Pages

Saturday, December 28, 2019

என் சுவாசக் காற்றே......!

உயிர் வாழ மூச்சு மிகவும் அவசியம்தான் இல்லையா?

அப்படி வாழ்வதற்கே ஒரு அர்த்தத்தை, சுவையைக் கொடுப்பது வாசிப்பு அனுபவம் தான்! சிலர் வாழ்க்கையைப் படித்தே அறிந்துகொள்கிறார்கள்! வேறுபலருக்கோ, புத்தகங்களை வாசித்தே வாழ்க்கையை அறிந்து கொள்கிற அனுபவம் வாய்க்கிறது.வாசிப்பதில் ஆழ்ந்து லயிக்கும்போது அதை யாருடனாவது பகிர்ந்துகொண்டே ஆக வேண்டும் என்ற தவிப்பு, மடி கனத்துப் போன பசுவைப் போல, எழுதத் தூண்டுகிறது.


வாசித்ததும், நேசித்ததுமான சில அனுபவங்கள் இந்தப்பக்கங்களில்!

புத்தகங்கள், கவிதைகள் என்று மட்டுமல்ல, மன வளம் பெருக உதவியாகக் கிடைக்கும் எந்த செய்தியாக இருந்தாலும் சுவாசக் காற்றாக!

புத்தகங்கள், கவிதை, இலக்கியம், அரசியல், பொருளாதாரம் என்று எதில் வேண்டுமானாலும், படித்த நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இன்னும் அதிக விஷயங்களைத் தெரிந்துகொள்ளவுமான நுழைவாயில் இது!

வாருங்கள்! பேசுவோம்!

3 comments:

  1. எழுதுங்கள் ...காத்திருக்கிறோம்
    ReplyDelete
  2. வருகைக்கு மிகவும் நன்றி, சுரேகா! ஸ்ரீராம்!
    முயற்சி நல்ல முறையில் நடந்தேற இறைவனது அருளை இறைஞ்சி,
    புத்தாண்டு வாழ்த்துக்களுடன்!
    ReplyDelete
இப்படி ஒரு சுருக்கமான அறிமுகத்துடன் ஆரம்பித்த இந்தப்பக்கங்கள் கடந்த 24 ஆம் தேதி பத்தாண்டுகளை நிறைவு செய்து 25 அன்று 11வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது  2010 ஆம் ஆண்டில் 63 பதிவுகள் என்று சுறுசுறுப்பாக ஆரம்பித்து. அடுத்துவந்த காலங்களில் குறைந்துகொண்டே வந்து ஒரு 4 ஆண்டுகள் எதுவும் எழுதாமலேயே 2018 டிசம்பர் வரை மொத்தம் எழுதியதே 86 பதிவுகள் தான்.

2019 ஆம் ஆண்டு இந்தப் பக்கங்களைப் பொறுத்தவரை ஒரு பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். இந்தப் பதிவுடன் சேர்த்து இதுவரை 417 பதிவுகள். ஒவ்வொரு நாளும் எதைப்பற்றியாவது ஒரு பதிவு நிச்சயமாக இருக்கும், சில நாட்களில் ஒரேநாளில் 2 பதிவுகள் கூட என்று ஒருவித வேகத்துடன் இருந்ததுண்டு.

புத்தகங்களைப் பற்றி எழுதிக்கொண்டிருந்தபோது கிடைக்காத பார்வைகள் அரசியலைத் தொட்டு எழுத ஆரம்பித்தபோது கூடுதலாகக் கிடைத்தன. டிசம்பரில் இந்த வேகத்தை மட்டுப் படுத்திக்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்ததில் இந்த மாதம் இது 25வது பதிவு.

முதல் பதிவில் சொன்னமாதிரி வெறும் புத்தக வாசிப்பு என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அரசியல், பொருளாதாரம் இப்படி மனிதர்களைப் பாதிக்கிற எந்த ஒரு விஷயத்தையும் விட்டுவிடாமல், பதிவுகளை எழுத உத்தேசம். இறையருள் துணை செய்யட்டும்.

இந்தப்பயணத்தில் கூட வரும் நண்பர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன். 

மீண்டும் சந்திப்போம்.      

2 comments:

  1. 11வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.........தேவியர் இல்லத்தின் உளப்பூர்வமான வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி ஜோதி ஜி!

      Delete