Wednesday, October 27, 2010

நான் என்பதென்ன? நாம் என்பதென்ன?Self what ? 

இப்படி மார்க் சன்பார்ன்  ஒரு பகிர்வில் எழுப்பி ருந்த கேள்வி, கொஞ்சம் யோசிக்க வைக்கிறது!

இந்தப் பதிவில் மார்க் சன்பார்ன் ஒரு முக்கியமான உளவியல் சார்ந்த கேள்வியை முன்வைக்கிறார். தன்னை மையப்படுத்தித் தன்னிலேயே மூழ்கிக் கிடப்பதும் (Self absorption), தன்னைப் பற்றிய சிந்தனையும் (Self reflection) ஒன்றாகிவிடுமா என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

தன்னைப் பற்றிய யோசனைகளிலேயே மூழ்கிக் கிடப்பது என்பது ன்ன? தன்னைத் தவிர அது வேறெதையும் கணக்கில் எடுத்துக் கொள்வது ல்லை. எல்லாமே தான், தனது என்ற ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே முடிந்து போய் விடுகிறது! ஒரு பாயைச் சுருட்டி வைத்திருப்பது  போல சுருண்டு குறுகிக் கிடப்பது தான் என்கிறார். 

ஒரு உதாரணமாக,பயணம் செய்யும்போது, எவரும் அடுத்தவருக்கு இடைஞ்சலாக இருக்குமோ என்றெல்லாம் கவலைப்படாமல், அல்லது அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னுடைய சௌகரியங்களை மட்டும் நீட்டிக் கொள்ள முயற்சிப்பது போலத் தான்! இப்படிப்பட்ட மனோபாவம் சுருக்கமாகச் சொல்வதானால், தன்னுடைய சுயநலத்தை மட்டும் எல்லா வகையிலும் முன்னிறுத்திக் கொள்வது தான்!

சுற்றிக் கவனித்துப் பார்த்தோமேயானால், நம்மில் பெரும் பாலானோரிடம் இப்படிக் குறுக்கிக் கொள்கிற குணம் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். கொஞ்சம் தன்னையே கவனிக்கப் பழகினோம் என்றால், இப்படிக் குறுக்குவதில் இருந்து விடுபடவும் முடியும்.

தன்னைக் கவனிப்பது, தன்னைப் பற்றிய சிந்தனை என்பது இந்த சுருண்டு விடுகிற அல்லது குறுக்கிக் கொள்கிற மனோ நிலைக்கு நேர் எதிரானது. தன்னை, மற்றவற்றோடு சம்பந்தப்படுத்திப் பார்க்க முடிகிற விசாலமான பார்வையாக, புரிந்துகொள்ள முயற்சிக்கிற விதமாகத் தன்னைக் கவனித்தல், தன்னைப் பற்றிச் சிந்தனை செய்தல் என்பது பரந்து விரிகிறது.  

தன்னை மையப் படுத்தித் தனக்குள்ளேயே சுருண்டு அல்லது குறுகிப் போய் விடுவதற்குச் சரியான மாற்றாக, தன்னை மற்றவற்றோடு சம்பந்தப்படுத்தி பார்க்கப் பழகிக் கொள்வது என்பது ஒரு விசாலமான பாதையை ஏற்படுத்துகிறது இல்லையா? 

இப்படி மார்க் சன்பார்ன் முத்தாய்ப்பாக இன்னொரு கேள்வியை முன்வைக்கிறார்.

சுயநலம் என்பது உயிர் வாழ்வதற்கு அடிப்படையான தேவையாக இருந்தது என்னவோ  வாஸ்தவம் தான்! ஆனால், தங்களுடைய சுயநலத்திலேயே ஒவ்வொருவரும் கண்ணாய் இருந்துவிட்டால் எவருமே ஜீவிக்க முடியாது. 

தனித் தீவுகளாகத் தங்களை மட்டுமே முழு உலகமாக நினைத்துக் கொண்டிருந்தோம் என்றால் தீவுகளிலேயே முழுகிப்போய் விட வேண்டியதுதான்! எல்லோரும் பிழைத்திருக்க வேண்டுமானால், கொஞ்சம் பொதுநலம் கலந்த சுயநலமாக உயர்ந்தால் தான் உண்டு.

ஆனால், நம்மைச் சுற்றி நடப்பதென்ன? கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்! நாமே எப்படி நடந்து கொள்கிறோம் என்பதையும் சேர்த்து யோசித்துப் பாருங்கள்!சுயநலம் ஒன்றை மட்டும் குறிவைத்துச் செயல்படுவதில், இருப்பதையும் பறிகொடுத்து விட்டு நிற்கவேண்டி வருகிற நிலைமையும் வருகிறதா என்பதையும் பாருங்கள்!

மிருகங்களைப் போல தனியாக வாழ மனிதன் படைக்கப் படவில்லை. அதனால் தான், மனிதனை ஒரு சமூகப் பிராணி என்கிறோம். மண்ணில் பிறந்த தருணம் முதல், கடைசி வரை, ஒரு மனிதன் இன்னொரு மனிதனைச் சார்ந்தே, ஒரு சமுதாயமாக இயங்கும் வகையில் தான், மிருக நிலையில் இருந்து உயர்ந்து மனிதனாக மாறிய பரிணாமம் இருக்கிறது. ஒரு கூட்டமாக, கூட்டத்தின் நலன் தன்னுடைய நலனை விட முக்கியமானதாக உணரப்படும், செயல் படுத்தப்படும் தருணங்களில் எல்லாம், அந்தக் கூட்டமும் ஜெயித்திருக்கிறது, அதில் இருந்த தனி மனிதனுமே ஜெயித்திருக்கிறான்.

அலெக்சாண்டர் டூமா என்ற பிரெஞ்சுக் கதாசிரியர் எழுதிய The Three Musketeers கதையில் ஒரு முழக்கம்! All for one! One for all! என்று ஒரு கோஷம் வரும்! ஒரு தொழிற்சங்கவாதியாக இருந்த நாட்களில், தொழிற்சங்கத்தின் நோக்கமே இப்படித் தனிநபருக்காக அமைப்பும், அமைப்புக்காகத் தனிநபரும் என்ற அஸ்திவாரம் இருந்தால் தான் அந்த நோக்கமே நிறைவேறும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். 

ஒவ்வொரு தனி மனிதனுக்காகவும் அனைவரும்! அனைவருக்குமாக ஒவ்வொரு தனி மனிதனும்!

இப்படி இருவழிப் பாதையாக உயரும்போது  அது ராஜ பாட்டையாகிறது! மாறாக ஒருவழிப் பாதையாகக் குறுக்கிக் கொண்டே போனால், சுருங்கிச் சுருங்கிக் கடைசியில் முட்டுச் சந்தாகி முடங்கி விடுகிறது!

சுயநலம் வேண்டியது தான், பொதுநலத்தில் கலந்த சுயநலத்துக்கு முன்னுரிமை கொடுத்துச் செயல் படும்போது, அங்கே வெற்றிக்கான பாதை திறக்கிறது.

அப்புறம் என்ன! 

குறுகிய பார்வையைத் தவிர்த்து, ஜெயிக்கலாம் வாருங்கள்!3 comments:

 1. ஒருவழிப் பாதையாகக் குறுக்கிக் கொண்டே போனால், சுருங்கிச் சுருங்கிக் கடைசியில் முட்டுச் சந்தாகி முடங்கி விடுகிறது!

  ....rightly said! சிந்திக்க வைக்கும் நல்ல பதிவுங்க.... பாராட்டுக்கள்!

  ReplyDelete
 2. பொதுநலம் சார்ந்த பதிவு..வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. வாருங்கள் திருமதி சித்ரா!

  பயணக் கட்டுரையைக் கூடக் கொஞ்சம் வித்தியாசமாக எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்!
  குறுகிய எண்ணம் என்ற முட்டுச் சந்துக்குள் முட்டி நின்ற அனுபவம் நிறையவே ஆனதன் தழும்புகளில் வந்த வார்த்தைகள் அவை!

  வாருங்கள் சரவணன்!

  பட்டுக் கோட்டை பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறதா?

  "பொது நலம் பேசும் புண்யவான்களின்
  போக்கினில் அநேக வித்தியாசம்.....

  இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம்
  ஒரு கண்ணாய் இருக்கணும் அண்ணாச்சி!
  நாம ஒண்ணாய் இருக்கணும் அண்ணாச்சி!

  என்னை அந்தத் திண்ணைபேச்சு வீரர்கள் வரிசையில் சேர்த்து விடவில்லையே?!

  ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

தென்னிந்திய அரசியல் நிலவரம் இன்று!

பெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவருடமாகத் தங்கியிருக்கும் செய்தி வெளியானபிறகு கர்நாடக முதல்வர் குமாரசாமி கொஞ்சம் உஷாராகி,  கட்டாந்...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அனுபவம் (146) அரசியல் (140) 2019 தேர்தல் களம் (91) நையாண்டி (66) புத்தகங்கள் (32) எண்ணங்கள் (30) மனித வளம் (30) செய்திகள் (21) சிறுகதை (18) எது எழுத்து (13) Change Management (11) புத்தக விமரிசனம் (11) விமரிசனம் (11) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) கமல் காசர் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) தேர்தல் சீர்திருத்தங்கள் (9) தொடரும் விவாதம் (9) ரங்கராஜ் பாண்டே (9) ஆங்கிலப் புதினங்கள் (8) ஊடகப் பொய்கள் (7) ஊடகங்கள் (6) சுய முன்னேற்றம் (6) செய்திகளின் அரசியல் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அரசியல் களம் (5) ஏன் திமுக வேண்டாம் (5) திராவிட மாயை (5) தேர்தல் முடிவுகள் (5) (சு)வாசிக்கப்போறேங்க (4) இர்விங் வாலஸ் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) காங்கிரஸ் (4) காமெடி டைம் (4) கூட்டணிப் பாவங்கள் (4) சமூக நீதி (4) தி.ஜானகிராமன் (4) நா.பார்த்தசாரதி (4) புத்தகம் (4) புனைவு (4) மாற்றங்களுக்குத் தயாராவது (4) மீள்பதிவு (4) வாசிப்பு அனுபவம் (4) அக்கம் பக்கம் என்ன சேதி (3) அன்னை எனும் அற்புதப் பேரொளி (3) இடதுசாரிகள் (3) எங்கே போகிறோம் (3) கவிதை நேரம் (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சரித்திரக் கதைகள் (3) சாண்டில்யன் (3) ஜாக்டோ ஜியோ (3) ஜெயகாந்தன் (3) பதிப்பகங்கள் (3) பதிவர் வட்டம் (3) மாற்று அரசியல் (3) மோடி மீது பயம் (3) Defeat Congress (2) அஞ்சலி (2) அம்பலம் (2) உதிரிகளான இடதுகள் (2) உதிரிக் கட்சிகள் (2) ஏய்ப்பதில் கலைஞன் (2) ஒளி பொருந்திய பாதை (2) காஷ்மீர் பிரச்சினை (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சம நீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சீனா (2) சீனா எழுபது (2) ஞானாலயா (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தரிசன நாள் (2) தலைப்புச் செய்தி (2) தாலிபான் (2) நேரு (2) படித்ததில் பிடித்தது (2) பானாசீனா (2) பிரியங்கா வாத்ரா (2) பேராசையின் எல்லை எது (2) பொதுத்துறை (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) லயோலா (2) வரலாறும் படிப்பினையும் (2) வாசிப்பும் யோசிப்பதும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்த அன்னை (2) CONகிரஸ் (1) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) The Sunlit Path (1) Three C's (1) Tianxia (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கண்டு கொள்வோம் கழகங்களை (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சமுதாய வீதி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) செய்திக்கலவை (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெகசிற்பியன் (1) ஜெயமோகன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) தலைமைப் பண்பு (1) திராவிடப் புரட்டு (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பழக்கங்களின் அடிமை (1) பாரதியார் (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஸ்ரீ அரவிந்தர் (1) ஹிந்து காஷ்மீர் (1)