Showing posts with label என்கவுன்டர்கள். Show all posts
Showing posts with label என்கவுன்டர்கள். Show all posts

Friday, December 6, 2019

என்கவுன்டர்கள் தீர்வல்ல!

தெலுங்கானாவில் ஒரு பெண் மருத்துவர்  கயவர்களால் மானபங்கப்படுத்தப் பட்டதுடன் எரித்துக் கொலை செய்யப்பட்டதும் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றத்திலும் கூட சில உறுப்பினர்கள் அதீத உணர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் ஆனால் உணர்ச்சிவசப்படும் ஒரு கும்பல் மனோநிலையுடன்  எந்தக்காலத்திலும் சரியான முடிவெடுக்க முடியாது.  சரியான நீதியை வழங்குவதற்கு உதவியாகவும்  இருக்க முடியாது. ஒரு குற்றம் நடந்ததென்றால் கும்பலாகக் கூடி வெட்டு, குத்து, கல்லாலடித்துக் கொல், என்கவுன்டரில் போட்டுத்தள்ளு  என்று  கூவுவது என்ன மாதிரியான மனோநிலை?



முந்தைய நாட்களில் ஹிந்து நாளிதழில் சுரேந்திரா இந்த போலித்தனத்தை கார்டூனாக வரைந்திருக்கிறார்.

  
அவர் மட்டுமல்ல, இன்னொரு கார்டூனிஸ்ட் மஞ்சுள் கூட ஜனங்களுக்கு அவ்வப்போது ஏற்படும் நியாய உணர்ச்சி பற்றி கார்டூனாக வெளிப்படுத்தியிருக்கிறார்.


ராஜ்யசபை உறுப்பினரான ஜெயா பச்சன் கூட குற்றவாளிகளை அடித்தே கொல்லவேண்டுமென்று ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்.


ஜனங்களுடைய கோபம் அரசுக்கெதிராகத் திரும்புவது தெரிந்த நிலையில் தெலங்கானா காவல்துறை இன்று பெண் மருத்துவர் ப்ரியங்கா ரெட்டி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் என்கவுன்டரில் போட்டுத் தள்ளி இருக்கிறது.


ப்ரியங்கா ரெட்டியை சிதைத்து தீ வைத்து கொன்ற 4 பேரையும்..என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறது ..தெலுங்கானா காவல்துறை.
கொதித்துக் கொண்டிருந்த பெண்களை இது சற்றே அமைதிப்படுத்தி இருக்கிறது.
என்கவுண்டர் மூலம் ...தனக்கு எதிராக திரும்பிக் கொண்டிருந்த அரசியலுக்கு.. வேகத்தடை போட்டிருக்கிறார்..தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் . [ அரசியல் சுயலாப காரணமின்றி அரசியல்வாதிகள் எதையும் செய்வதில்லை ]
இச் செயலுக்கு ...பொதுமக்கள் ஆதரவு இருக்கும் / இருக்கிறது.
வழக்கு விசாரணை, நீதிமன்றங்கள் என்று..பொதுமக்களை ... மனித உரிமை பேசவிடாமல் தடுப்பது... குற்றத்தின் கொடூர தன்மை மட்டுமல்ல..
கொடூரத்தை அரங்கேற்றிய குற்றவாளிகளுக்கு ...தையல் மெஷினும், நிதி உதவியும் அளித்து கேவலமான அரசியல் செய்யும் அரசியல் வியாதிகள் முக்கிய காரணம்.
வருடக்கணக்காக இழுத்துக் கொண்டு நடக்கும் விசாரணைகளும், நீதியை உணர்த்தாத தீர்ப்புகளும் ஒரு முக்கிய காரணம்.
மனித உரிமை பேசி தொடர்ந்து 'கொடூர கொலை குற்றவாளிகளை மட்டும்' தப்பிக்க செய்யும் போலிகள் முக்கிய காரணம்.
இனியாவது...எந்த ஒரு குற்ற செயலுக்கான விரைந்த தீர்ப்பிலும், அதன் விளைவிலும் தார்மீக நீதி என்பது உணரப் படவேண்டும். உணர்த்தப் படவேண்டும்.
அப்போதுதான்..கொடூர குற்றவாளிகளுக்கு கூட மனித உரிமை குறித்து பேச பொதுமக்கள் முன்வருவார்கள்.
பானு கோம்ஸ் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். இங்கே சிதம்பரங்களுக்கு விரைந்து கிடைக்கிற நீதி டில்லியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான நிர்பயாவுக்கு கிடைப்பதில்லை. என்கவுன்டர்கள் கூட அரசியல் ஆதாயத்துக்காகத்தான் செய்யப்படும் என்றால் .......

என்கவுன்டர்கள், நிச்சயமாக, சரியான தீர்வல்ல.     

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)