜாங்கம் என்பதோடு கொஞ்சம் சுவாரசியமான விஷயங்களும் இருக்கும். இந்த புதன் கிழமைப் பதிவுக்கான முகநூல் அறிவிப்பு தமன்னா ரசிகரான நெல்லைத்தமிழனைச் சீண்டுகிற மாதிரி இருக்கிறதோ? ஸ்ரீராம் அல்லது நெல்லைத்தமிழன் யாராவது வந்து பதில் சொன்னால் தான் உண்டு!😍😍
இங்கே எல்லோருமே கிரேசி மோகனுக்கு அஞ்சலிப் பதிவாக எழுதிக் கொண்டிருப்பதை போலவே நாமும் எழுதினால் அது கூட்டத்தோடு கூவுகிற மாதிரி ஆகிவிடும்! அத்துடன் வாழ்நாள் முழுக்க எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தவரைப் பற்றி அழுகாச்சிப் பதிவு, வெற்று வார்த்தைகளில் அஞ்சலிப்பதிவு என்று வேண்டாமே!
முன்னர் கல்கி வார இதழில் கிரேசியைக் கேளுங்கள் என்று கேள்விபதில் நிகழ்ச்சியாக வந்து கொண்டிருந்ததைத் தொகுத்து, ஒரு வீடியோ பகிர்வாக! இங்கேயும் கூட கேள்வி பதிலில் தமன்னா வருவது தற்செயலானது மட்டுமே!
துக்ளக் அட்டைப்பட நையாண்டியை விட அதிமுக உட்கட்சி விவகாரங்கள் சீரியஸ் காமெடியாக இன்றைய சேனல் செய்தி, விவாதங்களாகத் தீனிபோட்டுக் கொண்டிருக்கின்றன. அதே போல ஆந்திராவில் 22 எம்பிக்களை வைத்திருக்கும் YSRCP க்கு துணைசபாநாயகர் பதவி என்று ஊடகங்களாகவே ஊகம் செய்து எழுதிக் கொண்டிருக்கின்றன.
சதீஷ் ஆசார்யா ஆந்திராவில் 5 துணைமுதல்வர்கள் என்று அர்த்தமே இல்லாத சமூகநீதி சாங்கியத்தைப் பற்றி வரைந்த கார்டூன் இது! துணைசபாநாயகர் பதவி என்பதுகூட ஒருவிதத்தில் அர்த்தமே இல்லாத அரசியல் சாங்கியம் தான்!
காங்கிரஸ் தலைவர் பொறுப்பை தொடர்வது குறித்து எந்த முடிவையும் அறிவிக்காமல், ராகுல் மவுனமாக இருப்பதால், கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்த விவாதம் துவங்கியுள்ளது என்பது கூட ஒரு அர்த்தமில்லாத சாங்கியம் தான் என்று தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன?
பிரசாந்த் கிஷோர்! தேர்தல் உத்தி வகுத்துக் கொடுப்பதை ஒரு வியாபாரமாகவே செய்துவரும் இவருடைய லேட்டஸ்ட் கஸ்டமர் மம்தா பானெர்ஜி! சதீஷ் ஆசார்யா என்ன சொல்ல வருகிறார் என்பது யாருக்காவது புரிகிறதா?
புரிந்தவர்கள் இங்கே வந்து சொல்லலாமே!
மீண்டும் சந்திப்போம்.



