மாற்றங்களை எதிர்கொள்வது எப்படி, மாற்றங்களை சரியாக எதிர்கொள்ளத் தெரியாமல் தோற்கும் சந்தர்ப்பங்கள் எவை என்பதைப் பற்றிய சிறு அறிமுகமாக சென்ற பதிவில் கொஞ்சம் புள்ளி வைத்து நிறுத்தியிருந்தேன். புள்ளிகளை இணைத்துக் கோலம் போடுவதற்கு இடையில் சில தனிப்பட்ட விவகாரங்கள் நேரத்தை மொத்தமாக எடுத்துக் கொண்டதில் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டதற்காக முதலில் என்னை வாசகர்கள் மன்னிக்க வேண்டும்.
ஜீவி சார் ஒருவரைத் தவிர, வேறு எவரும் இந்த மாற்றங்களை எதிர்கொள்வது, நிர்வகிப்பது குறித்தான கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை, வாசகர்களுடைய பங்களிப்பும் இருந்தால் தான் எந்த ஒரு விஷயமும் பயனுள்ள விவாதமாக, இருதரப்புக்கும் பயன்படுவதாக இருக்கும் என்பதை நான் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இந்தத் தளத்தைப் பார்வையிடுகிறவர்கள் இருந்தாலும், ஒரு அர்த்தமுள்ள விவாதத்தைத் தொடங்கவும், பயனுள்ள வகையில் இந்த வலைப்பதிவை வழி நடத்தவும், இந்தப் பதிவைப் படிக்க வரும் வாசகர்கள் தயங்காமல் முன்வரவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.
Everything changes, except the law of change! மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும்,.நாம் ஒவ்வொருவருமே மாற்றத்தை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதே இல்லை. தனிநபர்களாக வைத்துப் பேசும்போது, மாற்றத்தைக் கண்டு அஞ்சுகிறவர்களாக, நான் இப்படியே இருந்து விட்டுப் போய் விடுகிறேனே என்று கெஞ்சிப் பிடிவாதமாகப் பழக்கங்களின் அடிமைகளாகவே இருந்துவிடுவது நம்மில் பெரும் பாலானவர்களுடைய இயல்பாகவே இருப்பதைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமான காரியமில்லை.ஜீவி சார் ஒருவரைத் தவிர, வேறு எவரும் இந்த மாற்றங்களை எதிர்கொள்வது, நிர்வகிப்பது குறித்தான கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை, வாசகர்களுடைய பங்களிப்பும் இருந்தால் தான் எந்த ஒரு விஷயமும் பயனுள்ள விவாதமாக, இருதரப்புக்கும் பயன்படுவதாக இருக்கும் என்பதை நான் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இந்தத் தளத்தைப் பார்வையிடுகிறவர்கள் இருந்தாலும், ஒரு அர்த்தமுள்ள விவாதத்தைத் தொடங்கவும், பயனுள்ள வகையில் இந்த வலைப்பதிவை வழி நடத்தவும், இந்தப் பதிவைப் படிக்க வரும் வாசகர்கள் தயங்காமல் முன்வரவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.
அதே போல மாற்றம் என்பது, எடுத்த எடுப்பிலேயே மொத்தமாக நிகழ்ந்து விடுவதுமில்லை என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். மாற்றத்திற்குத் தயார் செய்து கொள்வது என்பது, ஒரு வீரன் தனக்கு முன்னால் இருக்கும் சவாலை தைரியமாக எதிர்கொள்வதைப் போலத் தான்! விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரே, தைரியமாக சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதையும் நம்மால் ஊகிக்க முடியும். மாற்றங்களும், இப்படிப் பட்ட முன்னோடிகளின் வழியாகத் தான் மெதுவாக ஆரம்பித்து, ஏதோ ஒரு கட்டத்தில் மொத்தத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடுகின்றன.
இந்த இடத்தில், மாற்றத்தை எதிர்கொள்வதில் இரண்டு பிரதானமான போக்குகள் இருக்கின்றன. அதைத் தெளிவாகப் புரிந்து கொண்டபிறகே அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்க முடியும்..முந்தைய பத்தியில் சொன்ன மாதிரி, மாற்றங்களை நிகழ்த்துவதில் தைரியமாக, முன்னோடியாக இருப்பது, புதுமையைத் துணிந்து புகுத்துவது என்பது முதலாவது. இதை எல்லோராலும் செய்துவிட முடியாது.
துணிவோடு முயற்சிக்கிற அத்தனை பேருமே ஜெயித்துவிடுவதும் கிடையாது. ஆனாலும், உலகத்தில் நாம் பார்க்கிற அத்தனை மாற்றங்களும், இப்படித் துணிச்சலாக முயற்சித்தவர்களால் மட்டுமே உருவாக்கப்பட்டவைதான்! .
"தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா!" என்ற பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் வரிகளை நினைவில் வைத்துக் கொண்டால், Change Management என்றால் என்ன, ஏன், எதற்கு என்ற கேள்விகளுக்கும் விடைதேட வசதியாக இருக்கும்.
ஜான் பி கோட்டர் தன்னுடைய புத்தகத்தில், மாற்றங்களுக்குத் தடையாக இருக்கும் ஒரு எட்டு முக்கியமான தடைகளைப் பட்டியலிடுகிறார். அதற்கப்புறம், ஒரு எட்டு முக்கியமான வழிகளில் எப்படி மாற்றத்தை நாம் விரும்புகிற விதத்தில் நிர்வகிக்க முடியும், சாதிக்க முடியும் என்பதையும் சொல்கிறார்..அதுவும் சுருக்கமாக வெறும் நூற்று எண்பத்தேழு பக்கங்களில்!
முதலில் அவர் மாற்றங்களுக்குத் தடையாக இருக்கும் எட்டுக் காரணிகள் எவை என்று சொல்வதைப் பார்க்கலாம்.
இங்கே புத்தகத்தின் குறிப்பிட்ட பகுதிகளை கூகிள் புக்ஸ் தளத்தில் இணையத்திலேயே வாசிக்க முடியும்.
1. Allowing too much complacency
2. Failing to create a sufficiently powerful guiding coalition
3. Underestimating the power of Vision
4. Under communicating the Vision by a factor of 10 (or 100 or even 1000)
5. Permitting obstacles to block the Vision
6. Failing to create short-term Wins
7. Declaring Victory too soon
8. Neglecting to anchor Changes firmly in the Corporate Culture
இதற்கு மாற்றாக, மாற்றங்களுக்கு ஒரு எட்டு வழிகளை சொல்வதையும் கீழே ஒரு படமாகப் பார்க்கலாம். இது கோட்டர் எழுதிய புத்தகத்தின் 21 வது பக்கத்தில் இருப்பது நன்றியுடன் இங்கே எடுத்தாளப்படுகிறது.
இந்த இரண்டையும் படித்துவிட்டு, உங்களுடைய கருத்துக்களைத் தயங்காமல் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். தொடர்ந்து பேசலாம்! இது தொடர்பாகப் புள்ளிராஜா வங்கியைத் தொட்டு எழுதிய இந்தப் பதிவும்
மேலே சொன்ன விஷயங்களுக்கு எப்படிப் பொருந்துகிறது என்பதையும் பார்க்கலாம்.
Click the image to enlarge
இந்த இரண்டையும் படித்துவிட்டு, உங்களுடைய கருத்துக்களைத் தயங்காமல் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். தொடர்ந்து பேசலாம்! இது தொடர்பாகப் புள்ளிராஜா வங்கியைத் தொட்டு எழுதிய இந்தப் பதிவும்
மேலே சொன்ன விஷயங்களுக்கு எப்படிப் பொருந்துகிறது என்பதையும் பார்க்கலாம்.



