Showing posts with label தந்தியும் தமிழும். Show all posts
Showing posts with label தந்தியும் தமிழும். Show all posts

Tuesday, March 26, 2019

தந்தியும் தமிழும்! நல்லாச் சொல்றாங்கய்யா டீடெய்லு!

தந்தியும் தமிழும் என்ற தலைப்பில் ரங்கராஜ் பாண்டே இன்று காலை உரையாற்றியிருப்பதாக இந்த மாதிரி ஒரு அறிவிப்பைப் பார்த்ததும் jerk ஆனது நிஜம்! தந்தியின் தமிழ் என்றவுடன் கள்ளக்காதலில் வாலிபர் பட்டப்பகலில் குத்திக் கொலை என்று தலைப்பிட்டு சதக் சதக்கென்று 17 முறை குத்தியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துச் செத்தார் என்ற டெம்பிளேட் தான் உடனடியாக ஞாபகம் வந்தது.

பள்ளி மாணவனாக இருந்த நாட்களில் ஒரு பத்திரிகையாளனாக வரவேண்டுமென்கிற ஆசை நிறைய இருந்தது. தினத்தந்தி நிறுவனர் சி பா ஆதித்தன் எழுதிய எழுத்தாளர் கையேடு புத்தகமாக வந்த சூட்டிலேயே மதுரை தினத்தந்தி அலுவலகத்துக்கே போய் வாங்கிவந்ததும் அடிக்கடி புரட்டிப் பார்த்து மனதில் ஏற்றிக்கொண்ட அந்த நாட்களும் இப்போது நினைவுக்கு வருகிறது. ஒன்றுமில்லாத விஷயத்தைக்கூட  எப்படிப் பாமரருக்கும் ருசி தட்டுகிற செய்தியாக்குவது என்று அந்தப்புத்தகம் சொல்லிக் கொடுத்தது. உண்மை!   ஆனால், முக்கியமான ஒரு விஷயத்தை எப்படிச் செய்தி ஆக்குவது என்பதை மதுரை தினமணியில் உதவி ஆசிரியர்களாக  இருந்த சிலரும்,  The Hindu நாளிதழ் நிருபர்களில் சிலரும்தான் கற்றுக் கொடுத்தார்கள். எழுத வேண்டும் என்ற உந்துதலைக் கொடுத்தவர்களில் சி பா ஆதித்தன் (எழுதிய அந்தப்புத்தகம் வழியாக) அவர்களும் ஒருவர்தான்! மதுரை தினத்தந்தியில் செய்தியாக்கி எழுதிக்கொண்டிருந்த ஓரிரு  துணை ஆசிரியர்கள், அந்த எழுத்தாளர் கையேடு எப்படி தினத்தந்தியின் நடைமுறை வழிகாட்டியாக (manual) இருந்தது என்பதையும் தாண்டி வேறு சில எழுதப்படாத விதிகளையும் பகிர்ந்து கொண்டார்கள் என்பதை இந்தத் தருணத்தில் நினைவுபடுத்திப் பார்க்கிறேன். தந்தியின் தமிழ் என்றால் அது பாமரனுக்கான தமிழ், பாமரனுக்கும் புரியவேண்டுமென்பதற்காக எளிமையான வார்த்தைகளில் செய்தியைச் சொல்ல முயன்ற தமிழ் என்பது மட்டும் அவர்களுடைய நிறுவன பலம், அரசியல் சாய்மானங்களையும்  தாண்டி மனதில் இப்போது நிற்கிறது. ஆனால் இன்றைக்கு தேவையே இல்லாமல் போய்விட்ட ஒரு கையேடு என்பதையும் சொல்லியாக வேண்டுமே! ஏன்?

   
கல்வித்தந்தைகளுக்கே கையேடு/கைத்தடி தேவைப் படுகிற காலமாகி விட்டதே! அதனால்தான்!


கார்ட்டூனிஸ்ட் பாலா இந்த ANI செய்திநிறுவனத்தின் ஒரு குறுஞ்செய்தி மீது ஒரே ஒருவரிதான் தன் கருத்தாக சார் ...பெண்ணுரிமை போற்றும் திமுக சார் என்று எழுதியிருப்பதிலேயே முழுச் செய்தியும் புரிந்து விடுகிறதா இல்லையா? blogs, micro blogs,twitter, FB, என்று ஏகப்பட்ட சமூக வலைத்தளங்கள் நிறுவனப்படுத்தப்பட்ட செய்தி ஊடகங்களுக்கு இணையாக, ஏன், அவைகளைத் தாண்டியும் செய்திகளை வழங்குவதில் முன்னிலை வகிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது கடுமையான விமரிசனங்களை அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் வெறுப்போடு கக்கிக் கொண்டிருந்ததை சட்டை செய்யாமல் தன்னுடைய தரப்பை, பிரசாரத்தை twitter வழியாகவே ட்ரம்ப் நடத்தி ஜெயித்ததும் மிகச் சமீபகாலத்தைய நிகழ்வுதான்!

               

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் that கரடியே காறித்துப்பின moment காமெடியை வைத்து ஓரிரு வரிகளில் மாயவரத்தான் ரமேஷ் குமார் ஏதோ சொல்கிறாரே! புரிகிறது இல்லையா?

ஓர் நல்ல எழுத்தாளன் எழுதுவதோடு நின்று விடுவதில்லை! தேர்ந்த வாசகனையும் எழுத வைத்து விடுகிறான் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் இது !
      

மீண்டும் சந்திப்போம்!

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)