Monday, February 18, 2019

கமல் காசர்களும் காஷ்மீர் தீவீரவாதிகளும்!

கமல் காசன் எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகப் பேசும் சில தருணங்களில், எப்போதையும் விட அதிகமாகக் குழப்புவார்! தெரிந்த விஷயம்தானே! என்று ஒதுக்கி விட்டுப் போய்விட முடியாத உளறலுடன் வந்தால் என்ன செய்வீர்கள்?
நான் சொல்ல வந்த விஷயம், 32வது நிமிடத்தில் இருந்து. 

காஷ்மீரில் ஏன் பொது வாக்கெடுப்பு நடத்தவில்லை? இந்திய அரசு எதற்கு பயப்படுகிறது? - கமல்ஹாசன் கேள்வி என்று அதையே தலைப்பாக்குகிறது ஹிந்து நாளிதழ். காஷ்மீர் விவகாரத்தை இந்த அளவுக்குப் பிரச்சினையாக வளர்த்து விட்டதே நேருதானே!


இது எப்போது என்று கேட்கிறீர்களா? 

கமல் காசர்கள் தங்களுடைய அறிவுமட்டத்துக்கு நெருங்கி வரும் திராவிடங்களோடு அரசியல் பேசுவது சரி!அதற்காக காஷ்மீர் பிரச்சினை,  பொதுவாக்கெடுப்பு என்றெல்லாம் தெரியாத விஷயங்களையும் பேசுவது சரிதானா?  

K Panbarasu காட்சிகள் மூலம் கதை சொல்பவர் என்று முகநூலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சொல்வது இது 

தனிநபர்களை விட, அரசியல் கட்சிகளை விட தேசம் பெரிது! கமல் காசன் உளறல் தேசிய அளவில் பெரும் கோபத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது. 
      

Sunday, February 17, 2019

அரசியல் இன்று! ஏன் திமுகவும் வேண்டாம்?

புல்வாமா fedaayeen தற்கொலைத் தாக்குதல் இன்னும் சிலகாலத்துக்கு பேசுபொருளாக நீடிக்கும் போல! Most Favoured Nation அந்தஸ்து ரத்து, காஷ்மீரி பிரிவினை வாதிகளுக்கு, இன்று ஞாயிறு மாலையுடன் அரசுப் பாதுகாப்பு கிடையாது என்று ஒவ்வொன்றாக முடிவுகள் வந்துகொண்டே இருக்கின்றன.    

தேர்தல் நெருங்குகிற நேரத்தில் பாகிஸ்தானுடன் போரா? வந்தால் அது பிஜேபிக்கு சாதகமாகப்போய் விடுமே என்கிற பயம், இங்கே சில கட்சிகளுக்கு  வந்திருப்பதையும் கூடப்பார்க்க முடிகிறது. நேற்று மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் முஸ்லீம் லீக் கூட்டத்தில் திமுகவின் ஸ்டாலின் பேசியது கூட அந்த ரகத்தில் வருவதுதான்!  

அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்தபிள்ளை என்று தனக்கே சான்றிதழ் கொடுத்துக் கொள்கிறவர், அரசியல் நிலை பாட்டிலும் சரியாகத்தான் இருக்கிறாரா? அவருடைய அரசியல் ஞானம், செயல்பாடு எப்படி என்பதை இங்கே ஒரு 9 செகண்ட் வீடியோவிலேயே மதிப்பிட்டு விடலாம்!
நாசா என்று கூடங்குளம் நாட்களில் அருவருப்போடு அழைக்கப்பட்டவருடன்  சேர்ந்து என்னமாய் ஒரு  எகத்தாளச் சிரிப்பு? ஹிந்துக்கள் மதரீதியாக ஓட்டுப் போடுவதில்லை என்பதால் வருவதா இத்தகைய பேச்சு? அப்படியானால், அதையும் மாற்றிக் காட்டவேண்டிய நேரம் இது!  
நாராயணசாமிக்கு ஆதரவு! சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு! மம்தா பானெர்ஜிக்கு ஆதரவு! அப்படியே ராவுல் பாபாவுக்கும் ஆதரவு! ஒரேவார்த்தையில் சொல்வதானால் ஊழலுக்கே முழு ஆதரவு! இதுதான் திமுக என்கிறபோது, இவர்களை நிராகரித்தே ஆக வேண்டும் என்று சொல்வதில் தயக்கமென்ன?        

திமுக என்றாலே ஊழல்! திமுக நிச்சயம் வேண்டாம்!